PDA

View Full Version : ஹைகூ



muthuvel
09-12-2009, 11:56 PM
லாபத்தை நாட்டுக்கும் ,
நஷ்டத்தை வீட்டுக்கும் ,
இன்றைய
குடி மகன் ,
டாஸ்மார்க்கில்....


நான் என்ன செய்வேன் ,
எல்லா பனிகளும் என் தலை மேல்
விழுகின்றன ,
புல்வெளிகள் ....

aren
10-12-2009, 12:46 AM
வாவ்!!!

இரண்டு ஹைகூவுமே நன்றாக உள்ளது.

புல்வெளிக்கு இருக்கும் இந்த பிரச்சனையை என்னவென்று சொல்வது. மழையும், வெய்யிலும் வேறு அதன் தலையிலேயே விழுகின்றன. ஒரு குடை தயாரிக்கவேண்டும் இவைகளுக்காக.

இன்னும் கொடுங்கள்.

கா.ரமேஷ்
10-12-2009, 03:24 AM
அருமையான ஹைகூ...
இரண்டாவது அற்புதம்... நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்..

சிவா.ஜி
10-12-2009, 04:58 AM
அருமையான சிந்தனை. இரண்டாவது ஹைக்கூவில் ஒரு சுழியில் கவிதையின் சுவையைக் கொண்டுவந்துவிட்டீர்கள். வாழ்த்துகள் முத்துவேல்.

ஆதி
10-12-2009, 07:58 AM
அருமை முத்துவேல் அழகிய குறுங்கவிதைகள்.. தொடர்ந்து படையுங்கள்..

ஒரு சின்ன விஷயம்.. இவை ஹைகூகள் கிடையாது.. குறும்பாக்கள் என்று மாற்றிவிடுங்கள்..

வெற்றி
10-12-2009, 11:46 AM
இரண்டாம் சமாச்சரம் நச்சுக்கு இருக்கு...
முதல் சாமச்சாரம் நானும் கொஞ்சம் யோசித்துப்பார்கிறேன்.. ம்ம்ம்ம்ம்


டாஸ்மாக் (அட நம்ம பச்ச போர்டு கடை தானுங்க)
பொய்கள் இல்லை
பேதம் இல்லை
ஒரு அராசங்கக்கூடம்

arun
10-12-2009, 12:17 PM
ஆகா இரண்டும் அருமை நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள்