PDA

View Full Version : ***கடன் அட்டை***



இன்பக்கவி
05-12-2009, 07:55 AM
http://blogs.southtownstar.com/money/credit-card-main_Full.jpg
http://i2.cdn.turner.com/cnn/2009/images/05/12/gall.torture.jpg
அட்டை பூச்சியாய்
ரத்தத்தை உறிஞ்சுவதால்
"கடன்அட்டை"பெயர் கொண்டாயோ..

துவக்கத்தில் தெரிவதில்லை
பளபளக்கும் கடன் அட்டை
பாதாளத்திற்கு அழைத்து சென்று
நம்மை பலம் இழக்க செய்யும்
என்று..

பணத்தை நோக்கி
பயணம் செய்யும்
உலகில் பகட்டு கௌரவம்
பழகி கொள்ள முற்படும்
நடுத்தரவர்க்கம்...

பணம் கொடுத்து பொருள் வாங்குவது
தரம் தாழ்ந்த நிலையை
மாறி போனதேன்..
அட்டையை தேய்த்து வாங்கி
தேய்வது அட்டை மட்டுமா??

மூளை சலவையில்
மயங்கி கடன் அட்டை பெறுவாய்
மயக்க தீரும்
கையில் காசு இல்லாதபோது...

ஐயா என்றவன்
அடேய் என்பான்
பணத்திற்காக...

வட்டிக்கு வட்டி
வட்டி போடும் குட்டி வட்டி...
வட்டி கட்டியே குழம்பிய நிலை..

ஓயாமல் ஒலிக்கும்
தொலைபேசி
ஒவ்வொரு முறையும்
அபாயமணியாய் மாறும்
நிலை..

ஈட்டிக்காரன் கூட உணர்ந்து
பொறுத்து கொள்வான்..
வங்கிகள் எல்லாம் மறைமுக
தாதாக்கள்...

தூக்கம் மறப்போம் கடனில்
விடியும்பொழுது
வீட்டிலோ ரோட்டிலோ
அறியாத நிலை..
அழிந்துபோயின
பல குடும்பங்கள்..

மின்னுவது எல்லாம் பொன்னால
மின்னும் கடன் அட்டை எல்லாம்
உண்மையும் அல்ல...
இருப்பதை கொண்டு
இன்பமாய் இருப்போம்..

நேசம்
05-12-2009, 08:11 AM
எனக்கு தெரிந்து நிறைய பேர் பெருமைக்காகவும்,அவசியத்துக்கும் கடன் அட்டை வாங்கி இப்ப சிரமப்படுகிறார்கள்.அதனை உணர்த்தும் நல்ல கவிதை

குணமதி
05-12-2009, 10:21 AM
போலிப் பெருமை பொறுக்கவியலாத் துன்பம்!

பா.ராஜேஷ்
05-12-2009, 10:56 AM
மீண்டும் நல்ல சாட்டையடி !

இன்பக்கவி
05-12-2009, 11:14 AM
எனக்கு தெரிந்து நிறைய பேர் பெருமைக்காகவும்,அவசியத்துக்கும் கடன் அட்டை வாங்கி இப்ப சிரமப்படுகிறார்கள்.அதனை உணர்த்தும் நல்ல கவிதை

ஆமாம் அப்படித்தான் நிஜமாய் நடந்து வருகிறது :fragend005:

இன்பக்கவி
05-12-2009, 11:18 AM
போலிப் பெருமை பொறுக்கவியலாத் துன்பம்!

ஆசையே அழிவுக்கு காரணம் படித்தோம் படித்தும் மறந்தோம்

இன்பக்கவி
05-12-2009, 11:22 AM
மீண்டும் நல்ல சாட்டையடி !

ஆஹா..
நன்றிகள்..:icon_b:

muthuvel
30-12-2009, 04:37 AM
http://blogs.southtownstar.com/money/credit-card-main_Full.jpg
http://i2.cdn.turner.com/cnn/2009/images/05/12/gall.torture.jpg
அட்டை பூச்சியாய்
ரத்தத்தை உறிஞ்சுவதால்
"கடன்அட்டை"பெயர் கொண்டாயோ..

துவக்கத்தில் தெரிவதில்லை
பளபளக்கும் கடன் அட்டை
பாதாளத்திற்கு அழைத்து சென்று
நம்மை பலம் இழக்க செய்யும்
என்று..

பணத்தை நோக்கி
பயணம் செய்யும்
உலகில் பகட்டு கௌரவம்
பழகி கொள்ள முற்படும்
நடுத்தரவர்க்கம்...

பணம் கொடுத்து பொருள் வாங்குவது
தரம் தாழ்ந்த நிலையை
மாறி போனதேன்..
அட்டையை தேய்த்து வாங்கி
தேய்வது அட்டை மட்டுமா??

மூளை சலவையில்
மயங்கி கடன் அட்டை பெறுவாய்
மயக்க தீரும்
கையில் காசு இல்லாதபோது...

ஐயா என்றவன்
அடேய் என்பான்
பணத்திற்காக...

வட்டிக்கு வட்டி
வட்டி போடும் குட்டி வட்டி...
வட்டி கட்டியே குழம்பிய நிலை..

ஓயாமல் ஒலிக்கும்
தொலைபேசி
ஒவ்வொரு முறையும்
அபாயமணியாய் மாறும்
நிலை..

ஈட்டிக்காரன் கூட உணர்ந்து
பொறுத்து கொள்வான்..
வங்கிகள் எல்லாம் மறைமுக
தாதாக்கள்...

தூக்கம் மறப்போம் கடனில்
விடியும்பொழுது
வீட்டிலோ ரோட்டிலோ
அறியாத நிலை..
அழிந்துபோயின
பல குடும்பங்கள்..

மின்னுவது எல்லாம் பொன்னால
மின்னும் கடன் அட்டை எல்லாம்
உண்மையும் அல்ல...
இருப்பதை கொண்டு
இன்பமாய் இருப்போம்..
அருமையா இருக்கு வாழ்த்துக்கள் ,