PDA

View Full Version : !!!மாவீரகள் நீங்கள்!!!



இன்பக்கவி
27-11-2009, 10:15 AM
http://november27.net/images/front_deepam.jpg
மாவீரகள் நீங்கள்
உங்களுக்கய்
உங்கள் குடும்பத்திற்காக
உயிர் துறந்திரோ இல்லை

விடை தெரியா
விடியளுக்காக
விழித்திருந்து பாடுபட்ட
பறவைகள்..

நான்குபுறமும் படை சூழ
உயிருக்கு பயந்து
மக்கள் வீதியில்
அங்கும் இங்குமாய்
ஓடி திரிய
கண் முன்னே
ஆயிரம் சடலங்கள்...

மன உறுதியோடு
ஆயதங்களை ஏந்தி
போரடினாயே
உன் போராட்டத்தின்
பலன் கிடைக்கவில்லை என்று
பலர் ஏசினாலும்
உன் துணிவும்
தைரியமும்
இனி ஒருவனுக்கும்
வர போவது இல்லை

காடுகளிலும்
மேடுகளிலும்
விடுதலைநோக்கி
உன் பாத சுவடுகள்
தலைவணங்குகிறோம்

தமிழனை அழிக்க
நச்சு மருந்து இட்டு
மக்களை கொன்றாய்..
எம் மக்கள் சிந்திய
ரத்தத்தில் தெரியும்
எம் தமிழ் வாசனை..

வரலாறு மாசுபடிந்து
போயிற்று...
கவலை இல்லை...
புது வரலாறு படைக்க
புதைந்தவர்கள் நீங்கள்!!!!

எதிர்கால வரலாற்றை
எழுத உம் ரத்தத்தை பரிசளிதீர்கள்
எழுதுவோம் புது வரலாறு

இருண்டு போனபக்கங்களை
தூக்கி எறிந்தோம்
இனி ஒரு புது உருவாக்கம்
உதயமாகும் ...

கண்ணிற் விட்டு
கதற மாட்டோம்
உன் கல்லறையில்
நீ ஆதவன்..
ஆதவனை இருள்
சூழ்ந்து மறைக்கலாம்
அழிக்க முடியாது:icon_b::icon_b:

குணமதி
27-11-2009, 10:55 AM
நல்லதொரு வீரவணக்கம்!

வியாசன்
27-11-2009, 10:58 AM
களியாட்டங்கள் தெரிந்தவர்க்கு உங்கள் அருமைகள் தெரியாதுதான் எடுத்து சொன்னாலும் ஐநூறு அறுநூறு கருத்துக்கள் பகிர்ந்தவர்ட்கு உங்களுக்காய் ஒருவரியெழுத மனமில்லை.

கவிதா மாவீரர் தியாகத்தை அருமையாக தந்தீர்கள். அவர்களுக்காய் துளிகண்ணீர் வடிந்தாலே போதும்

ஜனகன்
27-11-2009, 12:55 PM
மன உறுதியோடு
ஆயதங்களை ஏந்தி
போரடினாயே
உன் போராட்டத்தின்
பலன் கிடைக்கவில்லை என்று
பலர் ஏசினாலும்
உன் துணிவும்
தைரியமும்
இனி ஒருவனுக்கும்
வர போவது இல்லை

உண்மைதான் கவிதா இனி யாருக்கும் வராது இந்த துணிவு.
நல்ல அர்த்தமுள்ள கவிதை வரிகள்.

அமரன்
27-11-2009, 10:05 PM
உண்மையான அன்புடன் உங்கள் கவிதாஞ்சலி...பெருமை அடைகிறேன்.

என்னுடைய மௌனாஞ்சலியையும் கலந்து விடுகிறேன்.


இந்த உன்னதமானவர்களை வைத்தும்
பிழைப்போட்ட ஒருசிலர்...
தமிழின் அவமானச் சின்னங்கள்... வேதனைப் படுகிறேன்!

கா.ரமேஷ்
05-12-2009, 08:17 AM
நல்லொதொரு வீரவணக்க கவிதை..... இபோழுதுதான் பார்க்க நேர்ந்தது...

உலகின் உன்னதமான வீரர்களுக்கு வீரவணக்கம் தர நல்ல பொருத்தமான கவிதை...

பா.ராஜேஷ்
05-12-2009, 11:00 AM
வீரர்களுக்கு வணக்கம் செய்வதுடன் முடித்து விடாதீர்கள்... அவர்களின் இல்லத்தாருக்கு என்ன செய்ய முடியும் என்றும் பாருங்களேன்!

இன்பக்கவி
05-12-2009, 11:11 AM
வீரர்களுக்கு வணக்கம் செய்வதுடன் முடித்து விடாதீர்கள்... அவர்களின் இல்லத்தாருக்கு என்ன செய்ய முடியும் என்றும் பாருங்களேன்!

எனக்கும் செய்ய ஆசை தான்
நான் இருப்பது சென்னையில்
என்ன செய்ய???:confused:

இன்பக்கவி
05-12-2009, 11:12 AM
எல்லோருக்கும் நன்றிகள் :icon_b:

muthuvel
30-12-2009, 04:47 AM
எல்லோருக்கும் நன்றிகள் :icon_b:

கவிதையை பார்த்து என் கண்கள் கலங்கியது