PDA

View Full Version : இலங்கை தமிழன்



muthuvel
13-12-2009, 08:02 AM
சொந்த வீட்டில் வாடகைக்கு வாழும் நிலை யும் ,

இவர்களுக்கு மட்டும் படி அளக்காமல் வஞ்சம் செய்த ஈசனும் . ,

ஒரு பண்ணையில் அடைக்கப்பட்ட கோழிகளும் ,

நடந்து நடந்து தேய்த்த பூமி தரையும் ,

மழை வந்தால் மட்டும் உடையோடு குளியலும் ,

உடைக்கு ஏங்கும் , கட்சி கொடியை பார்த்த ஆடையில்லா சிறுவனும் ,

தன் அறுவை சிகிச்சையை தானே பார்க்கும் அவலமும் ,


படைத்தவன், இருக்கும் இடத்திற்கே காதில் விழும் அவல குரலும்..........

,முகாம் என்ற பெயரில் கூண்டில் அடைக்கப்பட்ட சிறுவர்களும் ....

உண்ணுதலையும் , உறங்குதலையும்,கழிதலையும் ஒரே இடத்திலும் .........

பிஞ்சு கையில் , கஞ்சியை கொடுத்து , பசி போக்கும் வறுமையும் ...

கிருஷ்ணரை போல சிறையில் பிறகும் கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளும் ... .........

கண்டம் விட்டு கண்டம் பேசும் காலத்தில் ,
சைகையால் பேசி கொள்ளும் தாயும் மகனும் ....

இலங்கை தமிழன் ..........

rajesh2008
13-12-2009, 08:48 AM
மிருகங்கள் வேடிக்கை பார்க்கும் ஒரு மனிதக் காட்சி சாலையை கண்ணில் கொண்டு வந்த தீர்க்க வரிகள். தளைகள் அறுபடும் காலம் வெகு தொலைவில் இல்லை,அதுவரை இதே வெறி இருக்க பிரார்த்திக்கிறேன்.