PDA

View Full Version : நான் கண்டது கனவா ?



Ravee
30-11-2009, 02:56 PM
நான் கண்டது கனவா ?


http://static.flickr.com/3232/2941374853_9ca9fec0f1.jpg


பஞ்சப்பரதேசியாக

வாழ வழி இல்லாமல்

விஷம் குடித்து

உயிர் துறந்தேன்

யாரோ எழுப்ப கண்விழித்தேன்

கண்ட காட்சி

பட்டுப்பஞ்சனையில் நான்

பக்கத்தில் பணக்குவியல்

பளிங்கு மண்டபம்

மீண்டும் கண்ணை கசக்கி பார்த்தேன்

பெரிய மண்டபம்

பெரிய துணிமூட்டை

சிந்திக்கிடக்கும் சில்லறைகள்

மீண்டும் பிச்சைக்காரனாய்

கடவுளே விளக்கம் சொல்

நான் முதலில் கண்டது கனவா

இல்லை இப்போது காண்பது கனவா

நம்பிக்கை வைத்து காத்திருக்கிறேன்

விரைவில் பதில் சொல்........

ஜனகன்
30-11-2009, 03:30 PM
ரவி காட்சியுடன் நல்ல கவிதை. பிச்சைகாரன் என்றாலும் தன் நம்பிக்கை இருந்தால் அவனும் வருவான், செல்வந்தனாய்.

அறிஞர்
30-11-2009, 03:40 PM
இருக்கும் நிலை கண்டு சோர்ந்துவிடாமல்..
நம்பிக்கையுடன் உழைத்தால்...
வாழ்க்கையில் வெற்றியே...

குணமதி
01-12-2009, 01:11 AM
கனவுகள் மெய்யாகும்...

உழைத்தால்!

கா.ரமேஷ்
01-12-2009, 07:48 AM
படத்துக்கு இணையான அழகான* கவிதை... வாழ்த்துக்கள்...

அக்னி
01-12-2009, 12:03 PM
“ஏழையாகப் பிறப்பது எம் தவறல்ல.
ஏழையாக இறப்பதே எம் தவறு.”

நிதர்சனமான வாக்கு.

விஷம் வாங்கிய காசு,
சிறு மூலதனமாகியிருந்தால்...
விஷம் குடிக்கத் துணிந்த மனது,
வாழ்க்கையை எதிகொள்ளத் துணிந்திருந்தால்...

கனவிலும் இந்நிலை வந்திருக்க மாட்டாதே...

வாழ்க்கையை தங்கத் தட்டில் வைத்து,
கடவுள் தருவார் என்று எதிர்பார்ப்பதைப்போல
முட்டாள்தனம் (அட... இதிற் தனமிருக்கின்றதே...) ஏதுமில்லை...

இது நமது கையாலாகாதனமே (இங்கும் தனமிருக்கின்றது...) அன்றி, வேறென்னவென்பது...

நமது சோம்பேறித்தனத்திற்கு (இங்கும் தனம்...) நியாயம் கற்பிப்பதே, இதுபோன்ற கனவுகள்...

களைய வேண்டிய தனங்களைக் களைந்துவிட்டாலே,
வாழ்க்கையில் தனம் நிறைந்துவிடும்.

பாராட்டுக்கள் ரவீ அவர்களே...

கலையரசி
01-12-2009, 12:34 PM
"வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்?"
தன்னம்பிக்கையுடன், விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
அழகிய கவிதை.

Ravee
01-12-2009, 01:28 PM
ஜென் கதைகளில் வருவது போல விழித்துக்கொண்டு இருபதாக நினைத்தவன் உண்மையில் உறங்கிக்கொண்டு இருக்கிறான், தூக்கத்தில் அவன் இறந்ததாக எண்ணிய கணம் கண் விழித்து உயிருடன் இருந்ததைக்கண்டு சந்தோசம் கொள்வான். மீண்டும் தூங்கச்செல்லும் போது அவனுக்கு ஒரு கவலை வரும் இப்போது நான் விழித்திருகிறேனா இல்லை உறக்கத்தில் இருக்கிறேனா என்று.


அது போலத்தான் சிலர் பணம் இல்லையே என்று கவலைப்பட்டு சாகத் துணிவார்.சந்தர்ப்ப வசத்தால் பணம் கிடைக்கும் அப்போது அதை வீண் விரயம் செய்து அழித்து விட்டு இறைவனை குறை கூறி திரிவார்கள். வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் எனக்காக என்று தன்னம்பிக்கையுடன் எவன் வாழ்வானோ அவனே முழுமையானவன்.

அக்னி
01-12-2009, 02:04 PM
முன்னர் பின்னூட்டமிடுகையிற் படம் தெரியவில்லை.

இப்போது படத்தைக் கவிதையோடு சேர்த்துப் பார்க்கையில்,
எனக்கு முரண் தெரிகின்றது.

பண(மெடுக்கும் இயந்தி)த்துக்கு
அருகில்,
குடியிருக்கின்றான்,
பிச்சைக்காரன்...

ஒருவேளை பணம் இல்லாததாற்தான்,
இந்த நிம்மதியான உறக்கமோ...

இன்பக்கவி
07-12-2009, 05:15 PM
அண்ணா
நல்லா இருக்கு கனவுகள் எல்லாம் நிஜமானால் வறுமை என்ற நிலை இல்லாமல் போகுமோ???