PDA

View Full Version : சுவீஸ் வங்கி பணம்

muthuvel
12-12-2009, 07:12 AM
யாருக்கும் உபயோகமில்லை ,
சும்மாதான் உறங்குகிறோம் ,
சுவீஸ் வங்கி பணம் ...

aren
12-12-2009, 08:07 AM
ஏன் யாருக்கும் உபயோகமில்லை. சுவிஸ் வியாபாரிகள் அந்த பணத்தை வைத்துத்தானே உலகில் இருக்கும் பல நல்ல நிறுவனங்களை வாங்கினார்கள்.

நெஸ்ட்லே, சிபாவிஷன், யூனியன் பாங்க் ஆஃப் ஸ்விட்சர்லாந்து, கிரெடிட் சுவிஸ் போன்றவை இதில் அடங்கும்.

muthuvel
12-12-2009, 08:17 AM

அண்ணே , உங்க விமர்சனத்துக்கு நன்றி , நான் சொல்ல்வது கருப்பு பணம் , புரிதலுக்கு நன்றி ,

aren
12-12-2009, 08:20 AM
பணத்தை அங்கே முதலீடு செய்தவர்களுக்கு ஒன்றுமே திரும்பக்கிடைப்பதில்லை, ஆனால் அந்த வங்கிக்கும், சுவிஸ் நாட்டிற்கும், அந்த பணத்தினை லோனாகப் பெறும் வியாபார நிறுவனங்களுக்கும் அந்த முதலீட்டால் நன்மையே. அதைத்தான் நான் என்னுடைய விமர்சனத்தில் வெளிப்படுத்தினேன் நண்பரே.

muthuvel
12-12-2009, 08:24 AM

அண்ணா , நான் கற்பனை செய்து எழுதியது "கந்தசாமி " பட கதையை வைத்து , மேலும் ,உங்க அளவுக்கு எனக்கு சுவீஸ் வங்கி பற்றி தெரியாது ..நன்றி அண்ணா

aren
12-12-2009, 08:27 AM
நன்றி தேவையில்லை நண்பரே.

நம் மக்கள் சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் போடுகிறார்கள். ஆனால் அப்படி போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்றுகூட பலருக்குத் தெரிவதில்லை. ஆகையால் அந்தமாதிரி போட்ட பணத்தை எடுக்கமுடியாமல் சுவிஸ் அரசாங்கமும் வங்கிகளும் பணத்தை பகல் கொள்ளை அடிப்பதுபோல் அமிக்கிவிடுகின்றன. அதனால்தான் அவர்கள் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால் சொல்ல மறுக்கிறது, காரணம் உரிமை கொண்டாட பலர் வருவார்கள் என்பதால்.

நம் அரசியல்வாதிகள் ஏழைகளை சுரண்டி சம்பாதிப்பதை எதுவுமே செய்யாமல் சுவிஸ் வங்கிகள் அமுக்கிவிடுகின்றன. என்ன செய்வது.

muthuvel
12-12-2009, 08:29 AM

ஆம் , நன்றி அண்ணா , இந்த கருத்தை தான் நான் எளுதிருகிறேன் , ஏழை கலுகாவது உதவட்டும் என்று ..

muthuvel
12-12-2009, 08:45 AM
உழைப்பதாக காட்டிக்கொள்கிறேன் , அதில் என் சோம்பேரிதனம் வெளிப்பட்டது

நல்லவனாக காட்டிக்கொள்கிறேன், அதில் என் திய எண்ணம் வெளிப்பட்டது

திறமை உள்ளவனாக காட்டிக்கொள்கிறேன் , அதில் என் தில்லு முள்ளு வெளிப்பட்டது

அறிவுள்ளவனாக காட்டிக்கொள்கிறேன், அதில் என் முட்டாள்தனம் வெளிப்பட்டது

அன்புள்ளவனாக காட்டிக்கொள்கிறேன் அதில் என் போலித்தனம் வெளிப்பட்டது

பாசம் உள்ளவனாக காட்டிக்கொள்கிறேன், அதில் என் பாசாங்கு வெளிப்பட்டது

உதவி செய்பவனாக காட்டிக்கொள்கிறேன் ,அதில் என் சுயநலம் வெளிப்பட்டது

ஒரு பெண்ணை காதலிபதாக காட்டிக்கொள்கிறேன் ,அதில் என் காமம் வெளிப்பட்டது

உண்மையுள்ளவனாக காட்டிக்கொள்கிறேன், அதில் என் பொய் வெளிப்பட்டது

பொருள் கொடுபவனாக காட்டிக்கொள்கிறேன் ,அதில் என் விளம்பரம் வெளிப்பட்டது

தன்னம்பிக்கை உள்ளவனாக காட்டிக்கொள்கிறேன் ,அதில் என் பயம் வெளிப்பட்டது

தைரியம் உள்ளவனாக காட்டிக்கொள்கிறேன் ,அதில் என் கோழைத்தனம் வெளிப்பட்டது !

