PDA

View Full Version : வயிற்றுக்கும்...!



குணமதி
12-12-2009, 03:40 PM
வயிற்றுக்கும்...!



பேருந்து கிளம்பிய

கொஞ்ச நேரத்திலேயே...

பொறுத்துக் கொள்ள இயலாத

பேரிரைச்சல்!

திரைப் பாடலாம்...!


வழியில்-

உணவு கொள்ள நின்ற

உணவகத்தில்...

மட்டமான உணவு!


செவிக்கில்லாத போது

வயிற்றுக்கும்...!

அமரன்
12-12-2009, 08:33 PM
சில பயணங்கள்
இப்படியும் மறக்கவியலாதவை
ஆகிவிடுகின்றன..

கஷ்டம்தான்.

பாராட்டுகள்!

குணமதி
13-12-2009, 03:46 AM
சில பயணங்கள்
இப்படியும் மறக்கவியலாதவை
ஆகிவிடுகின்றன..

கஷ்டம்தான்.

பாராட்டுகள்!

நன்றி.

அக்னி
14-12-2009, 06:05 AM
நிரப்பினால் மட்டும் போதுமென
நினைப்பவர்களிடம்
சுவை கிட்டாது...
சுவைக்காவிட்டால்,
நிரம்பவும் செய்யாது...

இது அவர்களுக்கு எப்போ புரியுமோ...

aren
14-12-2009, 06:24 AM
தினமும் பஸ்ஸில் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்பவர்களுக்கு இது தினம்தினம் நடக்கும் பிரச்சனை.

எதுக்கு திரைப்படம் காட்டுகிறோம் என்று இத்தனை சத்தமாக வைத்து அனைவரையும் துன்புறுத்துக்றார்களோ தெரியவில்லை.

குணமதி
14-12-2009, 06:48 AM
நிரப்பினால் மட்டும் போதுமென
நினைப்பவர்களிடம்
சுவை கிட்டாது...
சுவைக்காவிட்டால்,
நிரம்பவும் செய்யாது...

இது அவர்களுக்கு எப்போ புரியுமோ...

நன்றி.

குணமதி
14-12-2009, 06:49 AM
தினமும் பஸ்ஸில் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்பவர்களுக்கு இது தினம்தினம் நடக்கும் பிரச்சனை.

எதுக்கு திரைப்படம் காட்டுகிறோம் என்று இத்தனை சத்தமாக வைத்து அனைவரையும் துன்புறுத்துக்றார்களோ தெரியவில்லை.

நன்றி.

கா.ரமேஷ்
14-12-2009, 07:45 AM
ஊர்செல்லும்போதெல்லாம் அனுபவிக்கும் ஒரு விசயத்தை அழகாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்..

குணமதி
14-12-2009, 05:09 PM
ஊர்செல்லும்போதெல்லாம் அனுபவிக்கும் ஒரு விசயத்தை அழகாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்..

நன்றி நண்பரே.

செல்வா
18-12-2009, 05:20 PM
பொறுத்துப் போவதே பெருமை என வழங்கும் தேசத்தில்
இதுவும் இருக்கும் இதற்கு மேலும் இருக்கும்...

தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்....

குணமதி
19-12-2009, 11:29 AM
பொறுத்துப் போவதே பெருமை என வழங்கும் தேசத்தில்
இதுவும் இருக்கும் இதற்கு மேலும் இருக்கும்...

தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்....

நன்றி.