PDA

View Full Version : முத்துவேலின் குறும்பாக்கள்.muthuvel
10-12-2009, 03:55 PM
ஜா"தீ"

எரிகின்ற சாதி தீயில் எண்ணெய் களாக
அரசியல் தலைவர்கள் ................

muthuvel
10-12-2009, 03:59 PM
மதி மட்டும் அல்ல,
மதிய உணவும் கொடுப்பது மாநகராட்சி பள்ளி ...

muthuvel
10-12-2009, 04:00 PM
ஏற்றமும் ,இறக்கமும் ,
பங்கு சந்தையில் மட்டும் அல்ல ,
நம் வாழ்விலும்தான் .......

muthuvel
10-12-2009, 04:03 PM
ஒன்றை ஒன்று ஒப்பிடாமல் இருப்பது,
மலர்களுக்கு மட்டும் அல்ல,
மனிதர்களுக்கும் தான் .........

சரண்யா
11-12-2009, 03:14 AM
கவிதைக்கு தலைப்பு இடுங்கள்..
படிப்பவருக்கும் ஆர்வம் அதிகமாகும்..
வாழ்த்துகள்..

சரண்யா
11-12-2009, 03:16 AM
ஆம் இரண்டுமே தெரியாத புதிர்கள்...
வாழ்த்துகள்...தலைப்பு கொடுங்கள்...

பிழைத்திருத்தி கொள்ளுங்கள்...இறக்கமும்

கா.ரமேஷ்
11-12-2009, 03:16 AM
அருமை...

குணமதி
11-12-2009, 03:41 AM
எரிகின்ற சாதித் தீயில் எண்ணெயாக
அரசியல் தலைவர்கள் ................

நட்டில் நடக்கும் உண்மை.

பாராட்டு.

muthuvel
11-12-2009, 07:14 AM
நன்றி சகோதரி

muthuvel
11-12-2009, 08:28 AM
விவசாயம்,
நேற்று ,விளைநிலங்கள் ,
இன்று , அவை விலை நிலங்கள் ,
நாளை ?

muthuvel
11-12-2009, 08:34 AM
ஆம் இரண்டுமே தெரியாத புதிர்கள்...
வாழ்த்துகள்...தலைப்பு கொடுங்கள்...

பிழைத்திருத்தி கொள்ளுங்கள்...இறக்கமும்

நன்றி சகோதரி

muthuvel
11-12-2009, 08:47 AM
நான் பிறரை கேலி செய்தபோது ,
என் வீட்டு முக கண்ணாடி
என் நை பார்த்து கேலி செய்தது ,
என் புறமும் , அகமும் கண்டு ............

richard
11-12-2009, 08:55 AM
பள்ளியில் சேர என் தந்தையின் உழைப்பை அடகு வைத்தேன் !

கல்லூரியில் சேர இட ஒதிக்கீடு என்னும் சாதியை அடகு வைத்தேன் !,

வேலையில் சேர சிபாரிசை அடகு வைத்தேன் !

இன்று எனக்கு திருமணம், வரதட்சணை என்ற பெயரில் என்னையே அடகு வைத்தேன் .....

சரி விடுங்க என்ன பன்றது சீக்கிரமா அடகு வச்சித மீட்க பாருங்க

richard
11-12-2009, 08:59 AM
ஏற்றமும் ,இறக்கமும் ,
பங்கு சந்தையில் மட்டும் அல்ல ,
நம் வாழ்விலும்தான் .......

சில சமயம் பங்குசந்தையில் போட்ட முதலே போயிடும், வாழ்க்கையில் அப்படி போவதில்லை சிறிய கஷ்டங்கள் தலை விரித்தாடும் அவ்வளவுதான் டேக்கிட் ஈசி

richard
11-12-2009, 09:01 AM
விவசாயம்,
நேற்று ,விளைநிலங்கள் ,
இன்று , அவை விலை நிலங்கள் ,
நாளை ?

நாளை மற்றொருவருடையது ஆகிவிடும் டேக்கிட் ஈசி

richard
11-12-2009, 09:06 AM
ஒன்றை ஒன்று ஒப்பிடாமல் இருப்பது,
மலர்களுக்கு மட்டும் அல்ல,
மனிதர்களுக்கும் தான் .........

என்ன செய்வது மனிதன் மற்றவர்களை ஒப்பிட்டு பழகிவிட்டான்
மற்றவர்களை ஒப்பிடுவதில் வாழ நினைக்கிறான் இப்படி மனிதன் மற்றவர்களை ஒப்பிடுவதால மனிதன் முடிவே இல்லாதா வாழ்வை அடைகிறான்

muthuvel
11-12-2009, 10:38 AM
விழிப்புணர்வு என்னும்
தடு புசியால் தடுக்க படவேண்டும்
சாதி வெறி என்னும் தொற்று நோய் ...

muthuvel
11-12-2009, 10:41 AM
கடல் நீர் உப்பானது ,
மீனவனின்
வியர்வைத்துளி பட்டு ......

muthuvel
11-12-2009, 10:48 AM
ஓய்வுதியம் ,
என் மகன் என் கையில் கொடுத்த
அவனது முதல் மாத சம்பளம் ...

muthuvel
11-12-2009, 11:06 AM
கவிதைக்கு தலைப்பு இடுங்கள்..
படிப்பவருக்கும் ஆர்வம் அதிகமாகும்..
வாழ்த்துகள்..

நண்பர்களை அதிகபடுதுவது எப்படி ?
என் கவிதைகளை எங்கு நான் பார்க்கமுடியும் ...

muthuvel
11-12-2009, 11:06 AM
அருமை...

நண்பர்களை அதிகபடுதுவது எப்படி ?
என் கவிதைகளை எங்கு நான் பார்க்கமுடியும் ...

ஆதி
11-12-2009, 11:14 AM
நண்பர்களை அதிகபடுதுவது எப்படி ?
என் கவிதைகளை எங்கு நான் பார்க்கமுடியும் ...


நண்பர்களை அதிகபடுதுவது எப்படி ?
என் கவிதைகளை எங்கு நான் பார்க்கமுடியும் ...

ஒரே பதிவை திரும்ப திரும்ப பதிய வேண்டாம் தோழரே..

கடை விரித்திருக்கும்
கவிதைகளை உறவுகள்
கவனியாமல் இல்லை..
படை எடுத்து வந்து
பின்னூடம் இடுவார்கள் பொறுத்திருங்கள்..

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=48

இங்கே உங்கள் கவிதைகளை காணலாம்..

சில கவிதைகளை நீங்கள் மீண்டும் மீண்டும் பதிந்தீர்கள்.. அவை தேவையற்ற பதிவுகள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுவிட்டன.. அவற்றை உங்களால் காண முடியாது.. தேடவேண்டாம்.. இனி பதியும் கவிதைகளை மேலே நான் கொடுத்துள்ள சுட்டியில் சரியான பகுதியில் பதியவும்.. நன்றி..

அன்புரசிகன்
11-12-2009, 11:24 AM
முத்துவேல் அவர்களுக்கு...

உங்களின் குறும்பாக்களை இதே திரியில் தொடரவும்.

புரிதலுக்கு நன்றிகள்.

richard
11-12-2009, 11:55 AM
கடல் நீர் உப்பானது ,
மீனவனின்
வியர்வைத்துளி பட்டு ......

மனம் எனோ நம்ப மறுக்கிறது

muthuvel
11-12-2009, 03:20 PM
என்னிடம் வேண்டாதிர்கள் என்னையே திருடுகிறார்கள்
சாமி சிலைகள் ...

muthuvel
11-12-2009, 03:23 PM
ஊரில் எல்லோரிடமும் வளைந்துதான் செல்கிறேன் ,
ஆனாலும் ,பயபுடுகிறார்கள் ,
பாம்புகள் ...

muthuvel
11-12-2009, 03:24 PM
மலரும் முன்பே மடிந்துவிட்டன
மொட்டுக்கள் ...

muthuvel
11-12-2009, 03:27 PM
பெற்றும் நிலைக்கவில்லை (இதயம்) அவள் உயிர்,
பிறருக்கு கொடுத்ததால் நிலைத்தது வரலாற்றில் அவள் பெயர் ..

muthuvel
11-12-2009, 03:33 PM
காக்கைகளின் கழிப்பிடம்,
சாதி கலவரத்தின் பிறப்பிடம் ,
தலைவர்கள் சிலை ...

குணமதி
11-12-2009, 03:36 PM
என்னிடம் வேண்டாதீர்கள்
என்னையே திருடுகிறார்கள்!
சாமி சிலைகள் ...

இது ஐகூ (துளிப்பா) போல இருக்கிறதே!

பாராட்டும் நன்றியும்.

குணமதி
11-12-2009, 03:39 PM
ஊரில் எல்லோரிடமும் வளைந்துதான் செல்கிறேன்
ஆனாலும் பயப்படுகிறார்கள்!
பாம்புகள் ...

நன்றாக இருக்கிறது.

muthuvel
11-12-2009, 04:05 PM
இது ஐகூ (துளிப்பா) போல இருக்கிறதே!

பாராட்டும் நன்றியும்.

சகோதரி நன்றி,
சாகூ என்றால் என்ன ?
தாங்கள் யார் என்று நான் தெரிதுகொள்ளலாமா ?

muthuvel
11-12-2009, 04:18 PM
மாநகர பள்ளி மாணவன் மாவட்ட ஆட்சியராக,
MATRICULATION பள்ளி மாணவன் MELBOURNENIL (AUSTRALIA) அடி வாங்குபவனாக ,
இன்றைய நிலை .......

muthuvel
11-12-2009, 04:19 PM
நன்றி கடன் ,
அடுத்த பிறவியில்
எனக்கு மகளாக என் தாய்.......

அறிஞர்
11-12-2009, 08:37 PM
செய்தி போன்ற வரிகள்....
எங்கு படிக்கிறோம் என்பதை எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம்.
---------
கவிதை நடையில் எழுத முயற்சியுங்கள்.

muthuvel
12-12-2009, 12:59 AM
சரி,
கரையில் காதலர்கள் கொஞ்சுகிறார்கள் ,
திரும்பிவிடலாம் ...

aren
12-12-2009, 01:48 AM
நல்ல கவிதை நண்பரே.

பாவம், இதயம் கிடைத்தும் அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது.

aren
12-12-2009, 01:51 AM
காதலர்களை பிரிக்க நினைக்காத ஒரே ஜீவன் இந்த அலைகளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நல்ல சிந்தனை. தொடருங்கள்.

aren
12-12-2009, 01:53 AM
இதைத்தானே ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். அந்தத்தாயும் அப்படி நினைத்துத்தான் இன்னொருத்திக்கு மகளாகப் பிறந்தாளோ?

குணமதி
12-12-2009, 03:57 AM
நன்றிக் கடன் ,
அடுத்த பிறவியில்
எனக்கு மகளாக என் தாய்.......

பாசப் பரிமாற்றம்.

muthuvel
12-12-2009, 07:08 AM
படைத்தவன் எங்கள் உடலையும் ,
பாரினில் உள்ளோர் எங்கள் உள்ளதையும் ,
காயபடுதுகிறார்கள் ,
திருநங்கைகள் ... ....

muthuvel
12-12-2009, 07:10 AM
நாளை வெயிலில்,
வெளியே செல்ல வேண்டும் ,
ஆகையால்,
இன்று , இரவில்,
ஓய்வு எடுத்து கொள்கிறேன் ,
என் நிழல்கள் ...

praveen
12-12-2009, 07:51 AM
இப்படி நாலு வரிக்கு ஒரு திரி ஆரம்பிப்பதற்கு பதில் ஒரே திரியில் தரலாமே அன்பரே.

கண்ணபிரானை ஏன் இதில் இழுத்தீர்கள் என்று தெரியவில்லை. இருவரியில் திருநங்கையின் வலியை சொல்லி விட்டீர்கள். ஆனால் எல்லோரும் இதனால் சிரமப்படுவதில்லை. தற்போது சிலர் சிறப்பாகத்தான் உள்ளார்கள்.

aren
12-12-2009, 08:08 AM
குறுங்கவிதைகள் அனைத்தையும் ஒரு திரியிலேயே வைத்திடுங்கள். படிக்க வசதியாக இருக்கும்

aren
12-12-2009, 08:13 AM
வாவ் என்று சொல்ல வைக்கிறது இந்தக் கவிதை. அதனால்தான் அவை தினமும் இரவில் ஓய்வெடுத்துக்கொள்கின்றனவா? நாம் போகும் இடத்திற்கெல்லாம் எதுவுமே சொல்லாமல் வருகிறதே.

aren
12-12-2009, 08:17 AM
மெல்போர்னில் படிப்பதைமட்டும் கவனித்தால் அவன் எதற்கு அடி வாங்குகிறான். அங்கே இருக்கும் இரவுவிடுதிகளில் கும்மாளம்போட்டால் இந்தமாதிரி பிரச்சனைகள் வருகிறது.

மாணவர்கள் விடுதி, படிக்கும் இடம் இதை மட்டுமே கவனித்தில்கொண்டால் இந்த பிரச்சனை வருவதற்கு சாத்தியங்கள் குறைவு.

aren
12-12-2009, 08:18 AM
வெறுமனே வளைந்துசென்றால் பிரச்சனையில்லையே, வளைந்துகொண்டு செல்லும்பொழுது சீரிக்கொண்டே செல்வதனாலேயே இந்தப் பிரச்சனை.

muthuvel
12-12-2009, 08:27 AM
இப்படி நாலு வரிக்கு ஒரு திரி ஆரம்பிப்பதற்கு பதில் ஒரே திரியில் தரலாமே அன்பரே.

கண்ணபிரானை ஏன் இதில் இழுத்தீர்கள் என்று தெரியவில்லை. இருவரியில் திருநங்கையின் வலியை சொல்லி விட்டீர்கள். ஆனால் எல்லோரும் இதனால் சிரமப்படுவதில்லை. தற்போது சிலர் சிறப்பாகத்தான் உள்ளார்கள்.

பிழைக்கு மன்னிக்கவும் , அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம் , ஆனால் , ஒரு சிலரை மற்றவர்கள் கேலி செய்வதை , அவர்களின் மன வலி பற்றி எழுதினேன் ,பிழை இருந்தால் மன்னிக்கவும் அண்ணா...யார் மனதையும் புன்படுதிருந்தால் ...

richard
12-12-2009, 09:31 AM
படைத்தவன் எங்கள் உடலையும் ,
பாரினில் உள்ளோர் எங்கள் உள்ளதையும் ,
காயபடுதுகிறார்கள் ,
திருநங்கைகள் ... ....
அது அது அவரவர்கள் வாங்கி வந்த வரம்,ஒருவன் ராஜா வாகிறான் ஒருவன் பிச்சைக்காரன் ஆகிறான் யார் குற்றம்,

richard
12-12-2009, 09:37 AM
ஊரில் எல்லோரிடமும் வளைந்துதான் செல்கிறேன் ,
ஆனாலும் ,பயபுடுகிறார்கள் ,
பாம்புகள் ...

