PDA

View Full Version : என் மனம்



muthuvel
10-12-2009, 12:00 AM
என் மனம் கல்தான் நீ என்னை அவமானபடுதும்போது ..........

என் மனம் பனி கட்டிதான் நீ என் மேல் அன்பு செலுத்தும் போது.......


என் மனம் எரிமலைதான் ,உன் துன்பத்தை என்னிடம் பகிர்து கொள்ளும்போது .....

என் மனம் விளக்குதான் , பிறர் வாழ்வுக்கு வெளிச்சம் கொடுக்கும்போது ...

என் மனம் குரங்குதான் ,செல் போன் வாங்கும்போது ...

என் மனம் பட்டாம் பூச்சிதான் ,இந்த நொடியை அனுபவிகும்பொழுது...

என் மனம் பேய் தான் ,கடந்த கால கசப்புகளை நீனைகும்பொழுது...

என் மனம் பறவைதான் , சாதிகும்பொழுது ...

என் மனம் வள்ளல்தான் , பிறரிடம் அன்பு செலுத்தும் பொழுது ..

என் மனம் கருமிதான் , பிறருக்கு துரோகம் நீனைகும்பொழுது ..

.
என் மனம் வவ்வால்தான் , அதிக உதியதிற்காக தாவும்பொழுது .....

என் மனம் கடுகுதான் , காமம் , பிற பெண்களை பார்க்கும்பொழுது ...

என் மனம் அசுத்தம் தான் , சுத்தமில்லா எண்ணம் மனதில் விதைத்த பொழுது ..

என் மனம் மரகட்டை தான் , பிறருக்கு என்றுமே உதவாத போது ...

என் மனம் சைத்தான் தான் , பெற்றோரை மறந்த பொழுது ...


என் மனம் பட்சோந்தி தான் ,நன்றி மறந்த போது .........


என் மனம் மெளுகு வர்திதான் , வாரி வழங்கும்பொழுது ...

சிவா.ஜி
10-12-2009, 05:11 AM
தன்மனம் பற்றி தயங்காமல் சொல்லும் நல கவிதை. எப்போதெல்லாம், எப்படியெல்லாம் இருக்கும் இந்த மனம்ர்ன்பது என சொன்ன வரிகள் அழகு.

வாழ்த்துகள் முத்துவேல்.

(தயவுசெய்து கவிதைக்குத் தமிழில் ஒரு தலைப்பு வையுங்கள்.)

குணமதி
10-12-2009, 10:24 AM
மனம் எப்படி இருக்க வேண்டுமென்று ஒவ்வொன்றாய் அடுக்கும் வீச்சு.
நன்றாக உள்ளது.