PDA

View Full Version : மூன்று, மூன்று வரிகள்!

குணமதி
29-11-2009, 04:01 PM
மூன்று, மூன்று வரிகள்!

விலக்கி விலக்கித் தள்ளினும் சேர்ந்து கொள்கிறது.

நீர்ப்பாசி மட்டுமன்று -

நின் நினைவும்.

***

'சாலையைச் சரிசெய்!' - மக்கள் போராட்டம்.

நகர்மன்றத் தலைவரின் மும்முர சிந்தனை -

எவ்வளவு தேறும்?

***

பட்டாம்பூச்சியும் தட்டாம்பூச்சியும் பறக்கின்ற காட்சி -

அட்டா, அவற்றிற்கு எத்தனை மகிழ்ச்சி !

வாழுங்காலம் பெரிதல்ல, வகைமுறையாய்த் துய்த்தலே.

சிவா.ஜி
29-11-2009, 04:24 PM
முத்தான மூன்று வரிகள். விலக்கினாலும் விலகாத பாசிபோல நினைவுகள், மக்கள் குறையில் ரொக்கம் தேற்றும் சுயநல-பொதுநலம், வாழும் வகை சொல்லும் பட்டாம்பூச்சி வாழ்க்கையென வித்தியாசமான சிந்தனைகளை சொற்ப வரிகளில் சித்தரித்த கவரும் கவிதைகள்.

வாழ்த்துகள் குணமதி.

குணமதி
29-11-2009, 04:32 PM
நன்றி சிவா.

ஜனகன்
29-11-2009, 07:04 PM
மூன்று x மூன்று வரி கவிதைகள், அர்த்தமுள்ள வரிகள். வாழ்த்துக்கள் குணமதி.

சரண்யா
30-11-2009, 02:05 AM
மூன்றிலே முத்தமிழ்
மூன்று மூன்றாய்
மூவரிகளுமே சிறப்பு...நன்றிகள்..குணமதி அவர்களே..பகிர்ந்து கொண்டமைக்கு..

குணமதி
30-11-2009, 02:36 AM
மூன்றிலே முத்தமிழ்
மூன்று மூன்றாய்
மூவரிகளுமே சிறப்பு...நன்றிகள்..குணமதி அவர்களே..பகிர்ந்து கொண்டமைக்கு..

பாராட்டுக்கு நன்றி.

குணமதி
30-11-2009, 02:37 AM
மூன்று x மூன்று வரி கவிதைகள், அர்த்தமுள்ள வரிகள். வாழ்த்துக்கள் குணமதி.

நன்றி நண்பரே.

நேசம்
30-11-2009, 05:10 AM
முத்தான மூன்று வரிகவிதைகள்..... நினைவுகள்,சுயநலம்,வாழும் வாழ்க்கை உணர வைக்கும் கவிதைகள்.. பாரட்டுகள் சகோதரி

குணமதி
01-12-2009, 01:19 AM
முத்தான மூன்று வரிகவிதைகள்..... நினைவுகள்,சுயநலம்,வாழும் வாழ்க்கை உணர வைக்கும் கவிதைகள்.. பாரட்டுகள் சகோதரி

நன்றி.

ஒரு திருத்தம். நீங்கள் எழுதியதில் கடைசிச் சொல் ஆண்பாலாக இருக்கவேண்டும். நன்றி.

சரண்யா
01-12-2009, 02:23 AM
ஆம் உங்களின் பெயரை நானும் முதலில் ஏமாந்து தான் போனேன்....பின் உங்களின் profile பார்த்து தான் தெரிந்து கொண்டேன்....
சமுத்த்ரா செலவம் ஆண் என நினைத்தேன்....அது போல சிலர் ....படங்கள் பெண் ஆண்பெயர் இட்டும் சிலர்..
ஆதலால் வந்த குழப்பம் போல....உங்களின் முழுப்பெயர் சொல்லுவீங்களா...

குணமதி
01-12-2009, 02:59 AM

முழுப்பெயரே குணமதி தான்.

சரண்யா
02-12-2009, 10:52 AM
ஒ..அப்படியா...
நன்றிகள்...
நீங்கள் எழுதியதை போல எனக்கும் தோன்றியதை இங்கு பதிவு செய்கிறேன்...

புதுசு என்றால் மகிழ்ச்சியோடு
முதலில் காட்டுவது உன்னிடமே....
_ கண்ணாடி

இன்று காலை தோன்றியது...மூன்று வரிகள்!
:)

குணமதி
02-12-2009, 11:59 AM
ஒ..அப்படியா...
நன்றிகள்...
நீங்கள் எழுதியதை போல எனக்கும் தோன்றியதை இங்கு பதிவு செய்கிறேன்...

புதுசு என்றால் மகிழ்ச்சியோடு
முதலில் காட்டுவது உன்னிடமே....
_ கண்ணாடி

இன்று காலை தோன்றியது...மூன்று வரிகள்!
:)

நன்றாக இருக்கிறது.

பாராட்டுகிறேன்.

மேலும் எழுதுங்கள்.

சரண்யா
03-12-2009, 09:32 AM
நன்றிகள்...
ஆண் என்றாலும் பெண் என்றாலும்
இனிமையானது,சுகமான சொர்க்கமே
-பிறந்தவீடு

குணமதி
04-12-2009, 02:04 PM
மூன்றடிப் பாடல் நன்றாக எழுதுகிறீர்கள்.

நன்றி.

meera
04-12-2009, 04:20 PM
'சாலையைச் சரிசெய்!' - மக்கள் போராட்டம்.

நகர்மன்றத் தலைவரின் மும்முர சிந்தனை -

எவ்வளவு தேறும்?[/COLOR]

அழகான வரிகள் குணமதி. இன்றைய தலைவர்கள் தேற்றுவதில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

கவிதை வரிகள் அருமை. வாழ்த்துகள்.

குணமதி
04-12-2009, 04:44 PM
அழகான வரிகள் குணமதி. இன்றைய தலைவர்கள் தேற்றுவதில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

கவிதை வரிகள் அருமை. வாழ்த்துகள்.

பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.

பா.ராஜேஷ்
05-12-2009, 11:02 AM
அருமையான வரிகள் நண்பரே! பாராட்டுக்கள் !

குணமதி
06-12-2009, 02:54 AM
அருமையான வரிகள் நண்பரே! பாராட்டுக்கள் !

நன்றி.

இன்பக்கவி
07-12-2009, 05:19 PM
மூன்று, மூன்று வரிகள்!

விலக்கி விலக்கித் தள்ளினும் சேர்ந்து கொள்கிறது.

நீர்ப்பாசி மட்டுமன்று -

நின் நினைவும்.
ரொம்ப நல்லா இருக்கு..
அதுவும் இது ரொம்ப பிடித்து இருக்கிறது

குணமதி
08-12-2009, 04:42 AM
ரொம்ப நல்லா இருக்கு..
அதுவும் இது ரொம்ப பிடித்து இருக்கிறது

நன்றி.