லேபில் அப்படி, ஒருவன் திருடனாய் இருந்து நல்லவன் போல் நடித்தாலும் அவனை மக்கள் நம்புவது இல்லை இது இயற்க்கை

richard
12-12-2009, 09:40 AM
மாநகர பள்ளி மாணவன் மாவட்ட ஆட்சியராக,
MATRICULATION பள்ளி மாணவன் MELBOURNENIL (AUSTRALIA) அடி வாங்குபவனாக ,
இன்றைய நிலை .......

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா என்று
யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே

muthuvel
12-12-2009, 12:53 PM
இன்றைய மருமகள்,
பிறந்தவீடு தமிழ் நாடு ,
புகுந்த வீடு கேரளா ,
அரிசி கடத்தல் .....

muthuvel
12-12-2009, 01:10 PM
ஐயோ ,
அவன் பார்துவிட்டானே என்ன செய்ய ,
மீனவனை கண்டு மீனும் ,
இலங்கை கடற்படையை கண்டு தமிழக மீனவனும் ...

muthuvel
12-12-2009, 01:59 PM
பாசப் பரிமாற்றம்.

தாங்கள் யார் ?
எங்கிருந்து எழுதுகிறிர்கள் ?
என்ன வேலை செய்கிறிர்கள் ?
தயவு செய்து கூறவும் ...

muthuvel
12-12-2009, 02:01 PM
முத்துவேல் அவர்களுக்கு...

உங்களின் குறும்பாக்களை இதே திரியில் தொடரவும்.

புரிதலுக்கு நன்றிகள்.

தாங்கள் யார் ?
எங்கிருந்து எழுதுகிறிர்கள் ?
என்ன வேலை செய்கிறிர்கள் ?
தயவு செய்து கூறவும் ...

அன்புரசிகன்
12-12-2009, 02:07 PM
தாங்கள் யார் ?
எங்கிருந்து எழுதுகிறிர்கள் ?
என்ன வேலை செய்கிறிர்கள் ?
தயவு செய்து கூறவும் ...


அன்புரசிகன்
கதிரையிலிருந்து
தமிழ்மன்றத்தில் - பொறுப்பாளர்.
கூறியாச்சு...

muthuvel
12-12-2009, 02:12 PM
அன்புரசிகன்
கதிரையிலிருந்து
தமிழ்மன்றத்தில் - பொறுப்பாளர்.
கூறியாச்சு...

தகவலுக்கு நன்றி ,

muthuvel
12-12-2009, 02:15 PM
இப்படி நாலு வரிக்கு ஒரு திரி ஆரம்பிப்பதற்கு பதில் ஒரே திரியில் தரலாமே அன்பரே.

கண்ணபிரானை ஏன் இதில் இழுத்தீர்கள் என்று தெரியவில்லை. இருவரியில் திருநங்கையின் வலியை சொல்லி விட்டீர்கள். ஆனால் எல்லோரும் இதனால் சிரமப்படுவதில்லை. தற்போது சிலர் சிறப்பாகத்தான் உள்ளார்கள்.

மதிப்பிற்குரிய அண்ணா ,
தாங்கள் யார் ?
என்ன செய்கிறிர்கள் ?

muthuvel
12-12-2009, 04:03 PM
உனக்காக தேய்ந்த பிறகு ,
எதற்காக என்னை தூர
எறிகிறாய் ,
செருப்புகள் ...

muthuvel
12-12-2009, 04:04 PM
சட்ட விரோதமாக நுளைதாலும் ,
கைது செய்ய முடியவில்லை ,

muthuvel
12-12-2009, 04:07 PM
ஆண்டு முழுவதும் தீபாவளி ,
போனசாக அப்பாவி உயிர்கள் ,

muthuvel
12-12-2009, 04:09 PM
எனக்கு கண்கள் இல்லை பரிதாப படுகிறார்கள்,
அவனுக்கு இதயமே இல்லை , ஆனால் ,பயபுடுகிறார்கள் ,

muthuvel
12-12-2009, 04:10 PM
என் அருமை தம்பி ,
தாய் பாலை பங்கிட்டா குடித்தோம் ,
பாகத்தை மட்டும் பிரித்து கேட்கிறாய் ...

muthuvel
12-12-2009, 04:11 PM
தெய்வங்கள் ஒன்றுகூடி ,
பகிர்ந்து கொண்டன
தன் அனுபவத்தை ,
முதியோர் இல்லம் ....

குணமதி
12-12-2009, 04:18 PM
தெய்வங்கள் ஒன்று கூடி ,
பகிர்ந்து கொண்டன
தம் அனுபவங்களை!
முதியோர் இல்லம் ....

நன்று.

பாராட்டு.

பதிவை வெளியிடும் முன் ஒருமுறை திரும்பவும் படித்துப் பார்த்தால்,
பிழைகளைத் தவிர்க்கலாம் என்று அன்போடும் பட்டறிவோடும் கூறுகிறேன்.

நன்றி.

richard
12-12-2009, 05:39 PM
உனக்காக தேய்ந்த பிறகு ,
எதற்காக என்னை தூர
எறிகிறாய் ,
செருப்புகள் ...
இப்படியே இதற்க்கு காரனம் சொல்லிகிட்டே போனா அப்புரம்
கார் டையர்,ஸ்கூட்டர் டையர்,எல்லாம் கூட கேள்வி கேக்கும் ஏன் என்னை தூக்கி எறிஞ்சிட்டீங்கன்னு,

அமரன்
12-12-2009, 08:06 PM
(கண்)தானத்தின் மகத்துவதைச் சொல்லும் இன்னுமொரு கவிதை.

உடல் தானம் செய்தவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

பாராட்டுகள் முத்துவேல்.

அமரன்
12-12-2009, 08:19 PM
இலக்கை எட்டியபிறகு ஒட்டம் எதற்க்கு. ஓய்வுக்கு வர எல்லைக் கோடு தாண்டியும் கொஞ்சநேரம் ஓடலாம். பாராட்டுகள் முத்துவேல்.

அமரன்
12-12-2009, 08:28 PM
வாழும் தெய்வங்கள்-தங்க(ள்)
வாழ்ந்த அனுபவங்களை பகிரும் இடம்
முதியோர் இல்லம்
என்பதை சொல்லும் கவிதை.

தக்சின் முதியோர் இல்லம் கிளறிய கருத்துகள் நினைவாடுது.

அவரவர் வாழ்க்கை அவரவர் பையில்..

பாராட்டுகள் முத்துவேல்!

muthuvel
13-12-2009, 12:42 AM
ஆண் குழந்தைக்கு தாய் பாலு ,
பெண்குழந்தைக்கு கள்ளி பாலு ...

muthuvel
13-12-2009, 12:46 AM
மழையை சேகரித்தால் குடி நீர் ,
நதியை சேகரித்தால் அணைக்கட்டு ,
அவமானங்களை சேகரித்தால் வாழ்வில் வெற்றி ...

muthuvel
13-12-2009, 12:47 AM
குடிகாரன் மிதந்தால் சாவு,
மீனவன் மிதந்தால் வாழ்வு ,

muthuvel
13-12-2009, 12:48 AM
ஓயாமல் சுற்றுகிறேன் ,
ஓய்வு எடுக்க நேரமில்லை ,
பூமி ,

muthuvel
13-12-2009, 12:50 AM
எந்த தவறும் செய்யவில்லை ,
எனக்கு மட்டும் சோதனை மேல் சோதனை .
.

muthuvel
13-12-2009, 12:54 AM
ரசிது இல்லாத நன்கொடை ,
வரதட்சணை ..
மாப்பிளைக்கு

muthuvel
13-12-2009, 04:13 AM
சுகமும் , துக்கமும் ,
நிரம்பி வழிந்தது ,
தாங்கமுடியவில்லை என்னால் .
தபால் பெட்டி ...

ஆதி
13-12-2009, 04:38 AM
முத்துவேல், தங்களின் கவிதை முயற்சி நன்று..

எழுதுவதை கவிதை நடையில் எழுத பழகுங்கள்..

தொடருங்கள்..

muthuvel
13-12-2009, 07:14 AM
மண் மழை நீரையும் ,
மனிதன் மண்ணையும் ,
உறிஞ்சுகிறார்கள் ...
தனக்கு தானே தோண்டும் ,
சவக்குழி ...

muthuvel
13-12-2009, 08:05 AM
வழி மேல் விழி வைத்து ,
காத்து கிடந்த நட்சத்திரங்கள் ,
அவள் வரவில்லை அன்று ,
அமாவாசையாம் ...

rajesh2008
13-12-2009, 08:52 AM
முத்துவேல் உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது,எழுத்துப் பிழையை கொஞ்சம் திருத்திப் பதித்திருந்தால் மிக்க நலம்

rajesh2008
13-12-2009, 08:58 AM
நல்ல பிரக்ஞை, இப்போதாவது வந்ததே.!!!
மண் மழை நீரை உறிஞ்சி விரயப்படுத்துவதில்லை நண்பா, அது நமது சந்ததிக்குப் பத்திரப்படுத்துகிறது.ஆனால் நாம் தான் மண்ணைத் தோண்டி வெளிநாட்டுக்கு விற்று விடுகிறோம்.

rajesh2008
13-12-2009, 09:05 AM
கரும்பு தின்னக் கூலி பெற்றுக் கொள்ளுதல்.
இவன் இன்பத்துக்கு அவள் கொடுக்கும் விலை.
இவன் தான் விலை மகனோ??

அமரன்
13-12-2009, 09:06 AM
பழகிப்போன காட்சிப்பா!

வலி சுமந்து..

rajesh2008
13-12-2009, 09:10 AM
சிரித்துக் கொண்டே அழவும் செய்யனும்,
அழுது கொண்டே சிரிக்கவும் தெரியனும்.
வாழ்கையின் சாராம்சம் உன்னில் நான் காண்கிறேன்

அமரன்
13-12-2009, 09:10 AM
கறுப்புச் சொத்து என்கிறீர்கள்.. சரிதான்..

ஆனாலும்

கொடுக்கக் கஷ்டப்படுபவனுக்கு செஞ்சொத்து.

நன்கொடை வஞ்சம்.,?

அமரன்
13-12-2009, 09:12 AM
கரும்பு தின்னக் கூலி பெற்றுக் கொள்ளுதல்.
இவன் இன்பத்துக்கு அவள் கொடுக்கும் விலை.
இவன் தான் விலை மகனோ??


திருமணம் இரு மனம் இணைவது.
அதில்
திரு மணம் கலப்பது
நேரங்களில் சந்தனமாகவும் கந்தகமாகவும்.

அமரன்
13-12-2009, 09:14 AM
சோகமோ சுகமோ
இதழ் விரித்தபடி..
தபால்பெட்டி!

நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்னும் இன்னும் நிறைய,

அமரன்
13-12-2009, 09:16 AM
கடைசியில் மண்தான் ஜெயிக்கிறது.

தொடருங்க.

அமரன்
13-12-2009, 09:21 AM
அள்ளித் தெளித்த
வெள்ளித் தண்ணீர்.
அழகாய்ச் சுழித்த
மேகக் கொலம்.
ஒப்பனை மினுங்க
நிலவின் வருகை.

அடடா..
முன்னிரவில் ஒரு அதிகாலை.

praveen
13-12-2009, 09:42 AM
நான் யார் என்று என்னிடமே கேட்டுக்கொண்டிருக்கிறேன் :).

உண்மையிலே நான் ஒரு கனிப்பொறி வன்பொறியாளன், இருப்பது தென் தமிழகத்தில், வேலை நேரம் போக ஒய்வு நேரத்தில் தமிழ்மன்றத்தில் இளைப்பாறுகிறேன். இங்கே எனக்கு பல சகோதரர்களும் சில சகோதரிகளும் உண்டு.

சமயத்தில் தளத்தின் நலன் கருத்தி சில கருத்துக்கள் பதிந்து விடுவேன், தனிப்பட்ட வகையிலே என் கருத்து எனவும் எதிர்கருத்தாக பதிந்து விடுவேன், ஆனால் ஒரு போதும் மன்றத்து நட்பை கைவிடேன்.

அமரன்
13-12-2009, 09:48 AM
காயத்தில் ஏற்பட்ட மாயம் காய மயமாக உருவான காலம் மாயமாகி
அப்பப்போ ஊசி, அப்பப்போ வலி என இருக்கத்தான் செய்யுது.

நன்று முத்துவேல்!

அமரன்
13-12-2009, 09:49 AM
அச்சச்சோ..இந்த நினைப்பே வேண்டாம்.

muthuvel
13-12-2009, 03:29 PM
அட மூடனே,
உணவுக்கு கத்துகிறேன் ,
உறவுக்காரன் வருகிறான் என்கிறாயே ,
காகங்கள்..............

muthuvel
14-12-2009, 12:53 AM
கை,கால்கள் ,நன்றாக தான் உள்ளது ,
என்ன செய்ய ,என் எஜமான் சோம்பேறி ,
அதான் பிட்சை எடுக்கிறேன் ,
கோயில் யானைகள் ...

muthuvel
14-12-2009, 12:55 AM
என்றுமே ஏணிகள் ,
மேலேளும்புவதில்லை ,அதே இடத்தில்தான் ,

muthuvel
14-12-2009, 12:56 AM
இரு தலை கொல்லி எறும்பு ,
கணவன் ,
தாய் கும் தாரதிற்கும் நடுவே...

muthuvel
14-12-2009, 12:57 AM
பொது இடத்தில புகை பிடிக்காதே ,
கொடைக்கானல் மலையின் பனிகள்....

aren
14-12-2009, 03:53 AM
என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை.

இந்த குறுங்கவிதைகள் அனைத்தையும் ஒரே திரியில் நீங்கள் கொடுத்தால் படிக்க வசதியாக இருக்கும்.

aren
14-12-2009, 03:54 AM
இது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பவையே. இதுதானே கணவருக்கு பிரச்சனை.

உங்களிடம் இதற்கு நிவர்த்தி இருந்தால் சொல்லுங்கள்.

aren
14-12-2009, 03:57 AM
என்ன செய்வது, அது அவர்களின் தலைவிதி. பாவம் அவர்கள்

கா.ரமேஷ்
14-12-2009, 04:32 AM
அருமை..

கா.ரமேஷ்
14-12-2009, 04:34 AM
நல்ல கற்பனை..

கா.ரமேஷ்
14-12-2009, 04:37 AM
அருமை..

கா.ரமேஷ்
14-12-2009, 04:47 AM
அருமையான கவிதை...

