PDA

View Full Version : சில நிமிடங்களில் உதிததவை..



சரண்யா
27-11-2009, 01:45 AM
சில நிமிடங்களில் உதிததவை..கவிதைவடிவில் உள்ளதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...

அருள்வரும் என்றே
பொருள் தேடி சென்று
அவ்வருள் பொருளுக்கு
அப்பாற்பட்டது என்றெ
உணர்ந்து.... துறந்து ....
மெய் எது என்றால்
மேன்மை தரும்
இறைமையன்றோ

சரண்யா
30-11-2009, 01:09 AM
நீயே தானுரைப்பாய்
நான் அது செய்தேன்
இது செய்தேன் என்பாய்
அன்று அன்போடு செய்தாய்
இன்று செய்ததை நீயே
என்றும் சொல்லி காமிப்பது முறையோ....

சரண்யா
30-11-2009, 01:10 AM
இல்லையென்றால் என் செய்வேன்
கடைசி நாளான இன்றாவது கட்டுவேன்
தேர்வுக்கு பணம் என்று எண்ணிணேன்
ஆனால் நாளையென்றால் நிற்பேன்
வெளியில் என்றெப்படி உரைப்பேன்
உங்களுக்கு மனம் நெகிழ்ந்தேன்
என்றாலும் வேண்டுமென்றேன்
இன்றே அளிக்க கூறினேன்

ஆதி
30-11-2009, 03:09 AM
கவிதைகள் நன்று சகோதரி.. உண்மையை சொல்லப் போனால் பெரும்பாலான கவிதைகள் கணநேரத்தில் உதிப்பவையே.. கவிதைகள் உதிக்காமல் போவது.. உதி உதி என் கட்டாயப்படுத்தும் போதுதான்.. கனி போல கவிதையும் தானாய் கனியனும்.. :)

கவிதைகளை கொஞ்சம் செதுக்கி இருக்கலாம்.. நீங்கள் சொல்ல முயன்றது இன்னது என்று புரிகிறது, வார்த்தைகளை கூர்மையாக்கி அதனை சொன்னீர்கள் என்றால், பிரியாத்த தையலாய் படிப்பவர் மனதில் தைக்கப்படும்.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

சரண்யா
30-11-2009, 06:27 AM
நன்றிகள் அண்ணா....
தொடரும்....
கவிதை எழுதியது இல்லை..படிக்கும் போதும் கூட....வேலையில் இருந்து படிக்க சென்றேன் பின்பு படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்காத போது தோன்றிய கவி "மேல் அதிகாரி"....
திடீரென்று வேலைக்கு சென்றேன்,,பின்பு நிறைய கற்று கொண்டேன்...ஆனால் வேலை கிடைப்பது கஷ்டம் என பிறகு தான் புரிந்தது.....
கிடைத்த வேலையை செய்த்தால் அதுவே நம்முடைய அங்கிகாரம் ஆகிவிட்டது...மேற்ப்படிப்பு படித்தாலும் உயர்வு என்ற வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததில் எழுதியது.....

இளசு
01-12-2009, 04:59 PM
உதிப்பவை நெஞ்சைத் தகிப்பவை.. தைப்பவை என்றால்
உதித்தவை அத்தனையுமே கவிதைகள்தாம்..

விளக்கத்துக்குப்பின் கூட தைத்தன..
ஊக்கமும் பாராட்டும் சரண்யாவுக்கு!

சரண்யா
02-12-2009, 10:07 AM
நன்றிகள் இளசு அவர்களே....

சரண்யா
02-12-2009, 10:13 AM
விழிநீரால் வேண்டுதல்செய்கிறேன்
துன்பத்தில் துவண்ட போது நான்
இறைவா,கடவுளே எங்கே நீ
உதவி செய்வார் எப்படியும் அவர்
ஆனால் நன்றி சொல்ல மட்டும் நீங்கள்
மறப்பதேனோ பேரருளை பெற்றவர் தம்
மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நாம்
ஒரு நாள் பேரின்பத்தை அடைவோம்
என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்

இக்கவிதையில் கடைசியில் நான் நீ அவர் நீங்கள் என முயற்சி செய்து எழுதியது...

