PDA

View Full Version : தனி தெலுங்கானா மாநிலம்



அறிஞர்
10-12-2009, 03:20 PM
தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக மத்திய அரசு அறிவித்தது.

தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவின் உடல் நிலை மோசம் அடைந்தது.

அதைத் தொடர்ந்து தனி தெலுங்கானா போராட்டம் தீவிரம் அடைந்ததால், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் நேற்று இரவு இரண்டு முறை முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். ஆந்திர முதல்-மந்திரி ரோசய்யாவும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின்னர், பிரதமர் மன்மோகன்சிங், ஆந்திர முதல்-மந்திரி ரோசய்யாவுடன் நடத்திய ஆலோசனைக்குப்பிறகு, தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

இந்த கூட்டத்துக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார். தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான முயற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், அது தொடர்பாக ஆந்திர மாநில சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்றும் சிதம்பரம் அறிவித்தார்.

உண்ணாவிரதம் இருந்துவரும் சந்திரசேகரராவின் உடல் நிலையில் மத்திய அரசு அக்கறை கொண்டு இருப்பதாகவும், அவர் உண்ணாவிரதத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்வதாகவும் சிதம்பரம் கூறினார். மேலும், போராட்டம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறும்படி, மாநில முதல்-மந்திரி ரோசய்யாவை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆந்திர சட்டசபையில் தீர்மானம் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று ப.சிதம்பரம் அறிவிக்கவில்லை என்றாலும், இன்றே சட்டசபையில் அதற்கான தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து கடந்த 11 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை சந்திரசேகர ராவ் நேற்று நள்ளிரவு கைவிட்டார். இதையடுத்து கடந்த 11 நாள்களாக ஆந்திரத்தை உலுக்கிய போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.

தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர். தெலுங்கானா பிராந்தியத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

நன்றி - கூடல்

பா.ராஜேஷ்
10-12-2009, 03:36 PM
ஆளாளுக்கு தனி மாநிலம் வேணும்னு உண்ணாவிரதம் இருந்தா நாடு என்ன ஆவது!!?

அறிஞர்
10-12-2009, 03:50 PM
தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: காங். எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விஜயவாடா தொகுதி காங்கிரஸ் எம்.பி. இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மேலும், 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகல் கடிதம் கொடுத்தனர்.

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி சந்திரசேகரராவ் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் தெலுங்கானாவில் போராட்டம் வெடித்தது. ஆந்திராவில் கலவரம் நீடித்ததால் தனி தெலுங்கானா மாநிலத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.

அதே சமயம் தெற்கு ஆந்திர மக்கள் தனி தெலுங்கானா மாநிலத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால் ஐதராபாத்தை ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையே தனித் தெலுங்கானா மாநிலத்துக்கு காங்கிரசிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜயவாடா தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தனது எம்.பி. பதவியை திடீர் என்று ராஜினாமா செய்தார். அவர் சபாநாயகர் மீராகுமாரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

மேலும் பல எம்.பி.க்கள் இன்று மாலை ராஜினாமா கடிதம் கொடுக்க தயாராகி வருகிறார்கள்.

அனந்தபுரம் மாவட்டம் தாடி பத்திரி தொகுதி காங்கிரஸ்எம்.எல்.ஏ. திவாகார் ரெட்டி சட்டசபை சபாநாயகர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவரை தொடர்ந்து மேலும் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

தெலுங்கானாவில் ஐதராபாத்தை சேர்க்க எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் மத்திய அரசுக்கு மிகவும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மிகவும் முக்கிய நகரம் ஐதராபாத். இதன் மூலம்தான் அதிக வருமானம் அரசுக்கு கிடைத்து வருகிறது. தெலுங்கானாவுக்கு ஐதராபாத் கிடைக்காவிட்டால் பொருளாதார ரீதியாக அம்மாநிலம் பின்தங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐதராபாத்தை கைப்பற்ற தெலுங்கானா பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.