கா.ரமேஷ்
14-12-2009, 04:48 AM
என்ன செய்வது உயிர் காத்து கொள்ள வேண்டுமே...

praveen
14-12-2009, 05:51 AM
அது தான் அவ்வப்போது யானைகள் கடுப்பாகி பாகனை தூக்கி போட்டு மிதிக்கிறது :)

aren
14-12-2009, 05:53 AM
நம் ஊரில் பிச்சையெடுப்பவர்களைக் கேட்டால் அவர்கள் நாங்களும் வேலைசெய்துதான் சம்போதிக்கிறோம் என்பார்கள்.

aren
14-12-2009, 06:29 AM
இது தினமும் நடக்கும் விஷயம்.

குணமதி
14-12-2009, 06:43 AM
நம் ஊரில் பிச்சையெடுப்பவர்களைக் கேட்டால் அவர்கள் நாங்களும் வேலைசெய்துதான் சம்போதிக்கிறோம் என்பார்கள்.

பிச்சை கேட்பதும் ஒரு வேலை என்று உரிமை கோரினாலும் வியப்பில்லை.

muthuvel
14-12-2009, 08:07 AM
தூங்க விடவில்லை என்னை ,
வாங்கிய கடனும் ,
பிறருக்கு செய்த துரோகமும் ...

muthuvel
14-12-2009, 08:14 AM
ராமரும் ,பாபரும் ,
ஒன்றாக கடி புகுந்தனர் ,
சமத்துவபுரம் ..

muthuvel
14-12-2009, 08:28 AM
ஒருவன் வேகமாக ,
இன்னொருவன் மெதுவாக ,
, யீ மெயில் ,...தபால்காரன்.........

ஆதி
14-12-2009, 10:05 AM
முத்துவேல் அவர்களே.. உங்களின் எல்லா குறுங்கவிதைகளையும் ஒரு திரியில் பதியுங்கள்.. முத்துவேலின் குறும்பாக்கள் என்று ஒரு திரி உருவாக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா.. அதிலேயே உங்களின் கவிதைகளை தொடருங்கள்.. உங்கள் கவிதைகளை நீங்கள் தேட சவ்கரியமாக இருக்கும்..


எங்கே எனது கவிதை
மன்றில் பதித்த வைத்த கவிதை
என்று தேட மாட்டீர்கள்..

புரிதலுக்கு நன்றி..

//ஏழைகளின் உயிருக்கு ,
ஏற்றமிகு
திட்டம் ....
//

இது கவிதையா ? இல்லை தகவலா ?

குறுங்கவிதை என்பது கூர்மையான உளி, வால், அல்லது ஊசி போன்றது..

படிப்பவரை செதுக்க வேண்டும்.. அல்லது படிவருள் ஊடுருவ வேண்டும்.. இல்லையேல் மனதில் கருத்தை தைக்க வேண்டும்.. உங்கள் கவிதையையும் அப்படி செய்துவிட்டீர்கள் என்றால் அவை இன்னும் அருமையானதாய் இருக்கும்.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..

சிவா.ஜி
14-12-2009, 12:38 PM
தி.மு.கழகத்துக்கு விளம்பர வாசகம் போல எழுதுவதை கவிதை என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

ஆதன் சொன்னதில் இருக்கும் ஆழமான கருத்தை தயவுசெய்து மனதிற்கொள்ளுங்கள் முத்துவேல். கவிஞன் கட்சிக்காரனாகிவிடக்கூடாது.

சிவா.ஜி
14-12-2009, 12:45 PM
ராமரும் பாபரும்
ஒன்றாக குடிபுகுந்தனர்
ஆளும் கட்சியின்
அனுதாபிகளாக....
அரசியல் மதத்தில்
அந்நியமதம் கலப்பதில்லை
அஞ்சாயிரமோ பத்தாயிரமோ
அத்துடன்....
அடிப்படை உறுப்பினர்
அடையாள அட்டை இருப்பின்
சமத்துவபுரத்தின் கதவு திறக்கும்...
இதில் பாபரென்ன...ராமரென்ன?

muthuvel
14-12-2009, 01:00 PM
தி.மு.கழகத்துக்கு விளம்பர வாசகம் போல எழுதுவதை கவிதை என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

ஆதன் சொன்னதில் இருக்கும் ஆழமான கருத்தை தயவுசெய்து மனதிற்கொள்ளுங்கள் முத்துவேல். கவிஞன் கட்சிக்காரனாகிவிடக்கூடாது.

அண்ணா கட்சிக்காரன் அல்ல நான் , விளம்பரம் பார்த்தேன் ...

muthuvel
14-12-2009, 01:00 PM
முத்துவேல் அவர்களே.. உங்களின் எல்லா குறுங்கவிதைகளையும் ஒரு திரியில் பதியுங்கள்.. முத்துவேலின் குறும்பாக்கள் என்று ஒரு திரி உருவாக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா.. அதிலேயே உங்களின் கவிதைகளை தொடருங்கள்.. உங்கள் கவிதைகளை நீங்கள் தேட சவ்கரியமாக இருக்கும்..


எங்கே எனது கவிதை
மன்றில் பதித்த வைத்த கவிதை
என்று தேட மாட்டீர்கள்..

புரிதலுக்கு நன்றி..

//ஏழைகளின் உயிருக்கு ,
ஏற்றமிகு
திட்டம் ....
//

இது கவிதையா ? இல்லை தகவலா ?

குறுங்கவிதை என்பது கூர்மையான உளி, வால், அல்லது ஊசி போன்றது..

படிப்பவரை செதுக்க வேண்டும்.. அல்லது படிவருள் ஊடுருவ வேண்டும்.. இல்லையேல் மனதில் கருத்தை தைக்க வேண்டும்.. உங்கள் கவிதையையும் அப்படி செய்துவிட்டீர்கள் என்றால் அவை இன்னும் அருமையானதாய் இருக்கும்.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..
அண்ணா கோவம் வேண்டாம் , முடிந்தால் அழித்துவிடுங்கள்

paramasundararaj
14-12-2009, 01:11 PM
தயவுசெய்து பதிலளிக்கவும் !என்னால் நமது தளத்திலிருந்து மின்னூல்களை ஏன் தரவிறக்கம் செய்யயியலவில்லை

muthuvel
14-12-2009, 01:13 PM
என் உழைப்பின்
வியர்வை ,
வெளியேறியது ,
ஆனந்த கண்ணிராக ,
என் மகளின்
திருமணத்தின் பொது

அறிஞர்
14-12-2009, 01:45 PM
என் உழைப்பின்
வியர்வை ,
வெளியேறியது ,
ஆனந்த கண்ணிராக ,
என் மகளின்
திருமணத்தின் போதுபெற்றவர்களின் உழைப்பு எல்லாம்...
மகளின் திருமணத்தில் கரைந்துவிடுகிறது.

இந்நிலை மாற வேண்டும்.

muthuvel
14-12-2009, 02:36 PM
வீட்டில் நிலநடுக்கம் ,
வீதியில் மழை ,
கரையில் சுனாமி ,
இயற்கையே எங்களை வாழவிடு ...

richard
14-12-2009, 02:39 PM
பெற்றவர்களின் உழைப்பு எல்லாம்...
மகளின் திருமணத்தில் கரைந்துவிடுகிறது.

இந்நிலை மாற வேண்டும்.

பெண்னை பெற்ற தந்தையின் பாக்கியம் இது,கன்னடத்தில் ஒரு வார்த்தை ’ஹென்னு கொட்ட மாவா கண்னு கொட்டாங்கே’ என்று அதாவது பெண் கொடுத்த மாமானார் கண் கொடுத்தது போல் என்று மேலும் பெண் தானம் செய்வது மிகசிறந்த பலன்,பெண்ணை கன்னிகா தானம் செய்தவர்களின் பல்ன் மிகவும் சிறந்தது

richard
14-12-2009, 02:44 PM
வீட்டில் நிலநடுக்கம் ,
வீதியில் மழை ,
கரையில் சுனாமி ,
இயற்கையே எங்களை வாழவிடு ...

மனிதர்களே இயற்க்கையை சதி செய்கிறார்களே இந்நிலை எப்போது மாறுவது என்று சொல்லி பூமி தாயும் அழுகிறது

muthuvel
14-12-2009, 02:53 PM
நெருங்கிய நண்பர்கள்,
இவனை வெட்டினால் , அவன் நம்மை பலி வாங்குகிறான் ,
மரமும், மழையும் ..

muthuvel
14-12-2009, 02:55 PM
இவனை வெட்டினால்,
அவன் நம்மை தாக்குகிறான் ,
மரமும்,மழையும்

ஜனகன்
14-12-2009, 02:57 PM
வாவ்!!!!!!!!!!!கவிதைகள் எல்லாம் சுப்பர்.ஒவ்வொரு வார்த்தையும் நியம்.தொடர்ந்து தாருங்கள் முருகவேல், உங்கள் குறுங்கவிதைகளை.

muthuvel
14-12-2009, 03:00 PM
வீடு முள்கினாலும்,
பள்ளி விடுமுறை என்றதும் மகிழ்ச்சி

muthuvel
14-12-2009, 03:04 PM
என்ன தவறு செய்தாய் யாரு சூடு
போட்டது ,

muthuvel
14-12-2009, 03:06 PM
சூரியனும் , மழையும் ,
ஒரே நேரத்தில்...

muthuvel
14-12-2009, 03:12 PM
பெண் விட்டாருக்கு வரவாக மாப்பிள்ளையும் ,
செலவாக மாப்பிள்ளை தோழர்களும் ,

muthuvel
14-12-2009, 03:14 PM
ஒரு வேலை கஞ்சியாவது கிடைத்தது ,
அதற்கும் உலை வைத்தாய் ,
வாஷின் மிஷன் ,வண்ணான் தொழில் ..

muthuvel
14-12-2009, 03:18 PM
பலமில்லாத காவலர்கள் ,
ஒரு தீபொரியில் வீழ்ந்தனர் ,
...

muthuvel
14-12-2009, 03:23 PM
உன் பேராசைக்கு ,
எனக்கு போடுகிறாய் சூடு ,

muthuvel
14-12-2009, 03:25 PM
கமிஷன் பெறாத ,
தபால்காரன் ,
.

muthuvel
14-12-2009, 03:35 PM
கற்க கசடற இறந்த பின்
கண் தானம் செய்க அதற்கு தக .

aren
14-12-2009, 04:12 PM
நண்பரே தனியாக இந்த மாதிரி குறுங்கவிதைகளை பதியவேண்டாம். நீங்கள் பதித்த குறுங்கவிதைகளை ஒன்றாக்ச் சேர்த்து ஒரு திரியாக மாற்றியிருக்கிறார்கள். அதிலேயே இனிமேல் பதியுங்கள்.

பா.ராஜேஷ்
14-12-2009, 04:20 PM
நன்று முத்துவேல்... உங்கள் பெயரையும் தமிழிலேயே மாற்றிக் கொள்ளலாமே ! :)

பா.ராஜேஷ்
14-12-2009, 04:23 PM
நல்ல குறும்பாக்கள். ஏதோ ஒன்று குறைவது போல் இருக்கிறது!! கவனித்து எழுதுங்கள்... தோன்றியதை சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.

muthuvel
15-12-2009, 07:05 AM
இலவசம் என்றால் வருசையாக ,
கலவரம் என்றால் கும்பலாக ...

muthuvel
15-12-2009, 07:08 AM
வியர்வை துடைக்க பயன்பட்ட கைக்குட்டை ,
இன்று ,
முகத்தை மறைக்க ,
லஞ்சத்தில் அகப்படும்போது ...

muthuvel
15-12-2009, 08:27 AM
ஆறு பிறந்தது மலையில்,
மழை பிறந்தது மேகத்தில் ,
நிலவு பிறந்தது இரவில்,
வெளிச்சம் பிறந்தது பகலில்,
என் கவிதை பிறந்தது உன் அழகில் ..

aren
15-12-2009, 03:07 PM
முத்துவேலின் வேகம் வியக்கவைக்கிறது.

நான்கு நாட்களில் பத்து பக்கங்களுக்கு இந்தத் திரி சென்றிருக்கிறது வியக்க வைக்கிறது.

muthuvel
15-12-2009, 11:59 PM
இலையை மெல்லும் ஆடும் ,
குறையை மெல்லும் சொந்தங்களும் , திருமண மண்டபத்தில் ..

muthuvel
16-12-2009, 12:00 AM
நான் வாங்கிய காலத்தை விட ,
பத்து மடங்கு அதிகரித்தது ,
வாங்கிய நிலமும்,
மருமகன் கேட்கும் வரதட்சனையும் ............

muthuvel
16-12-2009, 12:06 AM
பள்ளி குழந்தைக்கு விளையாட்டு,
உத்தியோகத்தில் உள்ளவனுக்கு ஓய்வு ,
கல்லுரி மாணவனுக்கு கேளிகை,
இல்லத்தரசிக்கு தொலைக்காட்சி பொழுது போக்கு,
தம்பதிகளுக்கு பிக்னிக்,

muthuvel
16-12-2009, 12:07 AM
என் காதலியின் முகபருவை எண்ணினேன்,
அவள் உடுத்தும் உடையின் அளவை அறிந்தேன் ,
அவள் தும்மலை தாங்கினேன் ,
மணிக்கணக்கில் அவளோடு பேசினேன் ,
ஒரு நொடியில் யோசிக்க நேரமில்லை ,
தேசியகொடியில் சக்கரம் எதை குரிகிரதென்று,
அதன் மூவர்னத்தின் அர்த்தம் என்ன என்று ..?.....

muthuvel
16-12-2009, 03:23 PM
உன் கண்ணீரை சுமக்க ,
தாங்கும் பூமியாக ,
உன்னோடு ,
நான் இருப்பேன்,

உன் மகிழ்ச்சியின் சிரிப்பு வெள்ளத்தில்,
ஓலிக்கும் சத்தமாக ,
உன்னோடு நான் இருப்பேன் ,

சுற்றம் உன்னை துறந்தாலும் ,
என்றும் உற்ற நண்பனாக .
உன்னோடு நான் இருப்பேன் ...

நீ வாழ்க்கை பள்ளத்தில் விழுந்தால்,
கை கொடுக்கும் ஏணியாக ,
உன்னோடு நான் இருப்பேன் ..

இந்த நொடியில் நீ எங்கு இருந்தாலும் ,
ஒரு கணம் உன்னை நினைக்கும் ,
உன் பெற்றோரோடு ,
ஒருவனாக
நானும் இருப்பேன்

ஜனகன்
16-12-2009, 03:33 PM
ஊற்றில் குறையாது ஊறும் தண்ணீர்போல், தங்கள் உள்ளத்து கவிதைகளும் பெருகி உருகும் உள்ளங்களுக்கு ஒத்தடம் கொடுக்கட்டும்.படிக்க படிக்க நன்றாக இருக்கின்றது முத்துவேல். வாழ்த்துக்கள்.

muthuvel
16-12-2009, 03:44 PM
ஊற்றில் குறையாது ஊறும் தண்ணீர்போல், தங்கள் உள்ளத்து கவிதைகளும் பெருகி உருகும் உள்ளங்களுக்கு ஒத்தடம் கொடுக்கட்டும்.படிக்க படிக்க நன்றாக இருக்கின்றது முத்துவேல். வாழ்த்துக்கள்.

