PDA

View Full Version : ***அலுத்து போய்விட்டது***



இன்பக்கவி
05-12-2009, 07:50 AM
http://www.goodlightscraps.com/content/i_love_you/i_love_u_3.gif
அன்பே,
ஆருயிரே
கண்ணாளனே,
என்னவனே,
இனியவனே,
என் இதயமே,
என் சுவாசமே,
என் உயிர் மூச்சே,
என் உயிரே,
உன் நினைவால் வாடுகிறேன்
நீயில்லாமல் நான் இல்லை..
தனியே சிரிக்கிறேன், அழுகிறேன்..
என் வாழ்வே நீதான்...
உன்னோடு வாழாத
வாழ்வு வாழ்வே இல்லை...
உனக்காக எழுதுவது எல்லாம்
கவிதையாகிறது...
இப்படியே காதல்மொழிபேசி
அலுத்து போய்விட்டது....
புதிதாய் ஒரு வார்த்தை தேடுகிறேன்..
வா!!!
மீண்டும் காதலிப்போம்
முதலில் இருந்து...

கா.ரமேஷ்
05-12-2009, 08:20 AM
அருமை...... புதிது புதிதாக வார்த்தைகளில் காதலிப்பதை விட ,காதலை புரிந்து காதலிப்பது நல்லது...

குணமதி
05-12-2009, 10:17 AM
எத்தனையோ வகைக்காதலில், இது கோமாளித்தனமான தென்பதா இல்லை விளையாட்டுத்தனமான தென்பதா?

ஆனால், உண்மையான வெறிக்காதல்தான்!

பா.ராஜேஷ்
05-12-2009, 10:58 AM
சரிதான்.... மீண்டும் மீண்டும் தொடர்வீர்கள் போல!?

இன்பக்கவி
05-12-2009, 11:25 AM
அருமை...... புதிது புதிதாக வார்த்தைகளில் காதலிப்பதை விட ,காதலை புரிந்து காதலிப்பது நல்லது...
புரிந்த காதல் தான் ஜெயிக்கும்:icon_b:

இன்பக்கவி
05-12-2009, 11:28 AM
எத்தனையோ வகைக்காதலில், இது கோமாளித்தனமான தென்பதா இல்லை விளையாட்டுத்தனமான தென்பதா?

ஆனால், உண்மையான வெறிக்காதல்தான்!

ஆமாம்
நிறைய காதல் நிஜமாய் இருந்தும் வெறும் நினைவாய் மட்டும் ஆகி விடுகிறது :traurig001:

இன்பக்கவி
05-12-2009, 11:30 AM
சரிதான்.... மீண்டும் மீண்டும் தொடர்வீர்கள் போல!?

ஐயோ
நான் அப்டி சொல்லல
இந்த வார்த்தைகள் தவிர வேற என்ன இருக்கு
வார்த்தை அலுத்துவிட்டது..
காதல் அப்டின என்ன???:icon_rollout::icon_rollout:

Ravee
07-12-2009, 05:37 PM
வார்த்தைகள் அலுத்து விட்டால் என்ன, கண்களால் கைது செய்யுங்கள்....

இளசு
07-12-2009, 06:53 PM
இறுதிவரியில் இருந்த புத்துணர்ச்சி..

கூட்டுப்புழுக்கள் மீண்டும் மீண்டும் ஆகலாம்
வண்ணத்துப்பூச்சி... என்னும் உற்சாகம் அளித்தது..


பாராட்டுகள் கவிதா123 அவர்களே...

அறிஞர்
07-12-2009, 08:10 PM
அலுத்துபோய்விட்ட காதல் மொழிக்கு...மாற்று...
காதலில் புதுமை...
கலக்குங்க...