PDA

View Full Version : நட்பு -ரத்து



இளசு
12-10-2003, 01:52 PM
நட்பு -ரத்து


என் ப்ரிய சகீ

தாய் கொடுத்த பாலைவிட
பாசத்தை ரசித்தேன்

மதிப்பெண் தரும் பாடங்களைவிட
துணைப்பாடத்தை ரசித்தேன்

நண்பர்களின் பாராட்டைவிட
தூண்டலை ரசித்தேன்

துள்ளும் பெண்ணின் எழில்களை விட
விழிகளை ரசித்தேன்

பணி தரும் பணத்தை விட
கொடுப்பதை ரசித்தேன்

உன் முகம் வடிக்கும் அழகைவிட
இதயத்தை ரசித்தேன்

நட்பு -ரத்து செய்தவளே

நீ விலக்கிய வலியை மீறி
உன் கர்வத்தை ரசித்தேன்
வடியும் ரத்தத்தை ருசித்தேன்

******
இப்படிக்கு,
உன் பார்வையில் முன்னாள் சிநேகிதன்
என்னைப்பொருத்தவரை எந்நாளும் சிநேகிதன்

முத்து
12-10-2003, 02:02 PM
இளசு அண்ணா ...
நல்ல கவிதை ..
புதிய கருத்து - நட்பு ரத்து
அந்த நாள் ஞாபகமோ ... :D

மீனலோஷனி
12-10-2003, 02:05 PM
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

அருமையான கவிதை இளசு அண்ணா

அசன் பசர்
12-10-2003, 02:22 PM
காதல் என்றும் நம்மை ஒரேயடியாக
காலிப்பண்ணாது என்பதை
சுகமாய் சொல்லியிருக்கிறீர்கள்
இளசு அண்ணா
நான் இப்படி எழுதினேன்
*
உன்னை
காதலித்த குற்றத்திற்கு
எனக்கு
மரணதண்டனை
கொடுத்திருந்தால் கூட
மனமாற ஏற்றிருப்பேன்
ஆயுள் தண்டனை கொடுத்து
காலமெல்லாம்
அழவைத்துவிட்டாயே...

முத்து
12-10-2003, 02:28 PM
அழகான கவிதை .... அசன்பசர் அவர்களே ..
நன்றி மற்றும் பாராட்டுக்கள் ...

karavai paranee
12-10-2003, 03:34 PM
விமர்சனப்புயல் இளசு அண்ணாவின் மனதிலும் ரத்தான காதலோ !

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

முத்து
12-10-2003, 03:48 PM
விமர்சனப்புயல் இளசு அண்ணாவின் மனதிலும் ரத்தான காதலோ !
அருமையான கவிதை வாழ்த்துக்கள்

கரவை பரணிவுக்கு கொடுத்திருக்கும் புதுப் பட்டமா ..?:D ..
இதைவிட " பாராட்டும்தென்றல் " என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும் ... :wink:

Nanban
13-10-2003, 07:24 AM
நட்பு ரத்து - விவாக ரத்து போலவா?

நல்ல மாறுதலான கண்ணோட்டம். எல்லோரும் காதல் தோல்வியில் துவண்டு போய்க் கிடக்க, இளசுவிற்கு மட்டும், அது நட்பு-ரத்து. இதைத் தான் பாஸிட்டீவ் அணுகுமுறை என்பதா?

நல்ல கவிதை, மென்மேலும் எழுதிக் கொண்டே இருங்கள்,

gankrish
14-10-2003, 07:15 AM
புதிய நடையில் ஒரு நல்ல கவிதை இளசு.
அசன்பசர் உங்கள் கவிதையும் நன்றாக இருக்கு.
அனுபவத்தவர்கள் எழுதுகிறார்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
14-10-2003, 08:06 AM
அற்புதம் இளசு அவர்களே. உணர்ந்து அழகாய் வடித்திருக்கிறீர்கள். முற்போக்கான சிந்தனையும் கூட. வாழ்த்துக்கள்.