சரண்யா
02-12-2009, 10:22 AM
நாமே முயலாமல்
பிறரை சாராமல்
நமக்கும் தளராமல்
கடவுளை வணங்காமல்
வெற்றி அடையாமல்
விதியை வெல்லாமல்
சாதிப்பது முடியுமோ.......

aren
02-12-2009, 10:23 AM
கவிதையானாலும் கதையானாலும் கரு நொடிப்பொழுதிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதை யாராலும் அழுத்திப்பெறமுடியாது, தானாகவே வரவேண்டும்.

உங்களுக்கு கவிதை தானாகவே வருகிறது. இன்னும் எழுதுங்கள்.

சரண்யா
02-12-2009, 10:23 AM
ஆகுமே எதுவாகுமே
எண்ணத்தை நல்குமே
சிந்தனையில் வருமே
கனவில் நிற்குமே
கருத்தாய் உருவாகுமே
காரியத்தில் இடம் பெறுமே

சரண்யா
02-12-2009, 10:24 AM
கவிதையானாலும் கதையானாலும் கரு நொடிப்பொழுதிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதை யாராலும் அழுத்திப்பெறமுடியாது, தானாகவே வரவேண்டும்.

உங்களுக்கு கவிதை தானாகவே வருகிறது. இன்னும் எழுதுங்கள்.

நன்றிகள் அரேன் அவர்களே...

சரண்யா
02-12-2009, 10:25 AM
தள்ளாடலாமோ .??
தாத்தாவாக ஆனதாலா
சுறுசுறுப்பின் சிகரமன்றோ
ஓடி ஓடி உழைத்து கால்கள்
தளர்ந்து விட்டதோ
வாழ்ந்து வாழவைத்து வாழ்த்தி
வளம் பெற செய்தும்
தள்ளாடினாலும் ஆவலுடன்
எப்படியும் வாழ்த்தனும்
வருகை புரிந்த உமக்கு
பணிவான வணக்கங்கள்..

சரண்யா
02-12-2009, 10:26 AM
படர்ந்திடுமே கொடியாய்
மேலே வளர்ந்திடுமே
துணையோடு என்றுமே
தந்திடுமே திராட்சை
ச்சீ' ச்சீ' புளிக்குமே
விட்டதே அன்று நரி
காரணமாக தானே
இருந்தாமே உயரத்தில்...

சரண்யா
02-12-2009, 10:29 AM
இன்பம் நிலைத்திடுமன்றோ.............என்று
இசையோடு பல கனவுகளில் செல்கிறாள்
இளம்வயதிலே பிரிந்து புது மகளாய் புகுந்த
இல்லத்தை நோக்கி புது வாழ்வு மலர
இன்புற்று வாழ ...
இறையருள் உன்னோடு.....
இருக்கும் என்றே வாழ்த்தும் உற்றார் உறவினர்...

முதலெழுத்து "இ" என வர வேண்டும் என முயற்சி செய்தது...

ஆதி
02-12-2009, 10:49 AM
சகோதரி, பலமுறை உங்கள் கவிதைகளில் கண்ட ஒரு விசயம், உங்களை சுற்றியுள்ள மிக யதார்த்தமான விசயங்களை, நீங்கள் கவிதைக்குள் கொண்டுவர முயற்சிக்குறீர்கள், அது உங்கள் கவிதைக்கான பலம் என்றே நான் சொல்வேன்.. ஆனால் அதே விசயத்தை நீங்கள் சொல்ல முயற்சிக்கிற விதம் உங்கள் கவிதைக்கும் பலவீனமாக அமைந்துவிடுகிறது, அதை மாற்றுங்கள்..