அண்ணா , மிக்க நன்றி

muthuvel
16-12-2009, 04:09 PM
காக்கை குட இருப்பதைத்தான் பகிர்த்து கொடுக்கும் ,
நீ இருப்பதையெல்லாம் எனக்கு கொடுத்தாய் ............ .


முதுகில் குத்தும் உலகில்,
என்னை தட்டி கொடுத்த உன் கைகள் .........


உன் கண்களுக்கு மட்டும் ,நான் பிறந்ததில் இருந்து , இறக்கும்வரை குழந்தை ...........


உன் தோளில் சாய்ந்தது , தோழமையை வளர்த்தது ...
நீ கை பிடித்து சென்றது , தைரியத்தை வளர்த்தது ..
நீ பாடும் தாலாட்டு , தனம்பிகையை வளர்த்தது .........

............ ...

தொலைவில் இருந்தாலும் ,
தொலை பேசியில் பேசினாலும் ,
நித்தமும் விக்கல் எனக்கு, உண்ணும்போது ...........
சாபிடானா என் மகன் என்று நீ நீனைபதால் ............ ........

இன்று தள்ளாத வயதிலும் நீ திண்டாடி நின்றாலும் ,
நான் தடுக்கி விழுந்தால் , உன் நெஞ்சம் பதறும்..........

muthuvel
17-12-2009, 11:27 AM
"நன்றி உள்ளவர்கள் சிலர்,
நயவஞ்சகர்கள் பலர்,,

பாசமுள்ளவர்கள் சிலர்,
பாசாங்கு செய்வோர் பலர்,

அன்புள்ளவர்கள் சிலர் ,
அடக்கு முறை செய்வோர் பலர்,

தித்திப்பாய் பேசுவோர் சிலர்
திட்டுவோர் பலர்,"

உதவ எண்ணமுள்ளோர் சிலர்,
கைவிரிபோர் பலர்,

நம்மை பிடித்தோர் சிலர் ,
வெறுப்போர் பலர்,

நம்மிடம் கடன் எதிர்பார்க்காதோர் சிலர்,
எதிர் பார்போர் பலர்,

நம் வளர்ச்சியை பொருத்து கொள்வோர் சிலர்,
பொறாமை கொள்வோர் பலர் ..

நம் துன்பத்தை கண்டு வருந்துவோர் சிலர்,
மகிழ்ச்சி அடைவோர் பலர்....

உற்று நோக்குவோம் உள்ளத்தை ,
உடைத்தெறிவோம் அகந்தையை ,

முடிந்த வரை எல்லோருக்கும் நல்லவனாக ,
உதவுபவனாக ,
வாழ்வோம் நமக்காக ...

சிவா.ஜி
17-12-2009, 12:35 PM
எல்லோருக்கும் நல்லவனாக இருந்தால் நீங்கள் சொன்ன 'பலர்' மொட்டையடித்துவிடுவார்கள். அவ்வப்போது சிலராய் இருப்போர் பலராயும் மாற வேண்டும்.

வாழ்த்துகள் முத்துவேல்.

richard
17-12-2009, 01:10 PM
"நன்றி உள்ளவர்கள் சிலர்,
நயவஞ்சகர்கள் பலர்,,

பாசமுள்ளவர்கள் சிலர்,
பாசாங்கு செய்வோர் பலர்,

அன்புள்ளவர்கள் சிலர் ,
அடக்கு முறை செய்வோர் பலர்,

தித்திப்பாய் பேசுவோர் சிலர்
திட்டுவோர் பலர்,"

உதவ எண்ணமுள்ளோர் சிலர்,
கைவிரிபோர் பலர்,

நம்மை பிடித்தோர் சிலர் ,
வெறுப்போர் பலர்,

நம்மிடம் கடன் எதிர்பார்க்காதோர் சிலர்,
எதிர் பார்போர் பலர்,

நம் வளர்ச்சியை பொருத்து கொள்வோர் சிலர்,
பொறாமை கொள்வோர் பலர் ..

நம் துன்பத்தை கண்டு வருந்துவோர் சிலர்,
மகிழ்ச்சி அடைவோர் பலர்....

உற்று நோக்குவோம் உள்ளத்தை ,
உடைத்தெறிவோம் அகந்தையை ,

முடிந்த வரை எல்லோருக்கும் நல்லவனாக ,
உதவுபவனாக ,
வாழ்வோம் நமக்காக ...

தமிழர்களுக்கா இந்த அறிவுரை உதவாது காட்டிக்கொடுக்கும் இனத்தை சேர்ந்தவர்கள் தான் தமிழர்கள்,சரியான தகவல் தவரான் இடத்தில்,இதை ஏறுக்கொண்டு நடப்பார் இல்லை இந்த மன்னில்,நல்லவனையும் கெடுத்துவிடும் இந்த உலகம்,

richard
17-12-2009, 01:13 PM
இலவசம் என்றால் வருசையாக ,
கலவரம் என்றால் கும்பலாக ...

இதுதான் இன்றைய தமிழக அரசியல்

மன்மதன்
17-12-2009, 01:34 PM
மாநகர பள்ளி மாணவன் மாவட்ட ஆட்சியராக,
MATRICULATION பள்ளி மாணவன் MELBOURNENIL (AUSTRALIA) அடி வாங்குபவனாக ,
இன்றைய நிலை .......

நிகழ்கால காட்சிப்பா..அருமை..

muthuvel
17-12-2009, 01:37 PM
நிகழ்கால காட்சிப்பா..அருமை..

நன்றி அண்ணா

muthuvel
17-12-2009, 01:38 PM
இதுதான் இன்றைய தமிழக அரசியல்

நன்றி அண்ணா

மன்மதன்
17-12-2009, 01:40 PM
நாளை வெயிலில்,
வெளியே செல்ல வேண்டும் ,
ஆகையால்,
இன்று , இரவில்,
ஓய்வு எடுத்து கொள்கிறேன் ,
என் நிழல்கள் ...

அருமை..

muthuvel
17-12-2009, 01:43 PM
தூக்கம் எனக்கு , கனவில் நீ .......


விக்கல் எனக்கு , என் நீனைவாக நீ .......


காதல் மலர்ததது எனக்கு, காதலியாய் நீ .....

உன்னை பிரிந்த பூகம்பம் எனக்கு, என் மனதில் விரிசலாக நீ.......


உன் எண்ணம் காடாறு எனக்கு, அனைகட்டாய் நீ .....


தனிமை இருந்தது எனக்கு, இன்று உறவாக நீ.........

அறிஞர்
17-12-2009, 03:48 PM
காதல் ஏற்படுத்தும் இன்பமான நிகழ்வுகள்...
தங்கள் வரிகள்....

குணமதி
17-12-2009, 04:32 PM
"நன்றி உள்ளவர்கள் சிலர்,
நயவஞ்சகர்கள் பலர்,,

பாசமுள்ளவர்கள் சிலர்,
பாசாங்கு செய்வோர் பலர்,

அன்புள்ளவர்கள் சிலர் ,
அடக்கு முறை செய்வோர் பலர்,

தித்திப்பாய் பேசுவோர் சிலர்
திட்டுவோர் பலர்,"

உதவ எண்ணமுள்ளோர் சிலர்,
கைவிரிபோர் பலர்,

நம்மை பிடித்தோர் சிலர் ,
வெறுப்போர் பலர்,

நம்மிடம் கடன் எதிர்பார்க்காதோர் சிலர்,
எதிர் பார்போர் பலர்,

நம் வளர்ச்சியை பொருத்து கொள்வோர் சிலர்,
பொறாமை கொள்வோர் பலர் ..

நம் துன்பத்தை கண்டு வருந்துவோர் சிலர்,
மகிழ்ச்சி அடைவோர் பலர்....

உற்று நோக்குவோம் உள்ளத்தை ,
உடைத்தெறிவோம் அகந்தையை ,

முடிந்த வரை எல்லோருக்கும் நல்லவனாக ,
உதவுபவனாக ,
வாழ்வோம் நமக்காக ...

நல்லவனாகவும் இருக்க வேண்டும்; வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பார் அறிஞர் மு.வ. !

ஜனகன்
17-12-2009, 09:11 PM
எளிய நடை, அர்த்தமுள்ள வார்த்தைகள் படிக்க இனிமையாக, தெளிவாக இருந்தது. வாழ்த்துக்கள் முத்துவேல்.

muthuvel
18-12-2009, 04:26 AM
விவாகரத்து பெற்றாலும் ,
நம் உதடுகள் இணைகின்றன ,
"நாம் பெற்ற பிள்ளை "

கா.ரமேஷ்
18-12-2009, 06:01 AM
அனைத்தும் அழகான குறும்பாக்கள் முத்துவேல்.. தொடருங்கள்..

கீதம்
18-12-2009, 07:06 AM
நான் வாங்கிய காலத்தை விட ,
பத்து மடங்கு அதிகரித்தது ,
வாங்கிய நிலமும்,
மருமகன் கேட்கும் வரதட்சனையும் ............

யதார்த்தமான கவிதை. இந்நாளைய மாப்பிள்ளை தான் பெறும் வரதட்சணையைக் கொண்டு ஒரு நிலம் வாங்கிப் போட்டால் பிற்காலத்தில் அவர் மருமகனுக்கு வரதட்சணை தர உதவும் என்று எண்ணுகிறாரோ?

muthuvel
18-12-2009, 07:58 AM
யதார்த்தமான கவிதை. இந்நாளைய மாப்பிள்ளை தான் பெறும் வரதட்சணையைக் கொண்டு ஒரு நிலம் வாங்கிப் போட்டால் பிற்காலத்தில் அவர் மருமகனுக்கு வரதட்சணை தர உதவும் என்று எண்ணுகிறாரோ?

நன்றி சகோதரி

muthuvel
18-12-2009, 08:20 AM
உன் பெற்றோர் சம்மதித்தால் சம பந்தி உண்போம் ,
எதிர்த்தால் ,மதி கொண்டு வெல்வோம் நம் காதலை...........

muthuvel
19-12-2009, 08:19 AM
நான் அறிந்திருக்கவில்லை ,
அறியாத பருவத்தில் நான் செய்த குறும்புகள் ,
என்னால் , என் பெற்றோருக்கு ஏற்பட்ட வலி ,
அந்த வலியை அறிய வைத்தான்
என் மகன் ,அவன் அறியாத
பருவத்தில் , என்னிடம் குறும்புகள் செய்த பொது ...

muthuvel
19-12-2009, 03:18 PM
தேர்தல்" மை "க்கு
அரசியல் வாதிகள் பயன்படுத்துவது ,
மக்களின் வறு"மை" ...
தீவிரவாதமும்,
கள்ள ஓட்டும் ,
தேர்தெடுத்த சின்னம் ,
மக்களின் வறுமை ...

muthuvel
20-12-2009, 04:13 PM
குறை மட்டும் தெரிந்தால் போதாது ,
நிறைகள் ,அவர்களின் கண்களுக்கு ,நிரம்ப தெரியட்டும் ..


காதலை சொன்னால் மட்டும் போதாது ,
கை பிடித்தபின் கடுன்சொற்கள் ஒருவரை ஒருவர் தைக்காமல் இருக்கட்டும் ..

உடல் மட்டும் இணைந்தால் போதாது ,
அவர்களின் உள்ளங்கள் இணையட்டும் ..பணி மட்டுமே என்றிருந்தால் போதாது ,
என்னில் பாதி அங்கே தனியே ,என்று நீனைவிருகட்டும் ...


அறிவு நிரம்பி இருந்தால் போதாது,
அதில் , அகந்தை இருவருக்கும் தலை தூக்காமல் இருக்கட்டும் ..எதிர்பார்ப்புகளோடு மட்டும் இருந்தால் போதாது ,
இருப்பதய் கொண்டு மனம் திருப்தி கொள்ளட்டும்...


பணம் மட்டும் என்றிருந்தால் போதாது,
அவர்களின் பாசம் ஒருவரை ஒருவர் நிரம்பி வழியட்டும் ...தன் பெற்றோர் என்ற எண்ணம் இருந்தால் போதாது ,
நம் பெற்றோர் என்ற அன்பு பிறக்கட்டும் ...சிறுக சேமித்து வீடு கட்டினால் போதாது ,
விட்டு கொடுப்பது என்ற நியதி மனதில் நிரம்பட்டும் ..

muthuvel
21-12-2009, 04:43 PM
போதி மரத்தில் ,
இலையுதிர்காலம் ,
கல்லூரி நாட்களின் கடைசி நாள் ..


கற்களில் சிற்பி வரையும்
ஓவியம்
சிலை ...

மனிதனை படைத்தவன் கடவுள்,
கடவுளை படைத்தவன்
சிற்பி ..

muthuvel
22-12-2009, 10:49 AM
குடிகாரன் மிதந்தால் சாவு,
மீனவன் மிதந்தால் வாழ்வு ,

muthuvel
22-12-2009, 10:50 AM
பணம் படைத்தோர் நகைகடையிலும் ,
இல்லாதோர் அடகு கடையிலும் ,

muthuvel
22-12-2009, 10:51 AM
மழையை சேகரித்தால் குடி நீர் ,
நதியை சேகரித்தால் அணைக்கட்டு ,
அவமானங்களை சேகரித்தால் வாழ்வில் வெற்றி ...

ஜனகன்
22-12-2009, 02:05 PM
நான் அறிந்திருக்கவில்லை ,
அறியாத பருவத்தில் நான் செய்த குறும்புகள் ,
என்னால் , என் பெற்றோருக்கு ஏற்பட்ட வலி ,
அந்த வலியை அறிய வைத்தான்
என் மகன் ,அவன் அறியாத
பருவத்தில் , என்னிடம் குறும்புகள் செய்த பொது ...

நான் படித்து ரசித்தது. உண்மை வரிகள்,அருமையாக இருந்தது.

வானதிதேவி
22-12-2009, 02:40 PM
சிந்திக்க வைக்கும் வரிகள்.வாழ்த்துக்கள் முத்துவேல்.

aren
22-12-2009, 02:58 PM
கலுக்குறீங்க முத்துவேல்.

ஒரே நாளில் இவ்வளவு குறும்பாக்களை பதிவு செய்யாமல் விமர்சனங்களைப் படித்து பார்த்துவிட்டு அதன்படி அடுத்த குறும்பாவை எழுதினால் உங்கள் எழுத்து செம்மையாகும் என்பது என் கருத்து.

இப்படி உடனுக்குடன் எழுதினால் படிப்பவர்களுக்கு திகட்டி அதனால் விமர்சனங்கள் குறையலாம்.