நன்றி உள்ளவனாக காட்டி கொள்கிறேன் , அதில் என் நாடகத்தனம் வெளிப்பட்டது !

muthuvel
12-12-2009, 08:48 AM
என்னிடம் பணம் இருந்தது அன்று ,

அந்த பணத்தால், நீனைத்தேன் ,, சந்தோசம் என்பது வெளியில் கிடைக்கும் என்று ,

அந்த பணம் காணமல் போனது நேற்று ,

துடித்தேன் ,தனியாக நின்று ,

காணாமல் போன அந்த பணம் கிடைத்தது இன்று ,

என் மனம் மகிழ்தேன் நன்று,

அறிந்தேன் ,சந்தோசம் என்பது நம் மனதில் தான் , வெளியில் அல்ல என்று ...

aren
12-12-2009, 08:51 AM
அப்ப என்னதான் செய்வது.

கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே!!!

என்கிறீர்களா?

aren
12-12-2009, 08:53 AM
என்னுடைய வங்கி தகவல்களை உங்களுக்கு அனுப்புகிறேன், நீங்கள் அந்த பணத்தை எனக்கு அனுப்பிவிடுங்கள். உங்களுக்குத்தான் பணம் வேண்டாமே. ஆனால் எனக்கு வேண்டும்.

muthuvel
12-12-2009, 08:53 AM
அப்ப என்னதான் செய்வது.

கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே!!!

என்கிறீர்களா?

மிக சரியாக புரிந்துகொண்டிர் அண்ணா ..

muthuvel
12-12-2009, 08:56 AM
என்னுடைய வங்கி தகவல்களை உங்களுக்கு அனுப்புகிறேன், நீங்கள் அந்த பணத்தை எனக்கு அனுப்பிவிடுங்கள். உங்களுக்குத்தான் பணம் வேண்டாமே. ஆனால் எனக்கு வேண்டும்.

அண்ணா , தயவு செய்து மன்னிக்கவும் ,என் தவறுதான் , நான்தான் உங்களை தவறாக புரிந்து கொள்ளும்படி எழுதிவிட்டேன் ...

aren
12-12-2009, 08:57 AM
நண்பரே, இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நான் விளையாட்டிற்காகத்தான் அப்படி எழுதினேன். என்னை மன்னிக்கவும்.

aren
12-12-2009, 08:58 AM
பலனை எதிர்பார்க்காமல் என்ன நடக்கிறது இப்பொழுதெல்லாம். நம்மை இளிச்சவாயன் என்று பச்சைகுத்தி விடுவார்களே. என்ன செய்வது.

richard
12-12-2009, 09:09 AM
இதுக்குத்தான் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்கனும் என்பது

richard
12-12-2009, 09:12 AM
என்னிடம் பணம் இருந்தது அன்று ,

துடித்தேன் ,தனியாக நின்று ,

...

தனிமையிலே இன்பம் கானமுடியுமா இது கவிஞர் குரல்
தனிமையை தவிருங்கள் எல்லாம் சரியாகும்

richard
12-12-2009, 09:21 AM
நன்றி தேவையில்லை நண்பரே.

நம் மக்கள் சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் போடுகிறார்கள். ஆனால் அப்படி போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்றுகூட பலருக்குத் தெரிவதில்லை. ஆகையால் அந்தமாதிரி போட்ட பணத்தை எடுக்கமுடியாமல் சுவிஸ் அரசாங்கமும் வங்கிகளும் பணத்தை பகல் கொள்ளை அடிப்பதுபோல் அமிக்கிவிடுகின்றன. அதனால்தான் அவர்கள் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால் சொல்ல மறுக்கிறது, காரணம் உரிமை கொண்டாட பலர் வருவார்கள் என்பதால்.

நம் அரசியல்வாதிகள் ஏழைகளை சுரண்டி சம்பாதிப்பதை எதுவுமே செய்யாமல் சுவிஸ் வங்கிகள் அமுக்கிவிடுகின்றன. என்ன செய்வது.