இக்பால்
14-10-2003, 12:19 PM
கவிதைகள் தொடரும் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

நன்றாக இருக்கிறது.-அன்புடன் இளவல்.

chezhian
14-10-2003, 03:17 PM
எந்த வலியும் வலிமையான கவிதை எங்கள் இளசுக்கு

nalayiny
14-10-2003, 10:03 PM
மனசுஏதோ ஒன்றிற்காக ஏங்கிறபோது அல்லது உருகிறபோது தான் அழகான கவிதைகள் உருவாகிறது. பாராட்டுக்கள் இளசு அவர்களுக்கு

அசன் பசர் நன்றாக அனுபவித்து உணர்வுகளை குவித்து எழுதி உள்ளார் பாராட்டுக்கள்.
உன்னை
காதலித்த குற்றத்திற்கு
எனக்கு
மரணதண்டனை
கொடுத்திருந்தால் கூட
மனமாற ஏற்றிருப்பேன்
ஆயுள் தண்டனை கொடுத்து
காலமெல்லாம்
அழவைத்துவிட்டாயே...

Hayath
16-10-2003, 12:36 PM
நட்பு - ரத்து....நான் சந்தித்த ஒன்றுதான் என்றாலும் இளசு அவர்கள் போல என்னால் கவிதையில் சொல்ல முடியவில்லை.நன்றாக உள்ளது கவிதை. பாராட்டுகள்.

Narathar
16-10-2003, 12:39 PM
அவள் நட்பை ரத்தாக்க என்ன ரவுசு செய்தீர்கள்?

இளசு
08-11-2003, 09:17 PM
இக்கவிதை(?)க்கு கருத்து சொன்ன

இன்பத்தம்பி முத்து
அன்புத்தங்கை மீனலோஷனி
கவி இளவல் கரவை பரணி
நான் ஆட்பட்டுக்கிடக்கும் நண்பன்
இனிய நண்பன் கான்கிரீஷ்
அன்பின் இ.த.செ.
மன்ற வளர்ச்சியில் மகத்தான பணி ஆற்றும் இளவல் இக்பால்
என் இனிய நண்பன் செழியன்
பூக்களைப் பேசவைத்த கவிஞர் நளாயினி
என் அன்பிற்கு என்றும் உரிய ஹ�மாயூன்
அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்...

அருமையான கவிதை தந்த
கவி இளவல் அசன் பசருக்குசிறப்புப் பாராட்டுகள்..


அவள் நட்பை ரத்தாக்க என்ன ரவுசு செய்தீர்கள்?

நண்பர் நாரதரே
உங்கள் கேள்விக்கு பதில்..

http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=31838#31838

சரியான தொடுப்பு பின்னர்....அமரன்

அலை...
08-11-2003, 10:06 PM
மு.கு.
பொறுமையில்லாதவர்கள் வண்ண வரிகளை தவிர்த்து படிக்கவும்

நட்பு-ரத்து...

நீ இந்த நொடியில் என்ன நினைத்து கொண்டிருப்பாய் என்பது
சென்ற நொடியிலேயே தெரியும் எனக்கு...
உன் கொலுசு இசையில் சின்ன தாளம்
தப்பினாலும் தவறாமல் தெரியும்..
உன் தாவணியின் நுனியில் லேசாக
சாயம் போனதன் காரணம் தெரியும்...
உன் தொண்டை குழியில் உருளும்
வார்த்தைகள் எனக்கு மனப்பாடம்..

உன்னை, உன்னை விட அதிகமாக
அறிந்தவன் நான் என்று இறுமாந்திருந்தேன்..
மெல்ல மெல்ல நான் நீயாகிக்கொண்டிருக்கும் போது- நீ
மெல்ல மெல்ல யாரோவாகி என்னை விலக்கினாய்..

இப்போதுதானடி புரிகிறது
"என்னை எனக்கே பிடிக்காது" என்று நீ
அடிக்கடி சொல்வதின் அர்த்தம்...


அன்புடன்
அலை...

(இளசு...உங்கள் கவிதையின் தாக்கத்தில் இந்த கவிதை(?))

நிலா
08-11-2003, 10:16 PM
நட்பு -ரத்து வலியின் வெளிப்பாடு!



உன் பார்வையில் முன்னாள் சிநேகிதன்
என்னைப்பொருத்தவரை எந்நாளும் சிநேகிதன்



தொலைத்தாலும் இங்க தான் எங்கயாவது இருக்குமென்ற நம்பிக்கையின் வெளிப்பாடு இந்த வரிகள்!


நண்பர் அலையின் கவிதை அருமை!பாராட்டுகள்!

முத்து
08-11-2003, 10:21 PM
அலை அருமையான கவிதை ... நன்றிகள் ..