இதே போல் ஐதராபாத் தெலுங்கானா கைவசம் போய்விட்டால் ஆந்திராவின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும். மாநிலத்தின் மிக முக்கிய நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. ஆந்திர மாணவர்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று கலக்கம் அடைந்துள்ளனர்.

(டிஎன்எஸ்)

பா.ராஜேஷ்
10-12-2009, 03:53 PM
சபாஷ்! சரியான போட்டி!!!

சிவா.ஜி
10-12-2009, 03:57 PM
இடியாப்ப சிக்கல்தான். நடுவண் அரசு என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஒருபக்கம் சாத்வீக உண்ணாவிரதம், மறுபக்கம் கலவரம்... இது எந்தமாதிரியான அரசியல் என்றே தெரியவில்லை.

முடியல.......!!!!

பால்ராஜ்
11-12-2009, 02:00 AM
நம்ம ஊர் ஆளுங்களுக்கு ஒரு அலாதி இன்பம்
ஒரு சிக்கலை உருவாக்குவது..
பின்னர் அதை அவிழ்க்க முயல்வது
பின்னர் அதை அப்படியே விட்டு விடுவது..

என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்...

சிதம்பரம் கொஞ்சம் நிதானமான மனுஷர் என்று நினைத்திருந்தேன்.....

aren
11-12-2009, 02:04 AM
தெலுங்கானா தனி மாநிலமாக வந்தால், கர்நாடகாவிலும் சிலர் தனி மாநில கோரிக்கையை எடுத்துக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரே மொழியாக தெலுங்கு மொழி உள்ளது. ஆனால் கர்நாடகாவில் மூன்று அல்லது நான்கு மொழிகள் உள்ளன.

மங்களூரை தலையமையகமாகக்கொண்டு உடுப்பி, சிர்வா போன்ற இடங்களை உள்ளடக்கி துளு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு தனி மாநிலம் உருவாகலாம்.

அதேபோல் கூர்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் தனி மாநிலம் வேண்டும் என்றும் கேட்பார்கள்.

பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள் மட்டும் இளிச்சவாயர்களா என்று சொல்லி மராட்டிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு தனி மாநிலம் கேட்பார்கள்.

இப்படியே போனால் வெறும் பெங்களூரும் மைசூரும் மட்டுமே கர்நாடகாவில் மிஞ்சும்.

ஆனால் ஒன்று, நமக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று சொன்னவர்களுக்கே தண்ணீர் இல்லாமல் போய்விடும்.

aren
11-12-2009, 02:06 AM
பெங்களூரைச் சேர்ந்தவர்கள் தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு தனி மாநிலம் கேட்டால் என்ன செய்வது.

கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம்.

arun
11-12-2009, 04:18 AM
தேவை இல்லாமல் தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று சொல்லி அவர்களாகவே சிக்கலை ஏற்படுத்தி கொண்டார்கள்

பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று

aren
11-12-2009, 04:53 AM
நாக்பூரைத் தலைநகராகக்கொண்டு விதர்பா என்ற மாநிலம் மகாராஷ்டிராவிலிந்து பிரித்துக்கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களக இருக்கிறது. அதை மறுபடியும் தூசிதட்டி வெளியே எடுத்துவிட்டார்கள் நேற்று.

இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

மறுபடியும் துக்ளக் ராஜ்யம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

தாமரை
11-12-2009, 05:24 AM
ஏம்பா கூடவே மதுரையை தலை நகரா வச்சி ஒரு மாநிலம் உண்டாக்கிட்டா என்ன, அப்படின்னு யாரும் ஆரம்பிக்கலியா?

மதி
11-12-2009, 05:46 AM
ஏம்பா கூடவே மதுரையை தலை நகரா வச்சி ஒரு மாநிலம் உண்டாக்கிட்டா என்ன, அப்படின்னு யாரும் ஆரம்பிக்கலியா?
நான் யோசிச்சேன்.. நீங்க கேட்டுட்டீங்க....~!

aren
11-12-2009, 05:55 AM
ஏம்பா கூடவே மதுரையை தலை நகரா வச்சி ஒரு மாநிலம் உண்டாக்கிட்டா என்ன, அப்படின்னு யாரும் ஆரம்பிக்கலியா?