நம் மன்றத்துக்கு வந்து நான் கற்றுக் கொண்ட விசயங்கள் இவை, அதைதான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.. தப்பாக எடுத்துக் கொள்ளாதீங்க என்னடா இவன் குறை சொல்றானே னு..

"இ"யை முதலெழுத்தாய் கொண்டு எழுத முயன்றது நல்ல முயற்சி அது வார்த்தைகளை வசமாக்க உதவியாய் இருக்கும்..

அது போற் கவிதையில் உள்ள வசனக்குறுக்கீடையும் கவனிங்க.. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..

சரண்யா
02-12-2009, 10:57 AM
தப்பாக எடுத்துக் கொள்ளாதீங்க என்னடா இவன் குறை சொல்றானே னு..
இல்லை ஆதன் அவர்களே..நல்லது சொல்வதை ஏன் தப்பா நினைக்க வேண்டும்...
எழுத்துகளுக்கு உயிர் கொடுப்பது ஊக்கம் என்றே எண்ணுகிறேன்...
நன்றிகள்...இவை என்க்கு தோன்றிய அந்த பெரிய வார்த்தைகளில் கொடுத்துள்ளதில் எழுதியதை பகிர்ந்து கொள்கிறேன்...
பின்னூட்டங்கள் மேலும் மிளிரட்டும் என்றே நினைப்பேன்...

ஆதி
02-12-2009, 11:14 AM
புரிகிறது சகோதரி.. மன்றத்தில் கவிச்சமர் என்று ஒரு திரி இருக்கு.. அதில் தம்மை பட்டை தீட்டி கொண்டவர்கள் பலர்.. அதுவும் கடைசி வார்த்தையில் இருந்து கவிதையாக்க வேண்டிய விளையாட்டுத்தான்..

அதில் உள்ள யவனிகா அக்காவின் கவிதைகளை படுச்சுப்பாருங்க.. புரியும்.. அசத்திருப்பாங்க.. அவங்க என் கிட்ட சொன்னது, தனித்திரி போடுவதைவிட கவிசமரில் கவிதை எழுதுவதுதான் எனக்கு அதிகமா பிடிச்சிருக்கு ஆதன்.. நிறைய யோசிக்க முடியுது, சவாலாகவும் இருக்கு என்றார்கள்.. அதை மட்டும் எடுத்து யவனி(க்)கா கவிதைகள் னு ஒரு கவிதை தொகுப்பே போடலாம்.. அத்தனையும் அவ்வளவு தரமான கவிதைகள்..

சரண்யா
03-12-2009, 02:05 AM
ஆம் இதுவும் அப்படி விளையாடியதில் சில நிமிடத்தில் உதித்தவை என்று பகிர்ந்து கொள்கிறேன்...ஆனால் கவிச்சமர் இல்லை...கவிசமரிலும் சில எழுதியுள்ளேன்...ஆதன் அவர்களே....
நம்முடைய எண்ண ஓட்டம் அத்த்ருணத்தில் உள்ளதை சில வரிகளில் கொண்டுவருவதை பகிர்ந்து கொள்கிறேன்...
எண்ண ஓட்டத்தில் கிடைத்தது சிறப்பா என்பதை பகிர்ந்து தெரிந்து கொள்கிறேன்...
நன்றிகள்..

சரண்யா
04-12-2009, 02:18 AM
துன்பம் வரும் போது துவளாமலும்
இன்பத்தில் இன்புற்று துள்ளாமலும்
சமமாக எண்ணி வாழும் மனிதத்திலும்
இறைமை துணை புரிவதாக
இச்சுழற்சி வைத்தானோ...

