PDA

View Full Version : குழந்தையின் தேடல்



கீதம்
07-12-2009, 06:18 AM
ஒவ்வொரு அரிசியிலும்
அதற்கு உண்டானவரின் பெயரிருக்கும்
என்றாள் அம்மா!
தந்தை வாங்கித்தர மறுத்தபின்னும்
தேடுகிறது குழந்தை,
எந்தப் பஞ்சுமிட்டாய்ப் பொட்டலத்தில்
தன் பெயர் இருக்கக்கூடும் என்று!

(நன்றி: பதிவுகள்)

ஜனகன்
07-12-2009, 06:55 AM
அம்மாவின் சொல்லை வேதவாக்காய் கொண்டு, தனக்கு இடமானத்தை தேடுது குழந்தை.மிகவும் நல்லாய் இருக்கிறது உங்கள் வரிகள்.

குணமதி
08-12-2009, 03:07 AM
குழந்தையின் அவாவும் உள்ள வெளிப்பாடு!

நன்று.

பா.ராஜேஷ்
09-12-2009, 11:41 AM
குழந்தை மனதின் வெளிப்பாடு நன்று...

அமரன்
09-12-2009, 06:35 PM
கவிதைகள்
உணர்வை வெளிக்காட்டி
நமக்குள்
உணர்வைத் தூண்ட வேண்டும்.

இது கவிதை!

பாராட்டுகள் கீதம்!

இளசு
09-12-2009, 07:10 PM
அட என நிமிர்ந்தேன்..

அசத்துகிறீர்கள் கீதம்..


பாராட்டுகள்..

சிவா.ஜி
10-12-2009, 04:01 PM
அசத்தல். நச்சென்ற வரிகள் இதமாய் மனதில் பதிந்துவிடுகிறது. வாழ்த்துகள் கீதம்.

கீதம்
12-12-2009, 10:27 AM
குழந்தையின் மனதில் என்னமாதிரியான எண்ணவோட்டம் என்று நம்மால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. குழந்தையின் பார்வையில் ஒரு கவிதை படைத்தேன். உங்கள் அனைவருக்கும் பிடித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே!

கலையரசி
12-12-2009, 11:25 AM
குழந்தையின் தேடல் மனதை என்னவோ செய்கிறது. நல்ல கவிதை.

richard
12-12-2009, 01:22 PM
ஒவ்வொரு அரிசியிலும்
அதற்கு உண்டானவரின் பெயரிருக்கும்
என்றாள் அம்மா!
தந்தை வாங்கித்தர மறுத்தபின்னும்
தேடுகிறது குழந்தை,
எந்தப் பஞ்சுமிட்டாய்ப் பொட்டலத்தில்
தன் பெயர் இருக்கக்கூடும் என்று!

(நன்றி: பதிவுகள்)

ஏனோ மறுத்தார் தந்தை,அடம் பிடிக்கிறது என்றா!

கீதம்
15-12-2009, 10:31 AM
குழந்தையின் தேடல் மனதை என்னவோ செய்கிறது. நல்ல கவிதை.

நன்றி கலையரசி அவர்களே.

கீதம்
15-12-2009, 10:35 AM
ஏனோ மறுத்தார் தந்தை,அடம் பிடிக்கிறது என்றா!

தந்தை மறுக்கப் பல இன்மைகள் காரணமாக இருக்கலாம், பணமின்மை, நேரமின்மை, குழந்தைக்கு உடல் நலமின்மை இப்படி எத்தனையோ!

பின்னூட்டத்திற்கு நன்றி ரிச்சர்ட் அவர்களே.