PDA

View Full Version : தலை பாரம் குறைக்க வழி சொல்லுங்களேன்

சரண்யா
06-12-2009, 04:55 AM
மன்ற அன்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.....
தலைவலி ஏற்ப்படும் போது...தலை பாரமாக இருப்பதாக உணர்ந்தால்.....வெந்நீரில் ஆவி பிடிப்பதை தவிர வேறு வழி உள்ளதா...
தூங்கி எழுந்தவுடன் கழுத்து பின் பக்க தலை இப்படி வலிப்பதற்கும்
தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்....
சொல்லுவீர்களா....
இதனை பற்றி வேறு சுட்டி இருந்தாலும் சொல்லுங்கள்....
நன்றிகள்...

வெற்றி
07-12-2009, 05:18 AM
தூங்கி எழும் போது பின்பக்க தலைவலி என்பது சாதரணமாது என சொல்ல இயலாது .. ( நல்ல நரம்பியல் மருத்துவரை பார்க்கவும்)
இருந்தாலும் சில சாதாரண காரணங்கள்
1) அதிக மன உளைச்சலில் இருப்பதால்
2) ரத்தத்கொதிப்பு (லோ பி.பி என்பார்களே அது )
3) ரத்தத்தில் உப்பின் அளவு குறைதல்
4) சரியான தூக்கமின்மை
5) ஒவ்வாமை ( தலையனை, மெத்தை விரிப்பு, கட்டிலில் கூட இருக்கலாம் )
6) சைனஸ் தொந்தரவு இருந்தல்
7) காதில் இருக்கும் அழுக்கு மற்றும் அடைப்பு..

இதில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தீர்வு உண்டு ..
பொதுவான தீர்வு நல்ல இசை கேட்கும் போது தலை பாரம் விலகும்..
மொத்தத்தில் இது சாதாரணமான ஒரு விசயமாக எனக்கு தெரியவில்லை ...

தாமரை
07-12-2009, 06:09 AM
மொக்கைத் தம்பி சொன்னது போல தலைபாரம் என்பது அறிகுறி மாத்திரமே.. அதன் அடிப்படைக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.

முன்பெல்லாம் குடும்ப வைத்தியர் என்று இருந்தார், அவருக்கு நமது அத்தனை உபாதைகளும், நமது உடலைப் பற்றிய பொது அறிவும் இருக்கும். எனவே எளிதில் அவர் கண்டு பிடித்து விடுவார்.

ஆனால் தற்பொழுது மருத்துவருக்கும் நோயாளிகளுக்கும் இடையே இப்படிப் பட்ட புரிதல்கள் இல்லாததால் நோய்களை அறிவதில் செலவும் காலமும் அதிகமாகிறது..

அடிக்கடி இந்தத் தொல்லை இருக்கிறது என்றால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.

அடிக்கடி உபாதைகள் உண்டானால், அதைப் பற்றிய மெடிக்கல் ஹிஸ்டரி வைத்துக் கொள்ளுதல் நல்லது. இது மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

சரண்யா
07-12-2009, 06:41 AM

நன்றிகள்.....