சரண்யா
04-12-2009, 02:20 AM
தேவ தூதர்களாய்....நாம் மாறினால்
மனிதனிடம் எத்துணை ஆசைகள்
மலைத்தே நிற்போம் சற்று
நேரத்திற்கு ஓர் ஆசை
நிமிடத்திற்கு ஓர் ஆசை
நொடிக்கு ஓர் ஆசை என
அள்ள அள்ள குறையாத
அட்சய பாத்திரமோ மனம்
விருப்பியதை தகுதி மீறி
அடைவதற்குள் அடுத்த ஆசை....
என்று தான் இதற்கு எல்லையுண்டோ
அன்று தான் நமக்கு ஓய்வுண்டு....

பா.ராஜேஷ்
05-12-2009, 11:05 AM
பாராட்டுக்கள் சரண்யா.... கவிதைகள் அனைத்தும் நன்று !!

சரண்யா
05-12-2009, 11:14 AM
பாராட்டுக்கள் சரண்யா.... கவிதைகள் அனைத்தும் நன்று !!

நன்றிகள் பா.ராஜேஷ் அவர்களே...

நேசம்
05-12-2009, 12:01 PM
பாரட்டுகள் சகோதரி.தொடர்ந்து தாருங்கள்

சரண்யா
05-12-2009, 02:40 PM
பாரட்டுகள் சகோதரி.தொடர்ந்து தாருங்கள்

நன்றிகள்....நேசம் அவர்களே...

இன்பக்கவி
07-12-2009, 05:22 PM
சில நிமிடங்களில் உதித்தவை நன்றாக இருக்கிறது
இப்படி எனக்கு சில நேரங்களில் எங்காவது பயணித்து கொண்டு இருக்கையில் தோன்றும்..
வீட்டுக்கு வந்ததும் மறந்து விடும்..:traurig001:
என்ன செய்ய...
வாழ்த்துக்கள்....

சரண்யா
08-12-2009, 01:12 AM
சில நிமிடங்களில் உதித்தவை நன்றாக இருக்கிறது
இப்படி எனக்கு சில நேரங்களில் எங்காவது பயணித்து கொண்டு இருக்கையில் தோன்றும்..
வீட்டுக்கு வந்ததும் மறந்து விடும்..:traurig001:
என்ன செய்ய...
வாழ்த்துக்கள்....
நன்றிகள் கவிதா அவர்களே...

சரண்யா
08-12-2009, 01:13 AM
புரியல்லையோ....கணக்கு
புரிந்தாலும் அறிவதென்பது
கடினம் தான் ஏனென்றால்
கடவுள் போட்டு வைத்தது

சரண்யா
08-12-2009, 01:15 AM
இனிமையாக மாறிடுமே
இன்னல்கள் தீர்ந்திடுமே
இகழ்ச்சிகளை தவிர்திடனுமே
இன்பமாக வாழ்திடலாமே

சரண்யா
08-12-2009, 01:16 AM
குற்றமும் சொல்வாரே காண்...!
ஆற்றலும் வேண்டுமே அதை ஏற்க
ஏற்றமும் பெற வழியும் சொல்லுவார்
மற்றவரும் வஞ்சபுகழ்ச்சியில் வென்றிடுவார்
குற்றமற்றவரும் தன் நிலையை காட்டிடுவார்
வாழ்திடுவார் உலகம் போற்றும் மனிதராவார்

சரண்யா
23-12-2009, 02:57 AM
ஒளியும் தருவார்...ஆசிரியர்
அறிவொளியும் தருவார்
அதை ஓலியிலும் கேட்பார்
இதை தெரிவிக்கவும் செய்வார்
இணையதளத்தில் அவர்
இடுக்கைகள் பல தொடர்வார்
இணையாக மறுமொழியிடவே

சரண்யா
23-12-2009, 02:59 AM
நல்லொழக்கத்தால் உம்மை
நாடெங்கும் பாராட்டுவதை
பார்த்து ரசிக்கும் மனமே
பரவசத்துடன் உயர்வதை
பண்படுவதை வேண்டுதே