நீங்கள் மற்ற பதிவுகளைப் படித்து அதற்கு விமர்சனம் எழுதுங்கள். அது மற்றவர்களின் எழுத்துக்களையும் மெருகேற்றிக்கொள்ள வசதியாக இருக்கும்.

muthuvel
22-12-2009, 03:04 PM
கலுக்குறீங்க முத்துவேல்.

ஒரே நாளில் இவ்வளவு குறும்பாக்களை பதிவு செய்யாமல் விமர்சனங்களைப் படித்து பார்த்துவிட்டு அதன்படி அடுத்த குறும்பாவை எழுதினால் உங்கள் எழுத்து செம்மையாகும் என்பது என் கருத்து.

இப்படி உடனுக்குடன் எழுதினால் படிப்பவர்களுக்கு திகட்டி அதனால் விமர்சனங்கள் குறையலாம்.

நீங்கள் மற்ற பதிவுகளைப் படித்து அதற்கு விமர்சனம் எழுதுங்கள். அது மற்றவர்களின் எழுத்துக்களையும் மெருகேற்றிக்கொள்ள வசதியாக இருக்கும்.

அண்ணா , நிறையை கவிதைகளை நிதமும் எழுதுகிறேன் , அதன் இப்படி , சரி இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ,

aren
22-12-2009, 03:16 PM
நல்லது முத்துவேல் உங்கள் விருப்பபடியே செய்யுங்கள்.

நம் மன்றத்தில் பலர் கவிதை எழுதுவதில் வல்லவர்கள். அவர்கள் உங்கள் கவிதையைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதினால் உங்கள் எழுத்துக்களும் நிச்சயம் செம்மையாகும் என்பது என் கருத்து.

ஆனால் அவர்கள் ஒரு கவிதையை படிப்பதற்குள் பல புதிய கவிதைகள் வந்துவிடுவதால் அவர்களால் உங்களுடைய பல கவிதைகளைப் படிக்கமுடியாமல் போய்விடும். அதான் நேரம் விட்டு பின் அடுத்த கவிதையைப் பதிவு செய்யுங்கள்.

ஒவ்வொரு விமர்சனமும் உங்களை மேலும் மெருகேற்றும் என்பது நிச்சயம்.

muthuvel
22-12-2009, 03:53 PM
நல்லது முத்துவேல் உங்கள் விருப்பபடியே செய்யுங்கள்.

நம் மன்றத்தில் பலர் கவிதை எழுதுவதில் வல்லவர்கள். அவர்கள் உங்கள் கவிதையைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதினால் உங்கள் எழுத்துக்களும் நிச்சயம் செம்மையாகும் என்பது என் கருத்து.

ஆனால் அவர்கள் ஒரு கவிதையை படிப்பதற்குள் பல புதிய கவிதைகள் வந்துவிடுவதால் அவர்களால் உங்களுடைய பல கவிதைகளைப் படிக்கமுடியாமல் போய்விடும். அதான் நேரம் விட்டு பின் அடுத்த கவிதையைப் பதிவு செய்யுங்கள்.

ஒவ்வொரு விமர்சனமும் உங்களை மேலும் மெருகேற்றும் என்பது நிச்சயம்.

நன்றி அண்ணா அப்படியே செய்கிறேன் ,
விமர்சனத்துக்கு நன்றி

muthuvel
23-12-2009, 04:24 PM
விண்ணில்
உயர பறக்கும் விண்கலம் என்னும் மாணவனை ,
அதை இயக்கிய ,
ஆசிரியன் என்னும் விஞ்ஞானி,
விண்ணை தொடும்

அதன் வளர்ச்சி என்னும் உயரத்தை

கீழிருந்தே ரசிக்கிறான் ...

ஜனகன்
23-12-2009, 08:35 PM
எளிய நடை, படிக்க தெளிவாக இருந்தது.வாழ்த்துக்கள்.

muthuvel
24-12-2009, 01:04 PM
இள வயதில் சம்பாதிக்கும் ,கை நிறைய பணம்,
அது தீனி போடும் இளமைக்கு தலைக்கணம்,
தலைக்கண கர்வத்தால் ,வார்த்தைகள் ஏற்படுத்தும் பிறர் மனதை ரணம் ,
எந்நேரமும் தவறான பாதையை தூண்டும் நம் உள்ளம் ,
அதை தடுத்து நிறுத்தி ,யோசிக்க வேண்டும் இக்கணம் ,
எப்பொழுதும் ,பிறரை மதிக்க வேண்டும் நம் மனம் ,
ஆணவத்தால் வாழ்ந்தால் அதுவே நம்மை ஆக்கிவிடும் பிணம் .....

muthuvel
24-12-2009, 02:52 PM
அரசியல்வாதிகள் ,
பொது மக்களிடம் ,
வா(க்குக்கு)க்கு ,
கொடுத்தனர் ,
தேர்தலில் ,
ஓட்டுக்கு பணம் ....

muthuvel
28-12-2009, 04:11 PM
எல்லோருக்கும் உன்னை பறிக்க ஆசை ,
எனக்கு மட்டும் உன்னை பருக ஆசை ,
வண்டுகள் மலர்களிடம் ...

muthuvel
06-01-2010, 07:13 AM
நிமிர்த்த முடியாத நாய் வால்,
தீவிரவாதி ...

ஜனகன்
06-01-2010, 08:23 AM
சரியாய் சொன்னீர்கள் முத்துவேல்.சில நேரங்களில் இதை வெளியில் சொல்ல முடியாத அவஸ்த்தை,நடப்பது நடக்கட்டும் என்று விட மனச்சாட்சி உறுத்தல்.

muthuvel
24-01-2010, 02:29 AM
சரியாய் சொன்னீர்கள் முத்துவேல்.சில நேரங்களில் இதை வெளியில் சொல்ல முடியாத அவஸ்த்தை,நடப்பது நடக்கட்டும் என்று விட மனச்சாட்சி உறுத்தல்.

நன்றி அண்ணா

muthuvel
21-03-2010, 08:02 AM
அவள் தலையில் ஏற்றிய ,
என் தேசிய கோடி,
கூந்தலில் ஒற்றை ரோஜா ..என் தெருவில்
அவள் கடந்து சென்றால்,
பாத சுவடு ..விதைத்தவனே ,
வென்னிற் ஊற்றினான் விதைக்கு, ,
பெண் சிசு கொலை ..


நீல மைதானத்தில்
யாரை தேடுகிறாய்,
இங்கே,
வான்மேகம் !


ஆறறிவிலிருந்து ,
ஐந்தறிவு,
தீவிரவாதம் ..


வாடிய மலரை கண்டு வாடியது,
ஏற்கனவே வாடிய மலர்,
விதவை ..


மழை ,கடலை குழுபாடியது,
கரையில் ,
நுரை...


யாரும் சொல்லித்தராத ,
பாடம்,
தோல்வி ..

நான்கு உதடுகள் ,
ஒரு சத்தம்,
காதலியின் முத்தம் ...


மருமகனின் தாகம்,
மாமனாரின் விவேகம் ,
தாகம் தணிக்க ,
தன் வியர்வை ...மாமனாரின் உழைப்பு ,
மருமகனுக்கு சம்பளம்,
வரதட்சணை ..சாதனைகளின் உரம் ,
அவமானம் ..


கை ,கால் முளைத்த ,
சிறகுகள் இல்லா ,
வண்ணத்துபூச்சி ,
குழந்தை ....


நேரத்திற்கு ,
நச்சரிக்கும் ,
ஈட்டிக்காரன் ,
பசி ..

ஆல்கஹால் இல்லாத ,
போதை பொருள்,
பணம் ...

இரண்டடி
பாத்திரத்திற்குள் ,
ஏராளமான ,
நவதானியம் ,
திருக்குறள்,


இந்தியன் முதலிடம் ,
இந்தியர்கள் ஏழ்மையில் ,
அம்பானி ..

govindh
24-03-2010, 01:16 PM
"எல்லோருக்கும் உன்னை பறிக்க ஆசை ,
எனக்கு மட்டும் உன்னை பருக ஆசை ,
வண்டுகள் மலர்களிடம் ... "

குறுங்கவிகள் அருமை...
பாராட்டுக்கள்.

muthuvel
07-04-2010, 08:06 AM
ஆயுதம் இல்லா,
பிறரை தாக்கும் ஆயுதம் ,
நாக்கு ..

muthuvel
09-04-2010, 12:15 PM
இயற்கை வரைந்த ,
வண்ண கவிதை ,
வானவில் ..

பிணங்கள் அழுகின்றன ,
மின் தகன சுடுகாட்டில் ,
மின்வெட்டு....

கீதம்
11-04-2010, 08:47 AM
என் தெருவில்
அவள் கடந்து சென்றால்,
பாத சுவடு ..

மழை ,கடலை குழுபாடியது,
கரையில் ,
நுரை...

மருமகனின் தாகம்,
மாமனாரின் விவேகம் ,
தாகம் தணிக்க ,
தன் வியர்வை ...இவற்றின் அர்த்தம் புரிந்தால் ரசிக்கலாம். மற்றவை நன்று.

கீதம்
11-04-2010, 08:48 AM
பிணங்கள் அழுகின்றன ,
மின் தகன சுடுகாட்டில் ,
மின்வெட்டு....

பிணங்கள் அழு(கு)கின்றன ,
மின் தகன சுடுகாட்டில் ,
மின்வெட்டு..

உயிர் நீங்கியும், உடல் நீங்க இயலா அவலநிலை. கவிதை நன்று.

பாராட்டுகள், முத்துவேல் அவர்களே.

muthuvel
12-04-2010, 04:33 AM
யானை காதுகளில்,
எறும்புகள்,
மாவோஈஸ்டுகள் ............ .....

muthuvel
15-04-2010, 05:30 AM
ஊழல் செய்து பிழைப்பதை விட,
விபசாரம் செய்வது மேல் ............ .....


குழந்தையை வேலைக்கு அனுப்பி உண்பதை விட,
மனித கழிவை உண்பது மேல்............ .....
இவை அனைத்தும் செய்வோர் மனிதர்களாய் நடமாடுவதை விட,
பிணங்களாகிவிடுவது மேல் ...

muthuvel
17-04-2010, 05:01 AM
தானாகா உறங்கும் விழிகள் எனக்கு ,
சுழலும் பூமியோடு சுற்றுகிறேன் ஓயாது ,

நிலவொளியும் ஊடுருவிகிறது ,
சூரியனும் பதம் பார்க்கிறது
என் தேகத்தை ,

கேள்வி கணைகள் எத்தனை ,
சுட்டெரிக்கும் வார்த்தைகள் எத்தனை ,
பரிசங்கள் எத்தனை ,
பொறாமைகள் எத்தனை ,
இடறுகள் எத்தனை ,
இம்சைகள் எத்தனை,
இன்னல்கள் எத்தனை,
இவை அனைத்தும் தாண்டி இன்று நான் வென்று நின்னாலும் ,
என் மூன்று வேலை உணவும் சேர்த்து ,
ஒரு வேலையே சாப்பிடுகிறேன் ,..

முதல் போட்ட நான் முதலிலே வரவேண்டும்,
கடைசியில் மிஞ்சும் காசுக்கு கடைசிவரை நிற்கவேண்டும்,
என் அலுவலகம் என்னும் கோயிலில் ............


வரம் என்னும் வேலை தேடி , என் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எத்தனை ,
என்னிடம் மந்திரம் கற்றபின் தப்பிபவர்கள் எத்தனை ..

என் வசீகரம் முக்கியம் ,
என் வார்த்தை ஜாலங்கள் முக்கியம் ,
என் உள்ள உறுதி முக்கியம் ,
நான் உடுத்தும் உடுப்புகள் முக்கியம் ,
என் தொழில் போட்டிகள் சமாளிப்பது முக்கியம் ,
எனக்கு தொல்லைதரும் புல்லுருவிகளை அடையாளம் காணுதல் முக்கியம் ,

இவை அனைத்திற்கும் மேலே,
என் தன்னம்பிக்கை முக்கியம் ...........

சூரியனும் ,நிலவும் மாறி ,மாறி ஓயுவு எடுப்பதை நானும் கண்டு ரசிகின்றேன் ..

நான் என்ன இயந்திர மனிதனா ,
இல்லை, இறைவன் படைத்த மனிதனா ?

நிரம்பி கிடக்கிறது என் முன்னே சவால்கள் ,
முதுகில் சுமக்கிறேன் அவை அனைத்தையும் ,

தரையில் கொட்டி கிடக்கிறது கண்ணாடி சிதறல்கள் ,
முயற்சி என்னும் பாத அணிகலனை அணிந்து கொண்டே முன்னறி செல்கின்றேன் ..

ஒரு நிமிடம் ஓயுவு போதும் ,
அந்த ஒரு நிமிடத்தில் ஓயுவு எடுத்துகொள்வேன் என் அன்னை மடியில் ..
என் பயணம் ,நான் இறந்தாலும் தொடரும் ,
என் கல்வெட்டில், பிறரின் கண்ணிற் துடைத்த பலனோடு ... ..

muthuvel
18-04-2010, 04:58 AM
இன்ப பாதையில் ,
மரண பயணம் ,
எய்ட்ஸ்.........
.......

நீ மறந்தாய் உறை,
பட்ட பின் உன் அனுபவத்தை ,
பிறருக்கு உரை..........


ஆசைக்கு இன்று அவளை அனை,
அதற்கு முன்னால் கொஞ்சம் நினை,
உன்னை நம்பி உனக்கு பின்னால் ஒரு மனை ..

muthuvel
19-04-2010, 08:05 AM
கவிழ்த்த கோப்பையில்,
நிரப்பமுடியாத நீர்,
நம் அறியாமை இருள்...வயிறு நிறைந்தது ,
திருடர்களுக்கு
ஊரில் மின்வெட்டு ........ஆ(நா)டு பகை,
குட்டி உறவு ,
சார்னியா மிர்சா ...

muthuvel
20-04-2010, 07:30 AM
அன்பு என்னும் வலையை எடுப்போம் ,
வீசி எறிவோம் உறவுகளுக்கு ,


உனக்கு அண்ணனாக அகந்தையும் ,
தம்பியாக கர்வமும் உன் வாழ்வின் இடையில் பிறப்பான் ,
சிரிக்கும் ,காந்தி காகிதம் உன் கையில் இருக்கும்போது,
இவனே, துச்சமாக நினைப்பான் பிறரை ..

கடிந்து கொள், உன்னிடம் காசு எதிர்பார்பவனிடம்,
கருணை கொள் ,உன்னிடம் அன்பு எதிர்பார்பவனிடம்.......பெருக்கு, உன் நண்பர்களை,
களி ,உன் விரோதிகளை,
கூட்டு ,உன் நற்பண்புகளை,
வகுத்து வை , உனக்கு நெருக்கமானவர்களை .. ..