இதுவும் நல்ல ஐடியாவாகத்தான் இருக்கும். மாநிலத்தின் பெயரை பாண்டிய நாடு என்று வைத்துவிடலாமா?

தஞ்சாவூரைத் தலைநகராக வைத்து சோழநாடு என்று ஒரு மாநிலத்தையும் ஆரம்பித்துவிடலாமா?

கோயமூத்தூர் ஆட்களும் வருகிறார்கள் அவர்களுடைய கோரிக்கைகளுடன்.

பல்லவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?

பால்ராஜ்
11-12-2009, 06:24 AM
சில நேரங்களில் சில மனிதர்கள் ....
எனபது போல..
சில நேரங்களில்... ஒன்றும் செய்யாமல் இருப்பதே நலம்..
இதற்குத்தான் .. Status Quo என்று கூறுவார்கள்..


அரசியலில் இது அற்புதமாகச் செயல்படும்..
ஏன் பயன்படுத்தவில்லை என்பது சிதம்பர ரகசியம்??

அறிஞர்
11-12-2009, 02:24 PM
தினகரன் தலையங்கம்

தெலுங்கானா மாநிலம் இப்போது திடீரென்று உருவாகவில்லை. எப்போதுமே இருந்திருக்கிறது. சென்னை மாகாணத்தில் இருந்து 1953ல் பிரிக்கப்பட்ட ஆந்திரா 1956ல் தெலுங்கானாவுடன் சேர்ந்தது. அதன் மூலம் ஆந்திர பிரதேசம் என்ற பெயரை பெற்றது. அதில் வடக்கே பரவியுள்ள தெலுங்கானா மேடான வறண்ட பூமி. ஆனால் ஆந்திரா வளம் மிகுந்த சமவெளி. நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி என்பதால் தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகம். சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களை ஒட்டி இருப்பதால் இந்தி, மராத்தி கலப்பும் கணிசமானது. எனவே சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த ஆந்திர மக்களுக்கு அந்த மொழியை புரிந்து கொள்வதே சிரமம். ஆடை முதல் சாப்பாடு வரை எல்லாமே வேறு மாதிரி.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான், இரு பகுதிகளையும் இணைத்தால் சரிப்படாது என்று மொழிவாரி மாநில சீரமைப்பு குழு கருத்து சொன்னது. மத்திய அரசு அதை ஏற்கவில்லை. ஆந்திரா & தெலுங்கானாவை ஒன்றாக்கியது. அன்று தொடங்கியது தெலுங்கானா போராட்டம். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வேறு திசையில் திரும்பி நின்று கொள்வது இக்கட்சிகளின் வாடிக்கையானது. இதனால் தெலுங்கானா மக்களுக்கு வெறுப்பு அதிகரித்தது. போராட்டம் தீவிரமானது. இதுவரை 400 உயிர்கள் பலியாகி உள்ளன. இதற்கு மேலும் வேடிக்கை பார்க்க முடியாது என்ற நிலையில் மத்திய அரசு சரியான முடிவை எடுத்திருக்கிறது. தவறை திருத்தும் நடவடிக்கை இது.
ஐதராபாத் நகரம் தெலுங்கானாவுக்கு கிடைப்பதால் குடி மூழ்கி விடாது. ஆந்திரா பிரிந்தபோது கர்நூல் தலைநகர். அப்புறம் முக்கிய நகராக விளங்கியது விஜயவாடா. ஐதராபாத் வளர்ச்சி சமீபகால சரித்திரம். அதை விட அழகான ஒரு தலைநகரை அனைத்து வசதிகளுடன் திட்டமிட்டு உருவாக்க ஆந்திராவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அல்லது கடலோர பெருநகரமான விசாகப்பட்டினத்தை சென்னைக்கு சவால் விடும் வகையில் மேம்படுத்தலாம்.

