PDA

View Full Version : பேஷன் (Fashion)



jawid_raiz
04-12-2009, 01:26 AM
http://4.bp.blogspot.com/_tvBk3RLflXE/SxNSpjU0d_I/AAAAAAAAAQw/78vbiJtSYF0/s320/Fashion+copy.jpg

நிர்வாணத்தை மறைக்க
இலை, தளைகளை உடுத்திக்கொண்டான்
ஆதியில் மனிதன்...

பழைமையை மறைக்க
நிர்வாணத்தை உடுத்திக்கொள்கிறான்
நவீன மனிதன்


- ஜாவிட் ரயிஸ்

ஓவியன்
04-12-2009, 01:38 AM
அன்றைய தேவைகள் உணவு, உடை, உறையுள் மட்டுமே...
இன்று தேவைகள் அதிகரிக்க, உடை தேவையற்றதாகி விட்டது போலும்..!! :)

சிந்திக்க வைத்த வரிகளுக்கு பாராட்டுகள் நண்பரே..

குணமதி
04-12-2009, 01:16 PM
நிர்வாணத்தை மறைக்க
இலை, தழைகளை உடுத்திக்கொண்டான்
ஆதியில் மனிதன்...

பழைமையை மறைக்க
நிர்வாணத்தை உடுத்திக்கொள்கிறான்
நவீன மனிதன்

- ஜாவிட் ரயிஸ்

முன்னைப் பழைமைக்குப் போகிறானோ?

பா.ராஜேஷ்
09-12-2009, 11:25 AM
பழையன கழிதலும்
புதியன புகுதலும் பொய்
பழையவை மீண்டும் புகுகின்றன
நவீனம் எனும் பெயரால்!!!

இளசு
09-12-2009, 07:23 PM
''ஃபேஷன்'' என்பது வட்டச்சாலை.


பாராட்டுகள் ஜாவித் அவர்களே..


இலை தழைகள் எனச் சொல்லவந்தீர்களா?

தளைகள் = தடைகள், இலக்கண அளவு.

ஜனகன்
09-12-2009, 09:10 PM
"கழுதை கெட்டால் குட்டிச்சுவர்" ஆன கதைதான் பேசனும். சிந்திக்க வைக்கும் தகவல்,நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு.

சிவா.ஜி
10-12-2009, 05:20 AM
ஒளிவு மறைவில்லா உள்ளம் வேண்டும்....ஆனால் இப்போது உள்ளத்தை மறைத்து, உடலைக் காட்டும் நாகரீகம்.

நல்ல வரிகல். வாழ்த்துகள் ஜாவித்.

jawid_raiz
29-04-2010, 06:56 AM
அனைவரின் அன்பான கருத்துகளுக்கும் மிக்க நன்றி தோழர்களே!
ஆமாம் இளசு.... எழுத்து கொஞ்சம் சறுக்கியிருக்கிறது.....

sarcharan
29-04-2010, 07:27 AM
அருமை.

BTW, தளை - தலை - தழை பற்றி 'ஐவரணி' தலை என்ன சொல்லுவார்?

அமரன்
13-05-2010, 09:11 AM
பேஷன் ஒரு வட்டச்சாலை... சரியாகத்தன் சொன்னார் அண்ணன்..

இந்த அஞ்சல் ஓட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

பேசாமல் எங்கள் எண்ணங்களும் அஞ்சலுடன் இசைந்து ஓடட்டும்.

வேலைக்குப் போறோம்.. சூழ்நிலைக்கு ஏற்ப எங்கள்ஐ நாம் அமைத்துக் கொள்வதில்லையா. அது போல மாறுவோம்..