PDA

View Full Version : விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட...



நேசம்
01-12-2009, 04:08 AM
விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட


கணினியில் கோப்புகளை சேமித்த இடம் தெரியமால் தேடுவது வழக்கமான ஒண்றுதான். சில சமயங்களில் தேடுவது நீண்ட நேரம் எடுத்தாலும் கூட தெளிவான முடிவை தடுமா என்பது சந்தேகம்தான்.

இந்க சிரமத்தை போக்க இலவச மென்பொருள் இருக்கிறது.இதனை வடிவமைத்தவர் இந்த மென்பொருள் மேம்பட்ட தொழில் நுட்பத்தை பயன் படுத்தி இருப்பதால் கண் இமைக்கும் நேரத்தில் முடிவுகளை தருவதாக கூறுகிறார்.

முதலில் பயன்படுத்டும் போது கோப்புகளை இன்டெக்ஸ் செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கிறது.பிறகு நல்ல வேகம்.

இலவச மென்பொருள் தளம் (http://www.koshyjohn.com/software/neosearch.html)

praveen
01-12-2009, 04:18 AM
நண்பரே, இது போல முன்னரே, பிரவுசருடன் ஒருங்கினைந்த கூகிள் டெஸ்க்டாப் சேர்ச் இருந்தது, விண்டோஸ் லைவ் சேர்ச் இருந்தது. இதெல்லாம் குறைந்த அளவு ராம் மற்றும் ப்ராஸசர் வேகம் வைத்திருப்பவர்களின் இயக்கத்தை எடுத்து கம்ப்யூட்டரை மிகவும் சோர்வடைய வைத்து விடும்.

விண்டோஸினோடு வரும் இண்டெக்ஸ் மற்றும் விண்டோஸில் உள்ள பைண்ட் இதன் மூலமே சற்று நேரமானலும் மேலும் கூடுதல் சுமை இன்றி தேட முடியும்.

எனினும் உங்கள் தகவல் மற்றும் முயற்சிக்கு நன்றி. இந்த மென்பொருள் + முன்னர் இருந்த கூகிள் டெஸ்க்டாப் சேர்ச் மற்றும் விண்டோஸ் லைவ் சேர்ச் பயன்படுத்தியவர்கள் உங்கள் அனுபவத்தை தெரிவியுங்கள். காத்திருக்கிறோம்.

நேசம்
01-12-2009, 04:23 AM
எனக்கு மெயிலில் வந்த இந்த தகவலை இங்கு பதிந்தற்கு உண்மையான காரணம், மன்றத்தில் இது சம்பந்தமாக கூடுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான்.தொடரடும் உங்கள் உதவி அன்பரே

அன்புரசிகன்
01-12-2009, 04:37 AM
கூகிள் டெஸ்க்டொப் இனை முதலில் ஆவலுடன் பயன் படுத்தியவன். ஆனால் காலப்போக்கில் கணினியை ஆரம்பிக்கும் போது அது வந்து சேர நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி இருந்ததால் நிறுத்திவிட்டேன்...

கணினியில் இருப்பதே சிறந்தது என்பது எனது தேர்வு...

praveen
01-12-2009, 05:21 AM
நேசம் கொடுத்ததை பதிவிறக்கி இயக்கி பார்த்தேன். அட, நன்றாகத்தான் இருக்கிறது.

அதிலே சில கூடுதல் செட்டிங்க்ஸ் நாம் கூறியபடி ஏற்படும் இடர்களை களைய கொடுத்திருக்கிறார்கள். இதனால் ரெம்ப ஸ்லோவான கம்ப்யூட்டர்களிலும் இயக்கலாம் என்று தெரிகிறது.

ஆனால் பெரிய வசதிகள் இல்லை, பைல் பெயர்களை மெசஞ்சர் பாக்ஸ் அளவிற்கு உள்ள பெட்டியில் லிங்க் - உடன் தேடி பட்டியலிடுகிறது. அந்த பைல் படமாக இருக்கும் பட்சத்தில் ப்ரிவியு காட்டினால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு செட்டிங்க்ஸ் இருக்கிறதா என்று பார்த்தவரை கிடைக்கவில்லை.

இலவச மென்பொருள் என்பதால் ரெம்ப எதிர்பார்க்க கூடாது போல. ஒரு தொந்தரவும் (இலவச பதிப்பின்றாலும் ப்ரி ரெஜிஸ்ட்ரேசன் தேவை, பெயர் என்ன இமெயில் என்ன, பதிப்பதற்கு அட்மினிஸ்டிரேடர் ரைட்ஸ் வேண்டும் என்ற குறைகள்) இல்லாத மென்பொருள்.

பகிர்ந்ததற்கு நன்றி நேசம் அவர்களே. பாரதி அண்ணா அவர்கள் வந்து இதன் நிறை குறைகளை புட்டு புட்டு(இல்லை பிட்டு பிட்டு :)) வைப்பார்.

பா.ராஜேஷ்
01-12-2009, 01:21 PM
பதிவிற்கு நன்றி நேசம் !!!

வியாசன்
01-12-2009, 06:24 PM
நன்றி நேசம்