ஜார்கண்ட், உத்தர்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வராத நிலையில் தெலுங்கானாவை மட்டும் மற்ற பகுதி மக்கள் ஆட்சேபிப்பது குறுகிய பார்வையை காட்டுகிறது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல இந்த அணுகுமுறை.

அறிஞர்
11-12-2009, 02:31 PM
http://epaper.dinakaran.com/pdf/2009/12/11/20091211a_010101007.jpg
நன்றி தினகரன்

aren
12-12-2009, 02:05 AM
தினகரனின் செய்தி பல விஷயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. அப்படி தெலுங்கானா தனியாகச் செல்லும்பட்சத்தில் அதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது. ஹதராபாத் அதனுடன் இருந்தால் பெரிய நகரம் என்றபட்சத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி இல்லாமல் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக மாற்றிவிட்டால் தெலுங்கானாவின் நிலமை மோசமாகிவிடும் என்றே நான் நினைக்கிறேன்.

தினகரன் செய்தி சொல்வதுபோல், பிரிந்த ஆந்திரப்பரதேசம் இன்னும் முன்னேற வாய்ப்பிருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது.

இதன்மூலம் இன்னும் பல மாநிலங்களில் பிரிவினை விஷம் தலைக்கேறி இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதுதான் கொஞ்சம் வருத்தப்படவேண்டிய விஷயம்.

richard
12-12-2009, 09:59 AM
தெலுங்கானா தனி மாநிலமாக வந்தால், கர்நாடகாவிலும் சிலர் தனி மாநில கோரிக்கையை எடுத்துக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரே மொழியாக தெலுங்கு மொழி உள்ளது. ஆனால் கர்நாடகாவில் மூன்று அல்லது நான்கு மொழிகள் உள்ளன.

மங்களூரை தலையமையகமாகக்கொண்டு உடுப்பி, சிர்வா போன்ற இடங்களை உள்ளடக்கி துளு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு தனி மாநிலம் உருவாகலாம்.

அதேபோல் கூர்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் தனி மாநிலம் வேண்டும் என்றும் கேட்பார்கள்.

பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள் மட்டும் இளிச்சவாயர்களா என்று சொல்லி மராட்டிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு தனி மாநிலம் கேட்பார்கள்.

இப்படியே போனால் வெறும் பெங்களூரும் மைசூரும் மட்டுமே கர்நாடகாவில் மிஞ்சும்.

ஆனால் ஒன்று, நமக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று சொன்னவர்களுக்கே தண்ணீர் இல்லாமல் போய்விடும்.

கர்நாடகாவில் இப்போது நிலமை அப்படித்தான் உள்ளது

உதயா
16-12-2009, 10:46 AM
சிதம்பரம் கொஞ்சம் நிதானமான மனுஷர் என்று நினைத்திருந்தேன்.....
இவர் மட்டுமே எடுத்த முடிவாக இருக்காதே?

ஆளும் கட்சிகளுக்கு இப்போது வயிற்றில் கடமுட ஆகி இருக்கும். காரணம், ஆளு ஆளுக்கு மாநிலம் (ஒரே மாநிலத்தில் இருந்து பல மாநிலம் ) கேட்டால், கொள்ளையடிப்பதில் பகுதி கூட தேராமல் போய்விடுமே. அதான்.

அறிஞர்
16-12-2009, 02:16 PM
ஒரு தனிப்பட்ட மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது.

என்னுடன் வேலை பார்க்கும் நண்பர்... தெலுங்கானாவை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு பஞ்சாயத்தில் ஆர்.எஸ்.பி கட்சி துவங்க காரணமாக இருந்தவர். அவரின் வாதம் பிரிவினை.. தெலுங்கானாவை பாதிக்கும் என்பதே...

ஹைதராபாத் மட்டுமே வளச்சிடையும்... வேறு எந்த பகுதியிலும் முன்னேற்றம் இருக்காது. வானம் பார்த்த பூமி தான் தெலுங்கானா..

பா.ராஜேஷ்
16-12-2009, 03:39 PM
தினகரனின் பதிவை தந்து தெளிவு படுத்திய அறிஞருக்கு நன்றிகள் பல...