PDA

View Full Version : ஏற்றுக்கொள்ளுங்கள் எங்களை .....



Ravee
01-12-2009, 12:58 PM
ஏற்றுக்கொள்ளுங்கள் எங்களை .....

( எய்ட்ஸ்வுடன் பிறந்த குழந்தைகள்......... )

http://www.skyzaa.com/gallery/out.php/i562_Aids.JPG



தாயின் தவறா தெரியாது

தந்தையின் தவறா தெரியாது

தண்டனை எங்களுக்கு

அவர்கள் ஆசைக்கு விளைந்து

ஆத்திரத்தில் ரோட்டுக்கு வந்த

குப்பை கூளங்கள் நாங்கள்

இங்கே எங்களை கண்டு

விலகி செல்வோர் சிலர்

விலக்கி செல்வோர் பலர்

காட்சிப் பொருளாய் நாங்கள்

கூசுகிறது உடல் எல்லாம்

நாங்கள் செய்யாத பிழைக்கு

பிறக்கும் போதே தண்டனையா

எங்கே சென்று வாதாடுவோம்

எங்கள் உரிமைகள் கேட்டு

உனமுற்றவர்களுக்கு கிடைக்கும்

சலுகை கூட எமக்கு இல்லை

மருத்துவமனையில் சோதனைக்கு எலிகள் போல

பத்திரிகைகளுக்கு ஒரு செய்தியாய்

சமுதாயத்திற்கு ஒரு பாவ சின்னமாய்

பழகிப்போனது எங்கள் வாழ்க்கை

இளைய சமுதாயமே

பார் எங்கள் அவலத்தை

பரிதாப படாதே

படித்துக்கொள் உன் வாழ்க்கைக்கு

நாங்கள் ஒரு பாடம்

எய்ட்ஸ் கொடுமையானது

எய்ட்ஸ்வுடன் பிறந்த குழந்தைகள்......... ? ? ?

ஏற்றுக்கொள்ளுங்கள் எங்களை

எங்கள் பிறப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல





http://www.uga.edu/aboutUGA/images/hiv-aids510.jpg

பா.ராஜேஷ்
01-12-2009, 01:38 PM
உண்மைதான். உலக எயிட்ஸ் தினத்தில் அனைவருக்கும் தேவையான கருத்து. நடிகர் கமல் கூட எயிட்ஸ் குழந்தைகளை இன்று தத்தெடுத்துள்ளார் (http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/0912/01/1091201077_1.htm).

கீதம்
02-12-2009, 03:04 AM
காட்சியும் கவிதையும் இரட்டை ஊசியாய் இதயம் தைக்கின்றன. வேறென்ன சொல்ல?

கா.ரமேஷ்
02-12-2009, 03:31 AM
அருமையான வரிகள் தோழரே... குழந்தைகள் தங்களின் சுயத்தை இழந்து தவிக்கும் கொடுமை தாங்கமுடியாதது...
முதலில் இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இரண்டாவது இத்தகைய குழந்தைகள் வருவதை முன்கூட்டியெ தவிர்க்கபட வேண்டும்.

நல்லதொரு கவிதை பாராட்டுக்கள்...

குணமதி
02-12-2009, 06:12 AM
துயரம்!

ஜனகன்
02-12-2009, 06:57 AM
துயரம் நிறைந்த கவிதை, கண்ணில் நீர் வரவைக்கும் காட்சி, நாளைய சந்ததியினருக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

இன்பக்கவி
07-12-2009, 05:08 PM
ஐயோ
என்னால் இந்த படங்களையும்
கவிதையையும் பார்த்து தாங்க முடிய வில்லை அண்ணா
ரொம்ப கஷ்டமா இருக்கு...
பெற்றவர்களால் புறகணிக்கபடும் குழந்தைகள்
ஒரு பாவமும் அறியாத தளிர்கள்...
வார்த்தை வரவில்லை அண்ணா...
கண்ணீர் தான் வருகிறது

muthuvel
15-12-2009, 08:17 AM
உண்மைதான். உலக எயிட்ஸ் தினத்தில் அனைவருக்கும் தேவையான கருத்து. நடிகர் கமல் கூட எயிட்ஸ் குழந்தைகளை இன்று தத்தெடுத்துள்ளார் (http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/0912/01/1091201077_1.htm).

இந்த கவிதையை படித்து சற்றே கலங்கி போனேன்

வசீகரன்
18-12-2009, 10:12 AM
என்ன கொடுமை இது......... ஒன்றுமரியாத இந்த குழந்தைகள் செய்த பாவம்தான் என்ன அடக்கடவுளே..... இவர்களின் வாழ்வுதான் எப்படி.......
இந்த படங்களை திரும்ப இன்னொருமுறை பார்க்கக்கூட இதயத்திர்க்கு பலம் இல்லை... இறைவா...

அமரன்
20-12-2009, 12:13 PM
பாவம் ஓரிடம் பழி வேறிடம்!

எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாத,ஏற்றுக்கொள்ள இயலாத புறக்கணிப்பு.

அவர்கள் குப்பை கூளங்கள் இல்லை; சத்தான கூலங்கள் என்று எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் காலம் மலரட்டும் என்று இளைஞர்களை நோக்கிச் சொல்வதில் நம்பிக்கை தெறிக்கிறது.

பாராட்டுகள் இரவீ