PDA

View Full Version : லஞ்சம்



muthuvel
12-12-2009, 07:17 AM
நான் இறந்துவிட்டேன் ,
எனக்கு இறப்பு சான்றிதழ் கொடு ,
என்னிடம் பணம் இல்லை ,
எடுத்து கொள் என் நெற்றியில் உள்ள ஒற்றை நாணயம் ,
லஞ்சமாக ..
இப்படிக்கு ,
பிணம் ..

aren
12-12-2009, 08:11 AM
இறந்தவருக்கு எதுக்கு சான்றிதழ்.

muthuvel
12-12-2009, 08:21 AM
இறந்தவருக்கு எதுக்கு சான்றிதழ்.

பிறப்பு இறப்பு சான்றிதல் வேண்டும் அன்பரே , மேலும் , பிணத்துக்கும் லஞ்சம் கேட்பார்கள் என்பதை சொல்லிருக்கிறேன் , புரிதலுக்கு நன்றி

aren
12-12-2009, 08:24 AM
நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. நான் சொல்வதும் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இறந்தவர் சொத்து சேர்த்துவிட்டு போயிருந்தால் அந்த லஞ்சப்பணம் சான்றிதழ் கொடுப்பவருக்கு எளிதில் கிடைத்துவிடும். ஆனால் இறந்தவர் அனாதையாக இருந்தால் சான்றிதழ் வாங்குவது கடினம்தான்.

என்ன செய்வது, இதுதான் உலகம்.

richard
12-12-2009, 09:33 AM
நான் இறந்துவிட்டேன் ,
எனக்கு இறப்பு சான்றிதல் கொடு ,
என்னிடம் பணம் இல்லை ,
எடுத்து கொள் என் நெற்றியில் உள்ள ஒற்றை நாணயம் ,
லஞ்சமாக ..
இப்படிக்கு ,
பிணம் ..

கவிதைக்கு பொய்யழகு என்று கவிஞர் சொன்னது ,
பொதுவாகவே இறந்தவரிடம் யாரும் பணம் பெறுவது குறைவுதான்

muthuvel
12-12-2009, 02:31 PM
இறந்தவருக்கு எதுக்கு சான்றிதழ்.

அண்ணா , தங்கள் தொடர்பு நம் அன்பை பல படுத்தும் என்று நம்புகிறேன் ...

muthuvel
12-12-2009, 02:31 PM
கவிதைக்கு பொய்யழகு என்று கவிஞர் சொன்னது ,
பொதுவாகவே இறந்தவரிடம் யாரும் பணம் பெறுவது குறைவுதான்

அண்ணா , தங்கள் தொடர்பு நம் அன்பை பல படுத்தும் என்று நம்புகிறேன் ...

அமரன்
12-12-2009, 08:57 PM
லஞ்சக் கேவலர்களுக்கு இதை விட பலமான அடி கிடைக்குமா என்பது சந்தேகம்தான்!

பிணத்தின் பணத்தை களவாடும் கூட்டம் வாழும் உலகில் இப்படியும் சில கேவலப் பிறவிகள்.

நல்ல அடி!

பாராட்டுகள்.