இளசு
08-11-2003, 11:30 PM
அன்பு நண்பன் அலையே...
எந்த வரியை மேற்கோள் காட்ட
என்று என்னை அலைபாய வைத்துவிட்டது
உங்கள் நிஜக் கவிதை...
அத்தனை வரிகளும் அருமை...

என் மனமார்ந்த பாராட்டுகள்...

உங்கள் படைப்பில் "உண்மை"யான வலியை உணரமுடிகிறது...


நிலாவின் விமர்சனம் மிக அருமை. நன்றி நிலா.

அலை...
09-11-2003, 12:41 AM
நன்றி இளசு...
(நிஜமான வலி தான் என்று கண்டு பிடித்துவிட்டீர்கள்)

கவி நிலாவுக்கும் மிக்க நன்றி..

அலை...

இக்பால்
09-11-2003, 07:13 AM
உன் பார்வையில் முன்னாள் சிநேகிதன்
என்னைப்பொருத்தவரை எந்நாளும் சிநேகிதன்


இந்த வரிகள் எங்கே வருகிறது நிலாத்தங்கை?

அமரன்
02-06-2008, 07:25 PM
நல்ல கவிதை அண்ணா. அழுது புலம்பும் கவிதைகளுக்கு நடுவில், சிரிக்கும் கவிதைகள் வெகு சிலவே. அந்தச் சிரிப்பின் போது உதட்டோரம் கசியும் வலி உயிரை உலுக்கும். இந்த கவிதையை வாசிக்கும்போது மோனாலிஸா ஓவியம் நினைவுக்கு வருகிறது.

முன்னாளுக்குக் காரணம்
இந்நாளாக இருக்கலாம் அல்லவா?
எல்லா ஆண்களும்
ஒரே மாதிரி இருப்பதில்லையே?


யான் பெற்ற இன்பம் பெறுக இம்மன்றம்..

பூமகள்
03-06-2008, 02:41 PM
மதிப்பெண் தரும் பாடங்களைவிட
துணைப்பாடத்தை ரசித்தேன்

நண்பர்களின் பாராட்டைவிட
தூண்டலை ரசித்தேன்
இந்த வரிகள் அப்படியே என் பற்றியது போலவே இருக்கிறது பெரியண்ணா..!

ஓருள்ள விருப்பம்..
ஓய்ந்து போன
நினைவுகளில்...
சோகமான சந்தோசத்தை
இறக்கி வைக்க தவறுவதில்லை...

நிஜப் பாசம்..
வில(க்)கிய பின்(னும்)
வாழ்த்துவது தான்..!!

-----------------------------------
பிளாக் அண்ட் வையிட் ஃப்ளேஸ்பேக்குக்கு போயிட்டீங்களா பெரியண்ணா???!! ;) உண்மையெனில்.. கொடுத்து வைக்காத மகராசிக்கு அனுதாபங்கள்...

வலி சொல்லும் கவிதைகளிலிருந்து மாறுபட்டு... சோகத்திலிருந்து மீள
வழி சொல்லும் கவிதை...

அண்ணலுக்கு எனது அன்பு வந்தனங்கள் மற்றும் பாராட்டுகள். :)

அமரன்
03-06-2008, 06:42 PM
பிளாக் அண்ட் வையிட் ஃப்ளேஸ்பேக்குக்கு போயிட்டீங்களா பெரியண்ணா???!! ;) உண்மையெனில்.. கொடுத்து வைக்காத மகராசிக்கு அனுதாபங்கள்...


வன்மையான கண்டனங்கள்..:cool:

பூமகள்
04-06-2008, 06:51 AM
வன்மையான கண்டனங்கள்..:cool:
இந்த கால ட்ரெண்ட் தெரியாம இருக்கீங்களே அமரன் அண்ணா...;)
பருத்திவீரன் முதல்.. பல படங்களில்.. ஃப்ளேஸ் பேக் ப்ளேக் அண்ட் வயிட்டா தானே காட்டுறாங்க??!!:p:cool:

அதுக்காக.. எங்க பெரியண்ணா வயசானவர்னு சொன்னதா அர்த்தமா??!!:eek::eek:

ஹீ ஹீ....:D அவரு என்னிக்குமே.. இளமையோடு இருக்கும் இளசு(காரணப் பெயர்..:rolleyes::icon_rollout:) தான்..!! ;) :icon_b::icon_b: