PDA

View Full Version : எழுத்தாளனே!

குணமதி
06-12-2009, 03:26 PM
ஓட்டுக்குள் தலையை ஒளித்துக்கொள்!

எழுத்தாளனே!

எதற்காகவோ-

ஏனோ-

எதையோ-

தப்புந் தவறுமாய்...

தாறுமாறாய்...

எழுதிவிட்டு,

எல்லாரும் எதிர்த்த போது...

விடை சொல்ல முடியா இக்கட்டில்...

நீ சொன்னது :

எழுத்தாளனை எதுவும் கட்டுப்படுத்த முடியாது!

ஓட்டுக்குள் தலையை ஒளித்துக் கொள்!

சிவா.ஜி
06-12-2009, 03:46 PM
எதையோ ஒன்றை எழுதி, எதிர்ப்பிலேயே பெயர் சம்பாதிக்க நினைக்கும் எழுத்து வியாபாரிகளின் கடைசி அஸ்திரம் இந்த வாக்கியம்.

அறையும் உண்மையுடன் அழகான கவிதை.

வாழ்த்துகள் குணமதி.

meera
06-12-2009, 04:35 PM
சில அர்த்தமற்ற வார்த்தைகள் அர்த்தம் கேட்டால் புதிய அகராதியை தயார் செய்யும் சில அர்த்தமற்ற எழுத்தாளர்களுக்கு இது மிகப்பொருத்தம். அழகாண கவிதை. வாழ்த்துகள் குணமதி.

ஓட்டுக்குள் தலையை ஒளித்துக்கொள்!

எழுத்தாளனை எதுவும் கட்டுப்படுத்த மிடியாது!

ஓட்டுக்குள் தலையை ஒளித்துக் கொள்!

ஆமா இது என்ன முடியாதா? மிடியாதா?

தாமரை அண்ணா நாண் கண்டுபிடிச்சிட்டேன் வாங்க வாங்க

குணமதி
07-12-2009, 01:15 AM
எதையோ ஒன்றை எழுதி, எதிர்ப்பிலேயே பெயர் சம்பாதிக்க நினைக்கும் எழுத்து வியாபாரிகளின் கடைசி அஸ்திரம் இந்த வாக்கியம்.

அறையும் உண்மையுடன் அழகான கவிதை.

வாழ்த்துகள் குணமதி.

நன்றி சிவா.

குணமதி
07-12-2009, 01:20 AM
சில அர்த்தமற்ற வார்த்தைகள் அர்த்தம் கேட்டால் புதிய அகராதியை தயார் செய்யும் சில அர்த்தமற்ற எழுத்தாளர்களுக்கு இது மிகப்பொருத்தம். அழகாண கவிதை. வாழ்த்துகள் குணமதி.

ஆமா இது என்ன முடியாதா? மிடியாதா?

தாமரை அண்ணா நாண் கண்டுபிடிச்சிட்டேன் வாங்க வாங்க

பொறுத்தாற்றுக. தட்டச்சில் பிழை செய்தேன்.

சுட்டிக்காட்டியமைக்கு மனமார்ந்த நன்றி.

திருத்தி விட்டேன்.

ஓர் ஐயம்.

இங்கு 'நாண்' ஏதும் இல்லையே!

நாணைக் கண்டுபிடித்ததாகத் தாமரையாரை அழைப்பதேன்?

அன்புகூர்ந்து விளக்கம்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் நன்றி.

தாமரை
07-12-2009, 10:37 AM
நாண் = வெட்கம் கொள்.

தங்கைக்கு வெட்கம் என்றால் என்னன்னு இப்பதான் தெரிஞ்சிருக்காம்.

நல்லதுதானே.. குணமதி!!!

ஆதி
07-12-2009, 12:02 PM
நாண் = வெட்கம் கொள்.

தங்கைக்கு வெட்கம் என்றால் என்னன்னு இப்பதான் தெரிஞ்சிருக்காம்.

நல்லதுதானே.. குணமதி!!!

நாணத்துக்கும் வெட்கத்துக்கும் உள்ள வித்யாசத்தை கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லி இருப்பார் அண்ணா..

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம் நாணம்

தாமரை
07-12-2009, 12:44 PM
நாணத்துக்கும் வெட்கத்துக்கும் உள்ள வித்யாசத்தை கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லி இருப்பார் அண்ணா..

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம் நாணம்

பிடிக்காததால் வ்ருவது வெட்கம்
பிடிப்பதால் வருவது நாணம் என்கிறீரா?

ஆதி
08-12-2009, 03:16 AM
பிடிக்காததால் வ்ருவது வெட்கம்
பிடிப்பதால் வருவது நாணம் என்கிறீரா?

ஆமாங்கண்ணா..

நாணம் என்பது தன் இணை முன் மட்டுமே தோன்றும் என்கிறான்..

நாணம் ஆண் பெண் இருவருக்கும் உண்டு என்பதை கிள்ளியின் களிறுகள் நாணி புறம் நின்றதை வைத்து புரிந்து கொள்ளலாம்..

வெட்கம் என்பது எல்லோரிடமும் ஏற்படும்.. தயக்கத்தால், இயலாமையால், செய்த தவறுக்காய், தாழ்வு மனப்பான்மையால் என பட்டியல் நீளும்..

உங்களோட இரண்டு வரியிலயே நான் சொன்னவை எல்லாம் அடங்கீருச்சுங்கண்ணா.. இனி வந்து படிக்க இருப்பவங்களுக்காக கொஞ்சம் விரிவா சொன்னேன் அண்ணா.. கண்மணி அக்கா கூட என்னோட அந்தி பற்றிய கவிதையில் நாணம் எப்படி ஏற்படும் நு சொல்லிருப்பாங்களே அண்ணா..

பா.ராஜேஷ்
09-12-2009, 11:42 AM
எழுதுவதற்கு முன், பின்விளைவுகளை பற்றி ஒருக்கணம் யோசித்தாலும் போதுமே, இவ்வாறு வெட்கி தலை குணிய நேரிடாது...

அமரன்
09-12-2009, 06:24 PM
எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன்.

எழுத்து ஆள்வது.....?

கணமேனும் யோசிக்க வேண்டாமோ எழுத்தாளர்கள்?

அருமை குணமதி!

அர்த்தமான சிவாவின் கோபத்துக்குச் சபாஷ்.

இளசு
09-12-2009, 07:50 PM
பொறுப்பற்ற சுதந்திரத்தைவிட
கட்டுப்பாடே மேல் என எண்ணவைக்கும் நிகழ்வுகள் உண்டு..

சில வாகன ஓட்டிகள்..
சில '' எழுதுகோல் ஓட்டிகள்''.

படைப்புச் சுதந்திரம் எனும் சப்பைக்கட்டை
எட்டி உதைத்து முறித்து
சொத்தைகளை இனம்காணச் சொல்லும் கவிதை..

வாழ்த்துகள் குணமதி!

குணமதி
10-12-2009, 10:48 AM
எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன்.

எழுத்து ஆள்வது.....?

கணமேனும் யோசிக்க வேண்டாமோ எழுத்தாளர்கள்?

அருமை குணமதி!

அர்த்தமான சிவாவின் கோபத்துக்குச் சபாஷ்.

நன்றி அமரன்.

நன்றி.