PDA

View Full Version : ‘இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்!’ – அதிர வைக்கும் ஒரு போராட்டம்Honeytamil
30-11-2009, 12:07 PM
கத்தியில்லை… துப்பாக்கிகளில்லை… ரத்தமில்லை… ஆனால் இது மரண வலியாகத் தெரிகிறது இலங்கைக்கு. அதுதான் புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் புறக்கணிப்புப் போராட்டம்.

“இனப்படுகொலை என்ற படுபாதகத்தைச் செய்துவரும் இலங்கையில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்குவதைத் தவிருங்கள். Made in Sri Lanka என்ற லேபிளுடன் வரும் எந்தப் பொருளை நீங்கள் வாங்கினாலும், அங்கு தமிழர்கள் அழிக்கப்பட நீங்களும் துணை போகிறீர்கள் என்று அர்த்தம்..” போன்ற வாசகங்கள் அடங்கிய தட்டிகளைத் தாங்கி தமிழர்கள் நிற்க, அதை ஒருவித இரக்கத்தோடு பார்த்துச் செல்லும் வெளிநாட்டவர், சம்பந்தப்பட்ட கடையில் வேறு நாட்டுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

மீண்டும் அந்தத் தட்டிகளைக் கடக்கும் முன், நாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என்று கூறிவிட்டுச் செல்கின்றனர்.

சும்மா ஏதோ ஒப்புக்கு நடத்தாமல், தொடர்ச்சியாக அமெரிக்காவின் பெரிய நகரங்கள் அனைத்திலுமே ஒரேநரத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதில் கைமேல் பலன் கிடைத்துள்ளது.

இன்னொரு பக்கம் இலங்கையில் தங்கள் முதலீடுகளை பெருமளவில் செய்துள்ள சர்வதேச நிறுவனங்களிடமும் இந்தப் போராட்டம் குறித்து எடுத்துசொல்லி, அவர்களது முதலீடுகளை வாபஸ் பெற வைக்கும் முயற்சியிலும் இந்தத் தமிழர்கள் இறங்கியுள்ளனர். இதற்கும் பலன் கிடைக்கும் தருணம் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது.

http://i49.tinypic.com/5b1ic0.jpg

இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria’s Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இந்தப் போராட்டங்கள் முழு வீச்சுடன் நடத்தப்பட்டன.

சிறிய அளவில் – சில மாதங்களிற்கு முன்னதாக – ஓரிரு நகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் – இப்போது, அமெரிக்காவின் பல நகரங்களிற்கும் விரிவாக்கம் பெற்று தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது சர்வதேச சமுதாயத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்அவையின் [United States Tamil Political Action Committee - USTPAC] ‘இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு’ [Sri Lankan Products Boycott Committee] இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது.

போராட்டக் குழுவினரின் கோரிக்கை மிகத் தெளிவாக இருந்தது:

“நண்பர்களே… இந்தக் கடைகளுக்குச் சென்று எதையும் வாங்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. தாராளமாக செல்லுங்கள். ஆனால் எந்தத் தயாரிப்பிலாது ‘Made in Srilanka’ என்று இருந்தால் அதை அங்கேயே போட்டுவிடுங்கள். அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழரது ரத்தம் தோய்ந்திருக்கிறது!”

இந்த வாசகங்கள் தாங்கிய அட்டைகளைக் கைகளில் தாங்கியபடி தமிழ் உணர்வாளர்கள் போராடினர்.

இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாண்டி கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் இலங்கைத் தயாரிப்புகளைத் தவிர்த்துவிட்டு பிற நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். சிலர் தாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு சென்றதும் நடந்தது.

சில அமெரிக்கர்கள், “இலங்கையில் நடந்த விஷயங்களை நாங்கள் அறிவோம். இப்போது நடக்கும் அவலங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களால் எப்படி இலங்கை தயாரிப்புகளை வாங்க முடியும்” என்றும் சில அமெரிக்கர்கள் திருப்பிக் கேட்டது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

http://i50.tinypic.com/5mcvp4.jpg

அதே நேரம், குறிப்பிட்ட கடைகள் இந்தப் போராட்டத்தைக் கண்டு கோபம் கொண்டுள்ளதும் உண்மையே. இந்தக் கடைகளை நடத்துவோர், இறங்கிவந்து போராட்டக்காரர்களிடம் “எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. தயவு செய்து போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள்” என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு போராட்டக்காரர்கள் சொல்லும் பதில், “நாங்கள் அனைத்து பொருட்களையும் வாங்கவிடாமல் தடுக்கவில்லை. இலங்கை தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று வாடிக்கையாளர்களின் மனசாட்சியைத் தொட்டுக் கேட்கிறோம். இந்த சங்கடத்தை நீங்கள் தவிர்க்க நினைத்தால் முதலில் இலங்கையில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள். தற்போதுள்ள முதலீடுகளை திரும்பப் பெறுங்கள்” என்கிறார் அமெரிக்க தமிழ் அரசியல் செயல் அவையின் துணைத் தலைவரும் போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவருமான டாக்டர் எலீன் ஷாண்டர்.