நம்மை தவறாக புரிந்தவன் ,அது
நம் தவறு அல்ல , அவனுக்கு இன்னும் காலம் தேவை நம்மை பற்றி அறிய ..நம்மிடம் மதி அதிகமாக இருந்தாலும் ,
பிறரை மதிக்க கற்றுகொள்வோம் ,
மிதிக்க அல்ல ..

விட்டு கொடுப்போம் விரக்திகள் இல்லாமல்,

ஒரு நாள் ,ஒரு நிமிடம் போதும் ,அவனை நாம் நினைப்பேன் ,அவன் நம்மை நேசிபதால்...
மறதியில் மறந்துவிடுவோம் ,நம்மை மதிகாதவனை ..

பொறாமை தீயை சூரியனில் சுட்டரிபோம்,
சூட்சமத்தை கடலில் கரைப்போம் ..

பிறர் பணம் நமக்கு தேவை இல்லை ,
உன்னிடம் உழைப்பு இருக்கும் வரை..

பிறர் பொருள் தேவை இல்லை ,
உன்னிடம் வியர்வை தீரும்வரை ..

உன்னிடம் ,உடலில் எல்லாம் இழந்தாலும் ஒரு விரலாவது மிஞ்சட்டும் ,அந்த ஒரு விரல்லும் பயன் படட்டும் பிறர் கண்ணிற் துடைக்க ....

சொல்வது எளிதானாலும் ,
செயல்படுவது கடினம்தான் ..

ஒரு நிமிடம் யோசிப்போம் ,
வாழபோவது ஆயிரம் ஆண்டுகள் அல்ல,
அறுபது ஆண்டுகள் தான் அரவணைப்போம் அனைவரையும் ..


இப் பூமியில் வேற்றுமை தேவை இல்லை ,
ஒற்றுமை போதும் ..
எடுத்து காட்டாய் வாழ தேவை இல்லை ,
பிறரின் அன்பை கையில் எடுத்து வாழ்வோம் ..

இது அறிவுரை அல்ல ,
நம் அறியாமை இருள் இன்னும் புதைந்து கொண்டிருகிறது , அதை அன்பு என்னும் விளக்கால் ஒளி ஏற்றுவோம் ..

muthuvel
25-04-2010, 05:03 AM
உன்னை பற்றி,
என் உதடுகள் திறகாததை ,
என் உள்ளங்கள் திறக்கும் ,
என் காதல் கடிதம் வழியே ...

ஒலி இல்லாத மொழியா ?
இல்லை ,எனக்கும் ,உனக்கும் புரிந்த மொழியா ?
உன் மௌனம் ...........

புவி ஈர்ப்பு விசை ,
பூமிக்கு மட்டும் அல்ல ,
உன்னை போன்ற பூவுக்கும் உண்டோ?
நான் உன்னால் ஈர்க்க பட்டேனடி ...?

muthuvel
27-04-2010, 11:09 AM
ஆண்பால்,
பெண்பால்,
கலப்பால்,
இன்று,
ஊரார் வெறுப்பால்...பார்வதியின் பாதி,
சிவனின் பாதி,
கடவுள் என்பதாலோ அமைத்தனர் மாடவீதி ,
திருநங்கைகளுக்கு மட்டும் தெரு வீதி ,
இது என்ன நியதி ?

muthuvel
30-04-2010, 04:33 AM
உன் இதயம் என்னும் தொகுதியில் நிற்க ,
வேட்டுபுமனு என்னும் ஜாதகம்,
தாக்கல் செய்ததில் பல பேரில் நானும் ஒருவன் ,

எல்லா தகுதியும் உண்டென்று என்னை ஏற்றுகொண்டாய் ,

நான் இன்று பிரச்சாரம் செய்கின்றேன் ,
"மறந்துவிடாதீர் , மறந்தும் இருந்து வீடாதீர்" , என்ற வாசகத்தோடு ,
உனக்கும் எனக்கும் திருமண நாள் என்னும் தேர்தல் நாள்........

மொய் என்னும் வாக்கு சீட்டோடு அனைவரும் வந்து வாழ்த்தி வாக்களித்தனர் இது நல்ல கூட்டணி என்று,

சட்ட சபை என்னும் வாழ்க்கைக்குள் நானும் நீயும் காலடியெடுத்து வைத்தோம் ,

நம்முள் ,
கோடை கால கூட்ட தொடர் உண்டு,
குளிர் கால கூட்ட தொடர் உண்டு ,
பட்ஜெட் தாக்கலும் உண்டு,
வரவு செலவு கணக்கும் உண்டு ,

இருவருக்கும் ,
கேள்வி கணைகள் வரலாம் ,
குற்ற சாட்டுகள் வரலாம் ,
கோபங்கள் வரலாம் ,
விமர்சனங்கள் வரலாம் ,
ஆனால் ,வெறுப்புகள் மட்டும் வரக்குடாது.

நம் கூட்டணி ஆட்சி தொடரவேண்டும் அஞ்சு ஆண்டுகள் அல்ல அம்பது ஆண்டுகள் ..

muthuvel
08-05-2010, 08:09 AM
காடுகள் அழித்து,
விண்ணைத்தொடும் பல கட்டிடங்கள் ,
விவசாயம் நம்பிய பூமியில் ,

குளிர் அறையில் நீ உறங்க ,
வெய்யில் பாறையில் நான் உறங்கவோ ? ,

மாநிலங்களை கூறு போட்டது போதாதென்று ,
இன்று , மண்ணையும் கூறு போட்டாயோ ? ............


நாளை ,உன் மகன் கேள்வி கேட்பான் ,
இந்திய வரைபடத்தில், ஆறுகள் எங்கே என்று ?
என்ன பதில் சொல்வாய் ,உன்னை நீயே கேள் இன்று ...


வானம் பார்த்த பூமி என் பூமி ,
இன்று, பணம் பார்த்த பூமியை மாறியது என்ன ?..உன் கண்களுக்கு .............


மகுடி ஓசையில் மயங்கிய பாம்பாய் நான் ,
உன் ஆசை வார்த்தைக்கு மயங்கினேனே ?
யானை பசிக்கு சோள பொறியாய் ,
என்னை போன்ற ஏழை நிலத்துக்கு நீ கொடுக்கும் பணம் ..........

என் மகனோடு நானும் காத்திருக்கிறேன் ,
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ,
நீ அளித்த வேலை உத்தரவாதத்தில் ..........

காடுகளை காசாக்கி கணிபொறி வாங்கினாய் ,
வயல்களை வயதாக்கி வானை தொட முயற்சி செய்கிறாய் ,
கூரைகளை தகர்த்தெறிந்து மென்பொருள் தகடுகள் செய்தாய் ,
குளங்களுக்கு சமாதி கட்டி ,குளுகுளு வண்டி வாங்கினாய்..,


நாளை நம் சந்ததிகள் கழுதைகளாகிவிடுமோ,
காகிதங்கள் மட்டும் உண்ணும் நிலை வருமோ ?
விவசாயம் அழிந்ததால் ...........


இப்படிக்கு ,
விவசாய நிலம் கொடுத்து ஏமாந்த ஒரு ஏழை .

குணமதி
08-05-2010, 11:32 AM
தவறுதலாக இரட்டைப் பதிவாகிவிட்டதால் நீக்கியுள்ளேன் - குணமதி.

குணமதி
08-05-2010, 11:37 AM
ஆர்வத்தோடு எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுகிறேன்.
விண்ணைத்தொடும் - என்று திருத்தி விடுங்கள்.
QUALIS Car என்று ஆங்கிலத்தில் எழுதாமல், குளுகுளு உந்து என்றோ குளுகுளு வண்டி என்றோ அல்லது வேறு சொற்களிலோ தமிழில் அழகாக எழுதலாமே!
இதனை நல்லெண்ணப் பரிந்துரையாகக் கருதிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

muthuvel
13-05-2010, 06:32 AM
மனதில் ,பலம் இருந்தால் சோம்பல் வராது,
கையில் ,பணம் இருந்தால் உழைப்பு வராது ,

மனதில், அன்பு இருந்தால் அழுகை வராது ,
மனதில், விஷம் இருந்தால் அன்பு வராது ,


ஏதும் வழி இல்லை ,என்று எண்ணி முடங்கிவிடாதே ,
கை தூக்கி விட பல கரங்கள் உனக்காக காத்திருகின்றன ..

உனக்கு அறிவு இல்லை என்று அயர்து விடாதே ,
இதுவரை நீ வாழ்த்ததில் ஏதோ, நீ செய்த ஒரு சிறு வெற்றி ஒளிந்திருக்கும் .........

வயுறு நிறைய ,கையேந்துவதுதான் தவறு ,
பிறர் வாழ்வை கண்டு வயுறு எறிவதுதான் தவறு ,
பிறரின் பழி சொல் கேட்டு வருந்துவதுதான் தவறு ,
பிறரின் வெற்றியை கண்டு பொறாமை படுவதுதான் தவறு ,...........

தவறு இல்லை ,பிறரின் பணிக்காக பிறரிடம் பணிவது ,
தவறு இல்லை ,பிறரின் பணிக்காக பிறரிடம் கையேந்துவது ..

எல்லோரும் இப்பூமியில் ,திறமை என்னும் சாவியை தொலைத்துவிட்டோம் ,
அந்த சாவியை சீக்கிரமே, கண்டுபிடித்தவன் திறமைசாலி ,
கிடைக்காமல் ,அலுத்துபோனவன் ,செல்கிறான் , பாதை மாறி ...........

சாப்பிட்டு ,மிஞ்சிய உணவுகளை பூமிக்கு பாரமாக கொட்டுவார் சிலர்,
கொட்டியதை அலசி உண்பார் பிச்சைகாரர்கள் பலர் ,
இதை தடுத்து நிறுத்த கடவுளிடம் இல்லை பவர் ..

தனக்காக ,மட்டும் வாழும் சுய நல உலகத்தில்,
தகுதி படைத்தோர் தவிகின்றனர் தரணி எங்கும் ..

தன் திறமை தெரியவில்லையோ ,
"திருடனாய்" மாறியவனுக்கு?

வாழ வழி தெரியவில்லையோ ,
"வழி"பறி செய்பவனுக்கு ?

காசுக்காக ,
கருணையை மறந்தானோ,
கொலை செய்பவனுக்கு ?

எந்த தீய செயல் செய்யவும் ,பயன் படும் உன் திறமையை ,
நல்ல செயலுக்கு புரிந்தால் என்ன ?
உன்னை நீயே கேள் ,

போனது போகட்டும் என்று ,
கண்ணிற் துடைத்து எழிந்திரு,
நாளைய விடியல் அல்ல,
இன்றைய அஸ்தமனம் கூட ,
சொல்லிவிட்டு போகிறது ,
நாளை நாம் செய்ய வேண்டிய செயல்களை ..............

வார்த்தை ஜாலங்களால் உன்னை ஏமாற்றுவோர் அதிகம் ,
வஞ்சனைகள் அதிகம் ,
வாரிவிடும் கூட்டங்கள் அதிகம் ,
சளைக்காமல் போராடுவோம் ...
நாம் உயருவது ,
நம்மோடு நாலு பேரும் உயர்வதர்க்குதான் ..

சிவா.ஜி
13-05-2010, 07:31 AM
நல்ல சிந்தனைகள் முத்துவேல். நிறைய விஷயங்களை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

muthuvel
18-05-2010, 07:14 AM
காதுகிழியும் இரைச்சல் சத்தத்தில் இசையை கேட்கும் தோழா ,
உன் தாயின் தாலாட்டு நீ கேட்டதை கொஞ்சம் எண்ணி பார் ...........

அவசர உலகத்தில் அரைவேக்காடு உணவை உண்ணும் தோழா ,
உன் தாய் கையால் உணவருந்தியத்தை கொஞ்சம் எண்ணி பார் ,


கணினி முன் தவம் கிடக்கும் தோழா,
உன்னை தவம் கிடந்து பெற்றடுதவளை கொஞ்சம் எண்ணி பார் ..

கேளிக்கைகளில் தோழிகளுடன் நடனம் ஆடுவதையே சுவர்க்கம் என்று கருதும் தோழா,
உன் தாயின் மடியில் படுத்து உறங்கிய ,சொர்கத்தை கொஞ்சம் எண்ணி பார் ...

நாகரிகம் என்று எண்ணி ,நாலு பேருக்கு தெரியும் அளவு உடை அணியும் தோழியே ,
பிறரின் கேலிகளை கேட்டு, ஐஸ் லாந்து எரிமலையாய் வெடிக்கும் உன் தாயின் மனதை கொஞ்சம் எண்ணி பார் .........


பாகத்தில் பங்கு கேட்கும் என் தோழா,
ஒரு துளி கஞ்சியையும் ,சிறு மூலகூறாக உன் தாய் பங்கிட்டு கொடுத்ததை கொஞ்சம் எண்ணி பார் ..

உன் உயிரை சுமக்கும் ,உன் தாரம் படும் வேதனையை ,
அன்று , உனக்காக ,உன் தாய் பட்ட வேதனையை கொஞ்சம் எண்ணி பார்............ ....


ஆத்திகன் கூட ,கடவுள் உண்டு என்று நம்பும் ஒரே கடவுள் ,
தாய்தான் ,
என்று உணர்ததை கொஞ்சம் எண்ணிப்பார்........

muthuvel
23-05-2010, 02:06 PM
உடைந்தது,
பளபளக்கும் ,
கண்ணாடி ,
அவள் முகத்தில் கீறல் ...


இரவில் மின்வெட்டு ,
கொடுப்பவன் ,
சூரியன் ...

இவனின் தள்ளாட்டம் ,
வீட்டில் திண்டாட்டம் ,
குடிகாரன் ...

புவியின் செல் அரிக்கும்
பூச்சி ,
பாலிதீன் பை ...

சாலையோர
தடைகற்கள்,
திருஷ்டி பூசணிக்காய் ...கரை அடைந்தும்,
கரை சேரவில்லை ,
விமான விபத்து ....

புவியில் ,பாவிகள் பெருகி,
அப்பாவிகள் கருகி,
விமான விபத்து ....

ஊதிய அடுப்பில்,
எரிந்தது விளக்கு,
ஏழை மாணவி பள்ளி தேர்வில் முதலிடம்... .......

