PDA

View Full Version : புன்னகை விடு தூது



jawid_raiz
02-12-2009, 03:21 AM
http://1.bp.blogspot.com/_tvBk3RLflXE/SxPUr4yUnuI/AAAAAAAAARg/8DcgElv5q4Q/s400/414489291_b92c8fefff_o.jpg

கண்ட மறுகணமே
என்னை பார்த்து புன்னகைக்கும்
உன் குழந்தையிடம்
"இந்த அங்கிளை தெரியுமா?"
என்று கேட்கும் உன் கணவனுக்கு
புரியாவிட்டாலும்...

நான் புரிந்து கொண்டேன்

நீ கருவுற்றிருக்கும் போதும்
என்னைத் தான்
நினைத்துக் கொண்டிருந்திருக்கிறாய்
என்பதை

பா.ராஜேஷ்
03-12-2009, 01:13 PM
நல்ல வரிகள், நல்ல புகைப்படமும் கூட....
ஆமாம், காதலித்து கைவிடப் பட்ட கவிதையாகவே எழுதுவது என முடிவு செய்து விட்டீர்களா என்ன?

jawid_raiz
03-12-2009, 03:39 PM
இப்போதைக்கு எனது பதில் "மௌனம்...................."

பா.ராஜேஷ்
03-12-2009, 03:40 PM
புண்படுத்தும் நோக்கில் கேக்கவில்லை... மன்னிக்கவும்...

jawid_raiz
03-12-2009, 03:44 PM
புண்படுத்தும் நோக்கில் கேக்கவில்லை... மன்னிக்கவும்...

நீங்கள் புண்படுத்தவில்லை அன்பரே

ஜனகன்
03-12-2009, 04:49 PM
ரொன்ப நல்லாய் இருக்கு உங்கள் கவிதை, மவுனம் பேசுகிறது.

இளசு
03-12-2009, 07:00 PM
நிறைவேறாக் காதலும்
உள்ளாறாப்புண்ணும்...

வடித்தபடிதான் இருக்கும்..
கண்ணீர்க் கவிதையும்..
செந்நீர் நிணமும்..


பாராட்டுகள் ஜாவித்!

குணமதி
05-12-2009, 02:14 AM
காதலில் ஈகம் செய்தவர், காதலிக்குச் சிக்கலேற்படுத்தாமல் வாழவிடுவதே சிறப்பு.

இல்லையேல், ஈகம் பொருளற்றதாகிவிடும் அல்லவா?

arun
08-12-2009, 11:14 AM
ரொம்ப ஆழமான வரிகள் ஜாவித் நன்றாக இருந்தது பாராட்டுக்கள்

சிவா.ஜி
08-12-2009, 12:34 PM
நீங்கா நினைவுகள்....நீடிக்கும் அடையாளங்கள்.

வரிகள் அருமை. வாழ்த்துகள் ஜாவித்.

jawid_raiz
29-04-2010, 06:58 AM
பாராட்டுகளுக்கு நன்றி தோழர்களே

செல்வா
29-04-2010, 03:37 PM
மனித மனத்திற்கு ஒரு குணமுண்டு....

நமக்குப் பிடித்திருந்தால் ஒவ்வொரு சிறு சிறு நிகழ்விற்கும் சிறு சிறு அர்த்தங்கள்
கண்டுபிடித்துக்கொண்டு... அவற்றில் மகிழ்ச்சி கொள்ளும்.

படைப்பாற்றலுக்கான மூலமும் அதுவே..

தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள்..

jawid_raiz
02-05-2010, 08:49 AM
உங்கள் கருத்து உண்மையே! சில கவிதைகளில் வாசகனுக்கு புரியும் சில இனிமைகள், எழுதியவனுக்கு கூட தெரியாமல் இருக்கிறது...