அதுதான் ஒன்னும் புரியல

muthuvel
13-12-2009, 12:45 AM
செடியில் ஆணவத்தோடு இருந்த ரோஜா ,
என்னவள் கூந்தலில் வாடியது ,
ரோஜாவை விட என்னவள் அழகு என்பதால் ...

muthuvel
13-12-2009, 04:07 AM
இடையில் வந்த எனக்காக ஓடிவிடலாம் என்கிறாயே ,
மறந்துவிட்டாயா உன்னை இடையில் சுமந்தவளை .....

rajesh2008
13-12-2009, 09:20 AM
உனக்காக ஓடி வருகிறேன் என்றவளிடம் இப்படி வசனம் பேசினால் நீ காதலிக்க ஏற்றவனில்லை தம்பி, இந்நேரத்துக்கு அவளுக்கு இடையில் ஒன்றை தந்திருக்கவேண்டாமா? இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்கிங்களேப்பு.

அமரன்
13-12-2009, 09:23 AM
முத்துக் கரும்பும் ராஜேஸ் குறும்பும் குறுநகை தருகின்றன

அமரன்
13-12-2009, 09:39 AM
நல்ல பூச்சுற்றல்.

நறுமணச் ஷாம்பூதான் ரோசாவின் சோர்வுக்குக் காரணம்.

நல்ல கற்பனை முத்துவேல்!

அளப்பரிய சொத்தை தந்தவர் பெயருடன் நீங்களும்..

richard
13-12-2009, 10:21 AM
உனக்காக ஓடி வருகிறேன் என்றவளிடம் இப்படி வசனம் பேசினால் நீ காதலிக்க ஏற்றவனில்லை தம்பி, இந்நேரத்துக்கு அவளுக்கு இடையில் ஒன்றை தந்திருக்கவேண்டாமா? இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்கிங்களேப்பு.

பாவம் பய புள்ள குறுக்குவழி எல்லாம் சொல்லி கொடுக்காதீங்க:)

muthuvel
13-12-2009, 10:34 AM
புள்ளியாய் பிரிந்தாலும் ,
நம்மை கோலமாக இணைக்கும்
E மெயில் ..

குணமதி
13-12-2009, 11:44 AM
அரிய கற்பனை.

muthuvel
13-12-2009, 03:18 PM
கட்டாய திருமணம் ,
கழுதைகளுக்கு ,
மழை வேண்டி......

muthuvel
13-12-2009, 03:18 PM
என்ன தவறு செய்தோம் ,
எதற்காக இந்த தண்டனை ,
சிறை கம்பிகள் ...

muthuvel
13-12-2009, 03:19 PM
உயிர் பணயம்,
மீனவ பயணம் ,
கடலில்...

muthuvel
13-12-2009, 03:20 PM
இறப்பு விண்ணிலே ,
புகழ் மண்ணிலே ,
கல்பனா சாவ்லா

muthuvel
13-12-2009, 03:23 PM
"தொடாதே அபாயம் "
மின்சாரமும் ,
தங்கமும் "

muthuvel
13-12-2009, 03:28 PM
மேஜைக்கு மேலே வேலை செய்ய ,
மேஜைக்கு கீழே விலை ,

muthuvel
13-12-2009, 03:30 PM
வானம் விதவையானது மேகங்களால்,
பூமியில் மழை.........

muthuvel
13-12-2009, 03:31 PM
உயிருள்ள பிணம் ,
சின்ன திரை ரசிக்கும் ,
இல்லத்தரசிகள் .......

நூர்
13-12-2009, 04:55 PM
இரண்டு வரியில் பல தத்துவங்களை சொல்லி வருகிறீர்கள்,வாழ்த்துக்கள்! தொடருங்கள்.

இதை எல்லாம் ஒரே திரியில் தொகுத்து தரலாமே!

muthuvel
14-12-2009, 12:51 AM
வீதியை தெளித்தாய் ,
கோலம் போடுவது யார் ?
மழையில் நனைந்த வீதி ...

muthuvel
14-12-2009, 12:52 AM
இருப்பவன் இன்னும் இன்னும் திருடுகிறான் ,
இல்லாதவன் இருப்பதய் எல்லாம் திருடுகிறான் ,

muthuvel
14-12-2009, 12:54 AM
கசங்கிய நிலையில் புடவை ,
என்னையுமா விட்டுவைப்பதில்லை ,
காமகொடுரர்கள் ,
கண்களில் ,
ஜவுளி கடை பொம்மை ....

muthuvel
14-12-2009, 12:54 AM
பிரிந்திருந்த சொந்தங்கள் ஒன்று கூடினர்,(மேகங்கள்)
உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை ,
கண்களில் கண்ணிற் மழை ..