சரண்யா
23-12-2009, 02:59 AM
மறைக்கிறாள்...கஷ்டத்தில்
தவிப்பதை...வாழ்கிறாள்
மறைத்தே...உள்ளத்தில்
என்றுமே...உயர்ந்தாள்

சரண்யா
23-12-2009, 03:00 AM
மீண்டும் இவ்வுலகில்
பிறக்க வேண்டாமென
ஆண்டவனை கேட்டு
கொண்டிருக்கும் ஞானி
உணர்ந்தார் பிறவாமை
நிலையை சமாதியில்
அமர்ந்தார் உயிரோடு
அது தான் ஜீவசமாதியோ..

சரண்யா
11-01-2010, 02:42 AM
நானிலத்தில் போற்றி கொண்டு
வாழ்ந்தாலும் உன்னை வந்து
அடைவதே சொர்க்கம் என்றும்
பேரானந்தம் என்றும் முழுமை
பெறுகிறது இந்த ஜீவனா...

சரண்யா
11-01-2010, 02:43 AM
நீ இருப்பதால் தானே
நான் உயிருடன் உள்ளேன்
நீ சென்று விட்டால் நானோ
ஓன்றுமில்லை மூச்சே!
என்னுள் இருந்து திணற
வைக்காதே என்னையே...

சரண்யா
11-01-2010, 02:43 AM
ஈசனே நீ இங்கு பிறவி
எடுத்தாலும் இன்பமும்
துன்பமும் மாறி மாறி
வருமா உமக்கும் அந்த
சுழற்சியில் வேதனை
தெரியுமா என்றுமே
சுயநலத்தோடு வாழும்
வாழ்வு என்ன வாழ்வோ...
என்று முடியும் இந்த
வினை விதி தலையெழுத்து...

சரண்யா
11-01-2010, 02:44 AM
அவர் வருவார்
நல்வரம் தருவார்
மனதை மாற்றுவார்
நம்பிக்கைத் தருவார்
ஏற்றத்தில் புகழாரம்
பாடுவோர் பெறுவார்
என்றே எண்ணுகிறேன்

சரண்யா
11-01-2010, 02:45 AM
கால்களைப் பற்றிட
மன்னிப்பு கிடைத்திட
நன்மை நடந்திட
ஒழுக்கமாய் மாறிட
வியப்பை அளித்திட
மனம் மாறும் மனிதம்

சரண்யா
11-01-2010, 02:46 AM
உயிர் வாழ மட்டுமே
இத்தனை செய்கை
சரியா?தவறா?
என்ற எந்த சலனம்
இல்லையே....
பணம் வந்தால்
மாறிடும் மனம்
இந்த குணத்தை
சேர்த்து இழுத்து
சென்று விடுகிறது

சரண்யா
11-01-2010, 02:47 AM
பூமி என்ன செய்தது
மனிதனால்...
உருவாக்க முடியாத
இயற்கையை..
ஏன் ?அழிய வேண்டும்
நல்லது அல்லாதது
அழியட்டுமே...

அக்னி
12-01-2010, 07:10 AM
கணநேரக் கருக்கள்,
இங்கே கவிக்குழந்தைகளாக... (நன்றி சிவா.ஜி)

வார்த்தைப் பிரயோகங்களில் கூடிய கவனம் செலுத்துங்கள்.

பாராட்டுக்கள் பல சரண்யா அவர்களுக்கு...

கவிகள் இன்னமும் பிறக்கட்டும்...


பூமி என்ன செய்தது
மனிதனால்...
உருவாக்க முடியாத
இயற்கையை..
ஏன் ?அழிய வேண்டும்
நல்லது அல்லாதது
அழியட்டுமே...

பூமி என்பது மனிதனையும் சேர்த்துத்தான்...
இயற்கை என்பதுவும் மனிதனையும் சேர்த்துத்தான்...