“இலங்கை அரசு செய்த தமிழினப் படுகெலையை நாம் படங்களாகக் காட்டுகின்றோம்; இலட்சக் கணக்கான தமிழர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நாம் ஆதாரங்களோடு காட்டுகிறோம்; பதாகை அட்டைகளைப் பிடிப்பது மட்டும் இல்லாமல், எல்லா விபரங்களையும் சிறிய பிரசுரங்களாக அச்சிட்டு வாடிக்கையாளர்களின் கைகளில் கொடுக்கின்றோம். இவை எல்லாம் அவர்களைச் சிந்திக்கத் தூண்டும்.

சாதாரணமாக ஒரு உடையை வாங்குவதன் மூலம் அவர்கள் கொடுக்கும் பணம், ஒரு மனித சமுதாயத்தின் அழிவுக்கு எப்படியெல்லாம் செலவிடப்படுகின்றது என்பதை விளக்குகின்றோம். இவையெல்லாம் – சாதாரண குடிமகனின் இதயத்தைக் கட்டாயம் உலுக்கும்; நிச்சயமாக உலுக்குகின்றது” என்றார் போராட்டத்தில் பங்கேற்ற சிவா நாதன்.

http://i45.tinypic.com/50nm9w.jpg

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏதோ இன்று நேற்று தொடங்கியவை அல்ல… சில மாதங்களுக்கு முன்பே ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் முன்னெடுக்கப்பட்டவையே. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் இப்போராட்டத்தை ஆரம்பித்தனர். பிரிட்டனின் கார்டியன் மற்றும் டைம்ஸ் பத்திரிகைகள் ‘இனப்படுகொலை செய்த இலங்கையில் தயாராகும் துணிகள் உள்ளிட்ட எதையும் வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்’ என்று பொது மக்களுக்கு கோரிக்கையே வைத்தன.

இன்று இந்தப் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்க்கும் அளவு விரிவடைந்துள்ளது. முக்கியமாக இலங்கையின் முதுகில் விழும் பெரும் அடியாக மாறிக் கொண்டுள்ளது!

நன்றி : என்வழி

நேசம்
30-11-2009, 12:58 PM
எந்த ளவுக்கு பலன் தரும் என்று தெரிய வில்லை.ஆனால் போரட்டத்தின் விளைவாக மக்கள் இலங்கை பொருட்களை புறக்கணிக்க செய்தால் இலங்கை பொருளதாரத்துக்கு பெரிய அடி விழும்

ஜனகன்
30-11-2009, 02:43 PM
நல்ல ஒரு பதிவு போட்டுள்ளீர்கள் கன்னித்தமிழ். நானும் இதை வரவேக்கின்றேன்.இந்த விடயம் இன்று நேற்றல்ல இலங்கையில் உச்சக்கட்ட போர் ஆரம்பித்த காலத்தில் (கடந்த தைமாதத்தில்) இருந்தே, இங்கு இலங்கை உற்பத்தி செய்யும் பொருட்கள்( உணவு, உடை)புறக்கணித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இது இலங்கை அரசுக்கு பெருமளவு பாதிப்பு இல்லாவிட்டாலும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் கொடுக்கும் ஒரு சிறு அடிஎன்றுதான் நான் நினைக்கின்றேன். இது இப்படியே தொடந்தால், காலப்போக்கில் பெருமடியாக மாறும் என்பதில் ஐயமில்லை.

அறிஞர்
30-11-2009, 03:39 PM
இது மிகச்சிறிய அளவிலே பாதிப்பை ஏற்படுத்தும்.

praveen
30-11-2009, 03:53 PM
இது மிகச்சிறிய அளவிலே பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆமாம், ஏனென்றால் அவர்கள் தயாரிப்பு ஆடைகள் விசயத்தில் குறைவாகத்தான் இருக்கும். இலங்கையில் தயாராகி வெளிநாட்டில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தையும் தவிர்க்க சொன்னால் தான் சுளீர் என்று உறைக்கும். முன்னரே தேயிலையை தவிர்க்கச்சொல்லி சில விளம்பரம் பார்த்திருக்கிறேன்.

