PDA

View Full Version : சலிப்பு....



Ravee
07-12-2009, 06:45 PM
http://farm4.static.flickr.com/3352/3427239038_3fcdce203b.jpg




சலிப்பு....



தினமும் தூங்கி

தினமும் எழுந்து

என்னடா வாழ்க்கை

என்று என் பாட்டி

இன்று காலை

எழ மறந்தால்

தன் எழுபதாம் வயதில்

இளசு
07-12-2009, 06:50 PM
முன்னர் 60..

தற்போது 70 வயது என்பது நம்மவர்க்கும் நம்மூருக்கும் சரி..

மேற்கில் 80 தாண்டியும் சலிக்காமல் எழுபவர் அதிகம்.

நம்மூரும் அவ்விடம் நோக்கி நகர்கிறது.


கவிதைக்குப் பாராட்டுகள் ரவீ...

குணமதி
08-12-2009, 03:09 AM
சலிப்பு....



தினமும் தூங்கி

தினமும் எழுந்து

என்னடா வாழ்க்கை

என்று என் பாட்டி

இன்று காலை

எழ மறந்தாள்

தன் எழுபதாம் வயதில்

பொதுவான, எளிய மாந்தரின் வாழ்க்கை பற்றிய எளிய விளக்கம்.
ஆயினும்,
எந்த எளிய மாந்த உயிரின் வாழ்விலும்-
அரிய பல நிகழ்வுகள்-
கற்றுக் கொள்ள வேண்டியவை
கடைப்பிடிக்க வேண்டியவை-
கட்டாயம் இருக்கும்.

நன்றி.

பா.ராஜேஷ்
09-12-2009, 11:42 AM
குணமதி திருத்தியதை தங்கள் கவிதையிலும் திருத்துங்களேன் ரவீ...

அமரன்
09-12-2009, 06:30 PM
நம்மவர் பலரது கடைநிலை கவிதையாக.

பாராட்டுகள் ரவீ!

muthuvel
15-12-2009, 08:16 AM
முன்னர் 60..

தற்போது 70 வயது என்பது நம்மவர்க்கும் நம்மூருக்கும் சரி..

மேற்கில் 80 தாண்டியும் சலிக்காமல் எழுபவர் அதிகம்.

நம்மூரும் அவ்விடம் நோக்கி நகர்கிறது.


கவிதைக்குப் பாராட்டுகள் ரவீ...

வாவ் வாவ் வாவ் , என்னன்னு சொல்ல ...