பாலகன்
23-05-2010, 02:36 PM
அன்பு நண்பரே,

தாயை பற்றிய தங்களது கவிதை அருமை. இன்றைய இளைஞர்களின் பிரச்சனையே இதுதானே.. பழையதை மறத்தல்.
அடுத்ததாக தந்த இருவரி ஹக்கூக்கள் ஒவ்வொன்றும் முத்துச்சரம்
தொடரட்டும் உங்கள் மன்றச் சேவை

muthuvel
24-05-2010, 07:22 AM
அன்பு நண்பரே,

தாயை பற்றிய தங்களது கவிதை அருமை. இன்றைய இளைஞர்களின் பிரச்சனையே இதுதானே.. பழையதை மறத்தல்.
அடுத்ததாக தந்த இருவரி ஹக்கூக்கள் ஒவ்வொன்றும் முத்துச்சரம்
தொடரட்டும் உங்கள் மன்றச் சேவை

பாராட்டுக்கு நன்றி திரு மகா பிரபு அவர்களே

muthuvel
24-05-2010, 10:51 AM
இணாமில் இங்கே ,
இல்லாமல் அங்கே ,
இலங்கை தமிழன் ...............பலன் கிடைத்தது ,
கை மேல்,
லஞ்சம் ...


இரவு வடித்த கண்ணீர்,
புல்வெளியில் ,
பனித்துளி .....

எங்கும் மணம் வீசியது ,
மனங்கள் இணைந்ததால்,
திருமணம் ...


கணக்கெடுத்தனர் ஜாதி,
பணம் கொடுத்தனர் மீதி,
அடமானத்தில் தொகுதி ...


விலை வாசி ,
ஏற்றம் ,
நியாய விலைகடை ..

கிறிஸ்தவர்கள் ,
போதித்தனர் அன்பு,
பாதித்தனர் பின்பு ,
ஊரில் கலவரம்.............


விமான விபத்து ,
உலகிற்கு உரைத்தனர்,
மத ஒற்றுமை .......

muthuvel
26-05-2010, 01:54 PM
இத்தனை இரவுகள், என் வாசல் வரை வந்து போயாச்சு ,அத்தனையும் வீணாய் போனது என்ன ?
அந்த அத்தனை இரவுகளும் இப்பொழுது மொத்தமாய் தீர்வது என்ன ?உன் இரு கைகள் என்ன ? மேகங்களா ?
அடிகடி மூடி மறைகிறாய் உன் முகத்தை ...

சத்தமில்லாமல் ,
வீணை மீட்டுகிறாள் ,
உன் விழிகளால் ...

எல்லா பெண்களின் அழகும் ,
உன்னிடம் உண்டு...
ஆனால் , உன்னிடம் இருக்கும் அழகு , வேறெந்த பெண்ணிடமும் இல்லை ....


என் வாழ்க்கை பாதையின் வழிகாட்டுதலாய்,
தாய் நாடும் , தாயும் என் இருகண்களாக
இருக்கும் போது,
எனக்கு நெற்றி கண்ணாய் ,
காதலியே நீ இரு ......

சிவா.ஜி
26-05-2010, 04:09 PM
சத்தமில்லாமல்
வீணை மீட்டுகிறாய்...

என வரவேண்டும் முத்துவேல். மீட்டுகிறாள் என்றால்...உன் விழிகளால் என வராது....அவள் விழிகளால் என வரும்.

நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள் முத்துவேல்.

muthuvel
27-05-2010, 08:49 AM
தமிழனே ,
தமிழகத்தில் வானம் பொய்த்தால் ,
இலங்கை தமிழனின் கண்ணீரை மட்டும்
கடன் வாங்கி , இயற்கையிடம் கொடு , ,
சிரபுஞ்சியாய் மாறும் நம் தமிழ்நாடு ....

ஆதி
27-05-2010, 09:48 AM
//என் வாழ்க்கை பாதையின் வழிகாட்டுதலாய்,
தாய் நாடும் , தாயும் என் இருகண்களாக
இருக்கும் போது,
எனக்கு நெற்றி கண்ணாய் ,
காதலியே நீ இரு ......//

அப்படியானால் அவள் எப்போதும் எரிந்தெரிந்து விழுவாளோ ?

நெற்றி கண்ணின் தன்மையாவது எரிப்பது, அதான் கேட்கிறேன் :)

வாழ்த்துக்கள்..

muthuvel
28-05-2010, 06:55 AM
வாழ்க்கை சுழற்சி முறை -


பசியோடு இருப்பவன் ,உணவை எதிர்பார்த்து ,
உணவு கிடைத்தவன் , உறைவிடத்தை எதிர்பார்த்து ,
உறைவிடம் கிடைத்தவன் , பணத்தை எதிர்பார்த்து ,
பணம் கிடைத்தவன் , பணத்தை ,மேலும் எதிர்பார்த்து ,
மேலும் ,பணம் கிடைத்தவன் ,செய்யகூடாத
ஆசைகளை எதிர்பார்த்து ,
ஆசைகள் கிடைத்தவன் ,தவறுகளை எதிர்பார்த்து ,
தவறுகள் செய்தவன் ,தண்டனையை எதிர்பார்த்து ,
தண்டனை கிடைத்தவன், மரணத்தை எதிர்பார்த்து ,
மரணத்தை எதிர்பார்த்தவன் , பிறரின் அன்பை எதிர்பார்த்து ,...........
இதில் நாம் எந்த இடத்தில் இப்பொழுது எதிர்பார்த்து ..?

muthuvel
28-05-2010, 01:23 PM
புத்தகம் சுமக்கும் ,
கையில், தீப்பெட்டி
தொழிற்- கல்வி?


புள்ளிகளில் யெழுதிய ,
கவிதை வரிகள்,
அவள் போட்ட கோலம் ................குடிப்பதை நிறுத்து ,
பசிக்கும் குழந்தைக்கு கொடு,
பால் குடிக்கும் பிள்ளையார்......காதலில் ,வென்றவர்களுக்கு சின்னம்,
தோற்றவர்களுக்கு சமாதி,
தாஜ்மஹால்...


யானை காதுகளில் ,
எறும்புகள் ,
மாவோஈஸ்ட் தீவிரவாதிகள் ...

இயற்கையின் அநீதி ,
கடலில் கலப்படம் ,
மழை நீர் கலந்து...

muthuvel
31-05-2010, 07:33 AM
கம்பி வலையில்,
கொள்ளை லாபம்,
டாஸ்மார்க் ...


அரசாங்கம் நடத்தும் ,
உயிர் கொல்லி மருந்து,
டாஸ்மார்க்...

இறந்த பின் ,
ஆறடி நிலம் வாங்கினேன்,
டாஸ்மார்க் ..................

மனைவியின் தாலி,
மதுவில் காலி ,
டாஸ்மார்க்...

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி,
"Bar" rum ,பீரும் உடலுக்கு கெடுதி ...


திடமாக இருந்தவன் ,
திரவம் அருந்தி ,
வாயுவானான்,
மரணத்தை தழுவி .....

நாட்டுக்கு வருவாய் ,
வீட்டுக்கு செலவாய்,
டாஸ்மார்க் ...


சிறு துளி நாவில் பட்டு ,
பெரு வெள்ளத்தில் மூழ்கியது ,
வீடு ,
டாஸ்மார்க்...

இடைவேளை இல்லா , திரைபடத்தில் ,
நிரம்பி வழியும் ரசிகர் கூட்டம் ,
டாஸ்மார்க்...

விவேகானந்தர் கூற்று ,
விரைந்து வா , விடியலை நோக்கி ,
டாஸ்மார்க் போதை தெளிந்த பின் .......

சிவா.ஜி
31-05-2010, 09:16 AM
சின்னச்சின்னக் கவிதைகள் நல்லாருக்கு முத்துவேல். திட, திரவ, வாயு சூப்பர்.

வாழ்த்துக்கள்.

muthuvel
02-06-2010, 01:26 PM
உலகத்தில் உள்ள கழுகுகளே ,
நீ உணவுக்கு அலைய வேண்டாம் ,
ஓடிவா,எங்கள் , தமிழ் ஈழத்துக்கு ....

muthuvel
03-06-2010, 01:44 PM
நாம் , பிறருக்காக உதவிய பிறரின் கைகள், நம் சவ கட்டைகளை அடுக்கட்டும்...............


நாம், பிறருக்காக துயர் துடைத்த பிறரின் கண்கள் ,நமக்காக அழட்டும்...பிறர் பாதம் நோகாமல் இருக்க , நம் கைகளை கொடுத்து தாங்கிய பிறரின் கால்கள் ,
நமக்காக, நம் இறுதி ஊர்வலத்திற்கு வரட்டும் ..


பிறரின் வாழ்வுக்கு நாம் ஏற்றிய வாழ்க்கை விளக்கு , நமக்காக தீப்பந்தம் ஏந்தட்டும் ...

நமக்கு எதிராய் ,சதி செய்தவனும் ,நம் அன்பை அறிந்து , நாம் இறந்த சாம்பலை கங்கையில் கரைகட்டும் ..

இவை அனைத்தும், நாம் இறந்த பின் நமக்கு கிடைத்தால்,நாம் யார் என்று எந்த உலகம் உணரட்டும் ?

பாலகன்
03-06-2010, 02:10 PM
நாம் இறந்த பின் இந்த உலகம் சீக்கிரமாக நம்மை மறந்து அடுத்த நிகழ்வுகளில் மனதை கொன்டு செல்ல பார்க்கும்....

கவிதை அருமை முத்து

muthuvel
05-06-2010, 07:54 AM
சீட்டை கிழித்து ,
பணி நீக்கம் செய்தனர்,
தினசரி காலேண்டர்...


காலையில் சுட்டது ,
மாலையில் பொட்டலம் மடிக்க,
செய்தி தாள் ...


பூமியில் ,வெட்டியெடுக்கபடாத
பொன் ,
நேரம் காட்டும் ,
கடிகாரம் ...


இயற்கை தந்த ,
வெள்ளை தீவு ,
பிறை நிலவு ...


ஐந்தில் வளைந்தது ,
அம்பதில் நிமிர ,
ஆங்கில மழலையர் பள்ளி...

muthuvel
06-06-2010, 01:36 PM
உள்ளேயே இருந்தால் சோம்பல்,
வெளியேறினால் உழைப்பு ,
தொழிலாளியின் வியர்வை........


வெள்ளை காகிதத்தில் ,
கருப்பு புள்ளி ,
புது வீட்டில் திருஷ்டி பொம்மை .....

உயிர் உண்டு , உறுப்புகள் இல்லை,
உறுப்புகள் உண்டு , உயிர் இல்லை ,
இலங்கை தமிழன் ....


தவணை முறையில் ,
புற்று நோய் வாங்கினேன் ,
கடன் தொல்லை ...


கிழியாமல் நெய்தான் ,
கிழிந்த ஆடையோடு ,
நெசவாளி .....என் இதயத்திற்குள் ,
வானொலி பெட்டி ,
ஒலித்தது, அவள் பெயர் அலைவரிசையாய்............


அன்று ,மகனை அறிமுகபடுத்தியவள் ,
இன்று ,அறிமுகம் இல்லாதோரோடு,
முதியோர் இல்லம் ...

muthuvel
08-06-2010, 10:12 AM
ஏழைக்கு அநீதி ,
அன்றும்,இன்றும் ,
போபால் விஷ வாயு .....

muthuvel
08-06-2010, 11:10 AM
என்ன பாவம் செய்தோம் ,என்ன பாவம் செய்தோம் ,
இப்படியும் ஒரு அநீதி, காதினிலே விழுந்தாச்சு ,


கெட்ட காற்றை சுவாசிச்சு ,
என் உறவுகளும் போயாச்சு ,
என் ,உறுப்புகளும் முடமாச்சு ,
நல்ல சோறு தின்னு , ரொம்பவும் நாளாச்சு ,
இந்த தீர்ப்பை கேட்கதானோ , இத்தனை நாள் வீணாச்சு ,
செத்த, உயிரெல்லாம் பணமாக மாறி போச்சு ,
அந்த பணமெல்லாம் ,இப்ப கானல் நீராச்சு ,

என்னை படைச்ச ,இறைவா ,இந்த பூமி மேல, உனக்கு என்ன கோபம் ,
உன் கோபத்திற்கு இரையா,நான்தான் கிடைச்சேனா ?

வாக்கு கேட்டு வந்தவனும் வாய்திறக்கவில்லை ,
வாழ்கையை ,அழிச்சவனும் வாய்திறக்கவில்லை ,
வாக்கு அளிதததாலோ என்னவோ ,வசமாக மாட்டிகிட்டோம் ......

பகைவனுக்கும் ,உதவும், பண்பு நம்ம பாரதத்திற்கு உண்டு ,
நான், உன் பக்கத்திலே அழுகிறேனே , என் அழு குரல் கேட்கலையோ ?...


எந்த தீமைக்கும் காலம் பதில் சொல்லும் னு சொல்வாங்க ,
இப்ப , என் காலமும் முடுஞ்சுபோச்சே ?..........


இந்த தீர்ப்பின் தாமதம் தான் ,இன்றே , வேர்விட போகுது குற்றவாளிகள் தவறுகளை பயமிலாமல் செய்வதற்கு ,

அநியாயத்தின் , இறுதி பலியா ,
நாங்களே, இருந்துவிட்டு போகிறோம் ,

இனிமேலாவது யோசியுங்கள் ,
இருக்கும் ,சட்ட புத்தகத்தை ,
போகிபண்டிகையில் கொளுத்திட்டு ,

மறு பதிப்பு செய்யுங்க,
சட்டத்தை மறு பதிப்பு செய்யுங்க ...

muthuvel
10-06-2010, 09:34 AM
தமிழனே ,
உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு ,

அழைப்பிதழ் அனுப்பி விட்டாயா ?,

யாருக்கு அனுப்பினாய் ?,

யார்யாருகெல்லாம் அனுப்பினாய் ?,

எங்கிருந்து அனுப்பினாய்? ,

எப்படியெல்லாம் அனுப்பினாய் ? ,

எந்த வழியாக அனுப்பினாய் ?
,
எவ்வளவு செலவு செய்து அனுப்பினாய் ?

எத்தனை நாடுகளுக்கு அனுப்பினாய் ?

எத்தனை கண்டங்களுக்கு அனுப்பினாய் ?

வானவில்லுக்கு அனுப்பினாய ?

நட்சத்திரங்களுக்கு அனுப்பினாயா ?

அண்ட சராசரங்களுக்கு அனுப்பினாயா ?

யாரெல்லாம் வர சம்மதம் தெரிவித்தார்கள் ?

யார்யார்கெல்லாம் ,மாநாட்டில் அமர ,இடம் உண்டு ?

அழைப்பிதழ் அனைவரும் பெற்றுகொண்டார்களா ?

கடைசியாக , தமிழ் ஈழத்திற்கு, அழைப்பிதழ் அனுப்பிவிட்டாயா ?
அங்கே ,யார்யாருகெல்லாம் அனுப்பினாய் ?

இறந்தவர்களுக்கு அனுப்பினாயா ,
இல்லை ,அணு அணுவாய் இறந்து கொண்டிருபவர்களுக்கு அனுப்பினாயா ?

அதற்க்கு பதில் ,நீ வேண்டாம் என்று தூர ஒதுக்கிய கந்தல் ஆடைகளை அனுப்பு ?

