PDA

View Full Version : ***என் இதயம் உன்னிடத்தில்***



இன்பக்கவி
09-12-2009, 07:38 AM
http://i.123g.us/c/love_newlove/card/101717.gif
உனக்காக இதயத்தையும்
விழிகளையும் வானையும்
தென்றலையும் நிலவையும்
பறவைகளையும் பூக்களையும்
தூதுவிட்டேன்
என் காதலை
உனக்கு உணர்த்த சொல்லி

பூவானது வாடி வந்து சொன்னது
நீ மறுத்துவிட்டாய் என்று
கலங்கி போய் வந்தன கண்கள்
உணர்ந்துகொண்டேன்

வான் இருண்டு போனது
நீ துரத்திவிட்டதால்
நிலவானது தேய்ந்து போனது
நீ பாராமுகமாய்
அனுப்பிவிட்டதால்

எனக்கு காரணம் சொல்ல தெரியாமல்
தென்றலோ திசை மாறி சென்றுவிட்டது

பறவையோ சோகமாய் வந்தது

இதயம் மட்டும் தூதாய் போய்
இன்றும் வர மறுக்கிறது

ஒரு வேளை என் இதயத்தை
மட்டும் வைத்து கொண்டு
எல்லாவற்றையும்
திருப்பி அனுப்பி விட்டாயோ

இதே நினைவில் வாழ்கிறேன்
நான்...
என் இதயம் உன்னிடத்தில்
தஞ்சமாய் இருப்பதால்

பா.ராஜேஷ்
09-12-2009, 11:12 AM
இதயம் மட்டும்
இடம் பிடிக்க
இன்னும் கவலை ஏன்!?

பாராட்டுக்கள் கவிதா....

பா.ராஜேஷ்
09-12-2009, 11:14 AM
மீண்டும் முந்தைய பதிவே இருப்பதால், அதை நீக்குகிறேன்...