இன்னும் பல பிராண்ட் மற்றும் தாயாரிப்பை பட்டியலிட்டு மற்றவர்களை தவிர்க்க செய்ய வேண்டும்.

வியாசன்
30-11-2009, 05:41 PM
இது மிகச்சிறிய அளவிலே பாதிப்பை ஏற்படுத்தும்.


தவறு அறிஞரே பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் நம்மவர்கள் தயாரில்லை. நம்மவர்க்கு யானை குளிர்பானங்கள் குடித்தால்தான் சமிபாடு அடையுதாம். புலம்பெயர் நாடுகளில் எத்தனையோ சலாட் வகைகள் இருக்கு ஆனால் இலங்கையிலிருந்து வரும் வல்லாரையில்தான் சத்துக்கள் இருக்குதாம்.. உபயோகிப்பவர்கள் நினைத்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் நாம் அதற்கு தயாரில்லையே. தூள் போன்றவற்றை தாய்தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யலாம்.

அன்புரசிகன்
30-11-2009, 06:56 PM
முதலில் ஒற்றுமைக்கு வழியைக்காணவில்லை... நாம் பின்னடைந்திருப்பதற்கு இதுவே முதற்காரணம்...

மெல்பேர் இல் உள்ள ஒரு சிறியரக பலசரக்குக்கடைகளில் MKS என்ற ஒரு கடையும் பிரபலம். ஆனால் அவர்கள் மில்லியனர்கள்... முழுக்க முழுக்க இலங்கைப்பொருட்களை விற்று வந்தவர்கள். ஒவ்வொரு பொருட்களின் இலாபங்கள் பன்மடங்குகள்...

உப்பு புளி சோயாமீட் டின்மீன் ஜாம் கோடியல் என்று ஆரம்பித்து மா அரிசி தூள் சீரகம் அது இது என்று அனைத்துப்பொருட்களும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கிறார்கள்... செய்பவரும் தமிழர்...

அண்மையில் வன்னி முருக்கங்காய் என்று வேறு விற்கிறார்கள்...

தவிர்த்தால் குறிப்பிடத்தக்க பாதிப்பு இலங்கைக்கு வரும். முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனால் இலங்கைத்தமிழனால் இது முடியாது...

aren
02-12-2009, 02:40 AM
இதனால் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டாலும் அது வெற்றியே. என் வாழ்த்துக்கள்.

விகடன்
02-12-2009, 03:11 PM
எம் முன் இலங்கைத் தயாரிப்பை பகிஸ்க்கரிக்க வேண்டும் என்று சொன்னவரே வீட்டிற்கு இலன்கை தயாரிப்பிலமைந்த பதனிடப்பட்டு அடைக்கப்பட்ட மீனை வாங்கிச் செல்கின்றனர். எனக்கு தெரிந்த சிலரில் ஓரிருவர் தென்படுகின்றனர். இப்படி எத்தனை பேர் இருப்பார்கள்?

”ஊருக்கு உபதேசம். உனக்கில்லையடி பெண்ணே” என்ற கதைதான்.

பிரம்மத்ராஜா
03-12-2009, 11:02 AM
சிறு துளி பெருவெள்ளம் போல் இந்த சிறிய பாதிப்பு பெரும் தலைவலியாக மாறலாம்
இது நல்லதொரு தொடக்கமாக அமையட்டும். காந்திய வழி பலன் தரும் என்று நினைக்கிறேன்.

கா.ரமேஷ்
03-12-2009, 11:48 AM
இந்த கருத்து பற்றி முன்னரே பல இடங்களில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களால் வேண்டுகோளாய் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தமிழனும் இதற்க்கு செவி சாய்த்து நடவடிக்கைகளில் இறங்கினால்தான் பலன் தரும்.
நான் தினசரி மதிய உணவு சாப்பிட செல்லும் விடுதியில் இலங்கை தயாரிப்பு விற்கப்படுகின்றன.நான் வாங்குவதில்லை எனது நண்பர்களையும் வாங்க விடுவதில்லை.இன்னொன்று தெரிந்துகொள்ள வேண்டியது அது அரசு விடுதி,இலங்கை தயாரிப்புகளை நமது அரசு ஊக்குவிக்கின்றது என்பதற்க்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.முடிந்தவரை நாம் புறக்கணிப்போம்.

ஜனகன்
03-12-2009, 09:35 PM
இந்த ஒரு விசயத்தில் என்றாலும் எல்லோரும் ஒற்றுமையாக, கருத்தொருமித்து இயன்குவோமேயானால், நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்.
எல்லோரும் ஒன்று படுவார்களா!!!!!!???????