PDA

View Full Version : வான்கோழிகள்!



குணமதி
09-12-2009, 02:55 AM
வான்கோழிகள்!


மாபெருங் கூட்டங்களில்,

மயக்கும் தொலைக்காட்சிகளில்,

மக்களை ஏமாற்றும் செய்தித்தாள்களில் -

நடிகர், நடிகையர்...

பண்பாட்டு விளக்க உரைகள்.


பெரிய செய்தியாளர் கூட்டங்களில்,

பெரும் கல்லூரி விழாக்களில்,

பொது மன்றங்களில் -

காவலதிகாரிகளின்...

'நேர்மை' விளக்க உரைகள்.


பொல்லாச் சிறகொடு -

வான்கோழிகள்.


குறிப்பு : பொதுவான உலகியல் நோக்கில் எழுதியிருக்கிறேன். விலக்குகள் உண்டு என்றும் தெரியும். அவர்களைக் குறை கூறவில்லை.

கீதம்
09-12-2009, 10:31 AM
[COLOR="Blue"][SIZE="5"]

குறிப்பு : பொதுவான உலகியல் நோக்கில் எழுதியிருக்கிறேன். விலக்குகள் உண்டு என்றும் தெரியும். அவர்களைக் குறை கூறவில்லை.

விலக்குகள் உண்டெனில் அவைதானே கானமயில்கள்? கவிதை மிக நன்று.

குணமதி
09-12-2009, 12:06 PM
விலக்குகள் உண்டெனில் அவைதானே கானமயில்கள்? கவிதை மிக நன்று.

உண்மை.

பின்னூட்டத்திற்கு நன்றி.

இளசு
09-12-2009, 07:35 PM
ஊருக்கு(மட்டும்) உபதேசம்..
சாத்தான் ஓதும் வேதம்...

உலக நடப்புதானே குணமதி..

கவிதைக்குப் பாராட்டுகள்.

கீதத்தின் பின்னூட்டம் சிறப்பு!

குணமதி
10-12-2009, 10:44 AM
ஊருக்கு(மட்டும்) உபதேசம்..
சாத்தான் ஓதும் வேதம்...

உலக நடப்புதானே குணமதி..

கவிதைக்குப் பாராட்டுகள்.

கீதத்தின் பின்னூட்டம் சிறப்பு!

நன்றி.