பிச்சைக்கு போடும் பணத்தை , இலங்கை தமிழன் நிவாரண நிதி என்ற பெயரில் உண்டியல் குலுக்கி அனுப்பு ?,

பாவம் , நீ என்ன செய்வாய் ,தமிழ் நாட்டு தமிழனே ?
உனக்கே ஆயிரம் கவலைகள் ,
கொடுத்த இலவசங்கள் போதாதென்று ,இன்னும் வேண்டும் , இன்னும் வேண்டும் என்ற கவலை ?

இப்படிக்கு ,
தமிழன் மனசாட்சி

muthuvel
14-06-2010, 07:45 AM
காமத்தின் அடிப்படை ஏக்கம் ,
ஏக்கத்தின் அடிப்படை தவிப்பு ,
தவிப்பின் அடிப்படை ஆசை ,
ஆசையின் அடிப்படை ஆவல் ,
ஆவலின் அடிப்படை மோகம் ,
மோகத்தின் அடிப்படை மனம் ,
மனதின் அடிப்படை எண்ணம் ,
எண்ணத்தின் அடிப்படை ஒழுக்கம் ,
ஒழுக்கத்தின் அடிப்படை நற்பண்பு ,
நற்பண்பின் அடிப்படை நம்மை சுற்றி உள்ள சுழல்,
சுழலின் அடிப்படை இயற்க்கை ,
இயற்கையின் அடிப்படை இந்த மானுட படைப்பு ,
இதில் எந்த இடத்தில் தடுமாறுகிறாயோ, அதை தடுத்து நிறுத்து .....

muthuvel
16-06-2010, 07:59 AM
என் சோகம் , அதை மறைக்க முடியவில்லை ,
என் பிரிவு ,அதை தடுக்க முடியவில்லை ,
என் அழுகை , அதை அடக்க முடியவில்லை ,
என் வேதனை , அதை யாரும் புரிந்து கொள்ளவில்லை
என் சுதந்திரம், அதை சுவாசிக்க முடியவில்லை ,
என் இல்லம் ,அதில் வாழ முடியவில்லை ,
என் வயல் , அதில் அறுவடை செய்யமுடியவில்லை ,
என் மக்களின் பிணங்கள் , அது அழுகுவதை, எரிக்க முடியவில்லை,
என் முள் வேலி ,அதை உடைத்தெறிய முடியவில்லை ,
என் பசி , அதை ருசித்து உன்ன முடியவில்லை,
என் ஆடை , அவற்றின் கிழிசலை தைக்க முடியவில்லை,
என் அடிமைவிலங்கு , அதை விலக்கி கொள்ள முடியவில்லை,
என் வேண்டுகோள் , அதை கேட்பதற்கு உலகத்தில் காதுகள் இல்லை,
என் இன பெண்களின் கற்பு , அதற்க்கு உத்திரவாதம் இல்லை ,

muthuvel
26-06-2010, 01:02 PM
நான் தமிழ் வழி கல்வி பயின்ற மாணவன் ,

சாலைகள் இல்லாத கிராமத்தில் ,நடந்தே பள்ளிக்கு சென்றவன்

கிழிந்த ஆடையோடு வகுப்பறையில் அமர்தவன் ,

அரசாங்கம் கொடுக்கும் சீருடையை பெற ,தவம் கிடப்பவன் ,

பள்ளி கொடுத்த பல் பொடியை தானமாக பெற்று, பல் துலகியவன் ,

மதிய உணவுக்காக மட்டுமே பள்ளி சென்றவன் ,

தரமில்லாத சத்துணவு சாப்பாட்டை சாப்பிட்டவன் ,

ஆசிரியர் பற்றாக்குறையில் ,ஏகலைவன் போல அனைத்து பாடமும் பயின்றவன் ,

பூனைகள் தூங்குவதை என் வீட்டு சமையல்கட்டில் கண்டவன் .

மழைக்கு கூட ஒதுங்க முடியாத ஓட்டை, விரிசல் பள்ளியில் கல்வி கற்றவன் ,

கணினியை கனவிலே கண்டவன் ,

பாத அணிகளை அணியாதவன் ,

எங்களையே தெரியாத , எங்கள் மக்களவை உறுப்பினர் வென்று ஜெய்த தொகுதியில் பிறந்தவன் ,

கல்வி ஆண்டு மலரில்தான் ஒலிபெருக்கியை பார்த்தவன் ,

எங்கள் ஊரை தவிர வேறொன்றும் அறியாத உலக அறிவை பெற்றவன் ,

கஷ்ட பட்டு படித்தவன் ,

நான் ஒருவனே பள்ளியில் ,,தேர்வானவன் ,

கல்லூரி படிப்பை தொடர்தவன் ,

ஆங்கில மோகம் கொண்ட கல்லூரி வாசலில் , தாழ்வு மனப்பான்மையில் துவண்டவன் ,

நுனி நாக்கு ஆங்கிலம் தெரியாதவன் ,


"தமிழ்- ஆங்கிலம்" ,மொழி மாற்று புத்தகத்தை பைபிள் லாக பயன்படுத்தியவன் ,

கடின உழைப்பை நம்பியவன் ,

மற்றவர்களை விட இரு மடங்காக படிபதர்ற்கு , நேரம் ஒதுகியவன் ,

என் இமைகளே, தானாக மூடுவதை அறியாதவன்


கல்லூரி படிப்பில் முதல் வகுப்பில் கரை ஏறியவன்,

வேலை வாய்ப்பை தேடி அலைந்தவன் ,

சரளமாக ஆங்கிலம் பேசதெரியாமல் பிறர் நகைப்புக்கு ஆளானவன் ,

நேர்முக தேர்வில் தோல்வி கண்டவன் ,

பொது விவாதத்தில் பேசமுடியாதவன் ,

தமிழ் வழி கல்வி பயின்ற எவனோ ஒருவன், பெற்ற வெற்றியை ,
என் தோல்வியோடு ஒப்பிட்டு பார்க்கும் சுற்றங்களின் ,அவமானத்திற்கு ஆளானவன் .

என் இமைகளை கொண்டே ,என் கண்ணீரை துடைத்தவன் ,

விடா முயற்சியை நம்பியவன் ,

இன்று ,வெற்றியும் பெற்றவன் ,

ஆனால், இன்னும் வெற்றி படியை தொடாதவர்கள் ,பல பேரை கண்டவன் ,

என் செம்மொழி மாநாட்டை கண்டு மனதை தேற்றியவன் .

அரசு வேலை வாய்ப்பில் தமிழ் வழி கல்வி கற்றவனுக்கு இட ஒதிக்கீடு
கிடைக்காதா ? என்று செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேறாதா ? என்று தவிப்பவன்

சிவா.ஜி
26-06-2010, 03:37 PM
ஒரு கிராமத்து தமிழ்வழிக் கல்வி பயின்ற*வனின் உள்ளக் குமுறலை, எதிர்பார்ப்பை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள் முத்துவேல்.

muthuvel
28-06-2010, 03:14 AM
திரு சிவாஜி அவர்களே , அனான் எழுதிய கவிதைக்கும் , நேட்ட்று முதல்வர் அவர்கள் அறிவித்த அறிக்கைக்கும் பொருத்தமாக உள்ளது , மேலும் இந்த இணைய தளத்தில் நீங்கள் ஒருவர்தான் என் கவிதையை படிகீரீர்கள் , மற்றும் என்னோடைய பதிப்பு அரநூற்றி பதிநேய்ளை தாண்டி விட்டது

சிவா.ஜி
28-06-2010, 06:32 AM
உங்கள் கவிதையில் கேள்வியாய் கேட்டதற்கு தமிழக அரசின் அறிவிப்பு பதிலாய் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி முத்துவேல். வாழ்த்துக்கள்.

muthuvel
30-06-2010, 07:24 AM
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ,
வங்கியில் போடலாம் என்றால், வட்டி குறைவு என்றார்கள் ,

அந்த பணத்தில் நிலம் வாங்கலாம் என்றால் ,
ஊரெங்கும் நில, மோசடியாம் ,வாங்க வேண்டாம் என்றார்கள் ,

தனியார் சீட்டு கம்பெனியில் போடலாம் என்றால் ,
அவர்களும் வாங்கி கொண்டு ஓடிவிடுகிறார்கள் ...


தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றால்,
அது ,விண்ணை விட உயரமாக ,விலை வாசி உள்ளது ..


வீட்டிலாவது பீரோவில் வைப்போம் என்றால்,
கொள்ளையர்கள், அதையும் திருடிவிடுகிரார்கள் ..

,கோவில் உண்டியலிலாவது போடலாம் என்றால் ,
பாவம் செய்தவர்கள் பணம் ,ஏற்கனவே ,உண்டியலை நிரப்பி உள்ளது ..

தானம் தர்மம் செய்யலாம் என்றால் ,
தன்னை விளம்பரபடுதுகிறான் ,என்று ஊரார் விமர்சிகிறார்கள்

நண்பனுக்கு உதவலாம் என்றால் ,
அவன் , அந்த பணத்திலே வாழுந்து கொண்டு சோம்பேறி ஆகிவிடுகிறான் ..

உறவினர்களுக்கு உதவலாம் என்றால் ,
அவர்கள் ,நமக்கு ,"பணத் திமிரு" என்று பட்டம் தருகிறார்கள் ..


சகோதரனுக்கு உதவலாம் என்றால் ,
தன் ,தன்மானம் தடுகிறது என்கிறான் ..

சகோதரிக்கு உதவினால் ,
சகோதரிக்கு ,வாழ்வு கொடுத்தவன் சுருட்டிகொள்கிறான்...

பணத்தை நம் கைகளில் வைத்துகொள்ளலாம் என்றால் ,
மரணத்தை மடியிலே சுமக்க வேண்டி உள்ளது

muthuvel
06-07-2010, 07:57 AM
பந்த் அறிவித்தவன், குளு குளு அறையில்,
தொண்டர்கள் கோடை வெயிலில் ,

ரயில்கள் நிறுத்தம் ,
பயணிகள் வருத்தம்


பள்ளிகள் அடைப்பு ,
மாணவர்கள் முகத்தில் சிரிப்பு ,

கடைகள் விடுமுறை ,
அன்றாட கஞ்சிக்கும் விடுமுறை ,

தலைவர்கள் போராட்டம் ,
பொதுமக்களுக்கு திண்டாட்டம் ,


கட்சிகளின் சாலை மறியல் ,
வேலைதேடுபவனுக்கு ,கண்ணீர் வந்தது விழியில் ,

ஓயுவு எடுத்தது ஆட்டோ, ஹாரன் ,
வருமானத்திற்கு ,தள்ளாடினான் ஆட்டோ காரன் ,சராசரி மனிதன் , திட்டமிட்ட நிகழ்ச்சி ,
இதனால் ,அதல பாதாளத்தில் விழுந்தது. வீழ்ச்சி ,

நாட்டுக்கு 130000000 -rs வருமானம் இழப்பு ,
இதை ஈடு கட்ட , மீண்டும் ,விலை வாசி உயர்வு அறிவிப்பு ,
மக்களின் தலையில், சுமை அதிகரிப்பு ,!எதிர்கட்சிகளுக்கு ,பந்த் வெற்றி,
ஆளுங்கட்சிகளுக்கு ,பந்த் தோல்வி ,
இவர்களிடம் , கேட்கவேண்டும் எதற்காக இந்த "பந்த்" என்ற கேள்வி !

shibly591
06-07-2010, 08:08 AM
உங்கள் எல்லா குறும்பாக்களுமே அருமையிலும் அருமை...தொடருங்கள் முத்துவேல்

shibly591
06-07-2010, 08:17 AM
உங்கள் எல்லா குறும்பாக்களுமே அருமையிலும் அருமை...தொடருங்கள் முத்துவேல்

muthuvel
07-07-2010, 03:54 AM
நன்றி

muthuvel
11-07-2010, 08:01 AM
நீ பட்ட துன்பம் ,
உன் எதிரிக்கும் வரகூடாது என்று நீ எண்ணினால் ,
நீ நல்ல மனிதன் தான் ..


நீ அடைந்த துயரம் ,
உன் நண்பனுக்கும் வரகூடாது என்று நீ எண்ணினால்,
நீ நல்ல மனிதன்தான் ...


நாலு பேரை அழவைத்து பார்ப்பதை விட,
சிரிக்க வைத்து பார்த்தல் ,
நீ நல்ல மனிதன்தான் ....


பிறர் பொருளுக்கும் ,
மனைவிக்கும் ஆசைபடாமல் இருந்தால் ,
நீ நல்ல மனிதன்தான் .....

பிறர் வயுற்றரிச்சலில் ,
உன் வயுறு நிறையாமல் இருந்தால் ,
நீ நல்ல மனிதன்தான் .....உன்னால் நாலு பேர்,
நன்றாக இருந்தால் ,
நீ ஒரு நல்ல மனிதன்தான் ...


நீ பெற்ற பிள்ளைக்கு சொத்து சேர்க்காமல் ,
உன் ஒழுக்கத்தை சேர்த்தால்,
நீ ஒரு நல்ல மனிதன் தான் ..

muthuvel
27-07-2010, 06:11 PM
என் மனதில் விதைத்தாய் காதல் "விதை" ,
அதனால் ,தொடர்கிறது நம் காதல் "கதை" ,
நம் காதலுக்கு பரிசாய் படைத்தேன் உன்னை பற்றி "கவிதை"

muthuvel
27-07-2010, 06:13 PM
நம்
தாயின் கருவறைலிருந்து பிறந்தபோது ,
நாம்
அறிந்ததில்லை ,நம்
ஜாதியின் பெயர் ? ...

நம்
உச்சி முதல் பாதம்வரை ,
நாம்
அணிந்திருக்கும் ஆடை,அணிகலன்களில் ,
கண்டதில்லை , நம் ஜாதியின் பெயர் ....


நாம்
உண்ணும் உணவின் அரிசியில் ,
எழுதி இருந்ததை பார்த்ததில்லை , நம் ஜாதியின் பெயர் ? ....

நம் மூச்சு காற்று ,
நம் ஜாதி பெயரை சொல்லிகொண்டே ,
நம் நாசிக்குள் நுழைவதில்லை ..


தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த காரணத்தால்,
பருகும் தண்ணீர் , அனைவரின்
தாகத்தை
தணிக்காமல் விட்டதில்லை ....ஜாதிகளின் ஏற்ற தாழ்வுகளை பார்த்து ,
மழைநீர் ,
பூமிக்கு வருவதில்லை ..


தாழ்த்தப்பட்ட ஜாதினரின் கண்களுக்கு மட்டும் ,
அகண்ட வானம் ,
அகப்படாமல் மறைந்ததில்லை ...


நாம் இறந்தபின் ,
சுடும் நெருப்பும் ,
ஜாதிகளின் , ஏற்ற தாழ்வுகளை ,பார்த்து ,
சுடாமல் இருந்ததில்லை ...