பூமிக்குள் மனிதன்தான்
‘கோடரிக்காம்பு’
ஆனால், அவன் தனக்குட்
‘கோடரிக்காம்பு’ என வகுப்பதுதான்
நகைப்பு...

தன் செயல்கள், தன்னையும் சேர்த்து அழிப்பதை
அறியாத ஆறாவது அறிவு இருப்பது
தனிச்சிறப்பாம் மனிதனுக்கு...

விந்தைதான்...

சரண்யா
12-01-2010, 09:13 AM
கணநேரக் கருக்கள்,
இங்கே கவிக்குழந்தைகளாக... (நன்றி சிவா.ஜி)

வார்த்தைப் பிரயோகங்களில் கூடிய கவனம் செலுத்துங்கள்.
சரி அக்னி அவர்களே....
பாராட்டுக்கள் பல சரண்யா அவர்களுக்கு...
கவிகள் இன்னமும் பிறக்கட்டும்...
நன்றிகள்....

பூமி என்பது மனிதனையும் சேர்த்துத்தான்...
இயற்கை என்பதுவும் மனிதனையும் சேர்த்துத்தான்...
பூமி என்பது நாம் இருப்பது தானே...
இயற்க்கை என்பது நமக்கு முன் தோன்றியதே....

பூமிக்குள் மனிதன்தான்
‘கோடரிக்காம்பு’
ஆனால், அவன் தனக்குட்
‘கோடரிக்காம்பு’ என வகுப்பதுதான்
நகைப்பு...

தன் செயல்கள், தன்னையும் சேர்த்து அழிப்பதை
அறியாத ஆறாவது அறிவு இருப்பது
தனிச்சிறப்பாம் மனிதனுக்கு...

விந்தைதான்...
.
ஆம்...அழகா சொல்லி இருக்கீங்க..

இன்பக்கவி
23-01-2010, 03:24 PM
சில நிமிடங்களில் உதிர்தவையே ஆனாலும் எல்லாமே அருமை
வாழ்த்துக்கள் சரண்யா:icon_b:

சரண்யா
31-01-2010, 06:46 AM
நன்றி இன்பக்கவி அவர்களே...
தோன்றுவதை எழுதுவேன்..ஆனால் அதனை தமிழ் ஆர்வலர்களால் எடுத்து கொள்ளும் விதத்தால் எழுதவே தயக்கம் வந்துவிட்டது.

சரண்யா
23-05-2010, 04:14 AM
வாசி நீ
நல்லதை
மட்டுமே...
புரிந்து வாசி
மதிபெண்ணல்ல
வாசித்தால்...
வாழ்வின்
நிதர்சனம்..

சரண்யா
23-05-2010, 04:15 AM
ஆம் என்று சொல்வது
உண்மையை ஏற்பது
இல்லை என்று சொல்வது
உண்மை அல்லாதது என
எடுத்து கொள்வதே இல்லை
மறுப்பதும்,மீறுவதும்
என்பது உரைப்பது
ஏற்கக்கூடிய ஞாயமோ?

சரண்யா
23-05-2010, 04:16 AM
என்றும் தரிசனம்
கிடைக்க காத்து
வாழ்வின் இன்பம்
துன்பம் எல்லாம்
இறைவன் அளிக்கும்
நிதர்சனம் என்றே...

சரண்யா
23-05-2010, 04:16 AM
இன்று... என்பது
தான் நம்பிக்கை
என்று...என்பது
நம்பிக்கையின்மை
வாழ்க்கை என்ற
கையை நம்பிக்கை
என்ற கையில்...

சரண்யா
23-05-2010, 04:17 AM
அறிவேன் என்பது
நம்பிக்கையில் வருவது
அறிந்தவுடன் மறப்பது
அறியாமையா..
இயலாமையா...
அறிவில்லாததா...
இயல்பானதா...

சரண்யா
23-05-2010, 04:18 AM
முடிவதில்லை என்ற
எண்ணமில்லை என்பதே
வாழ்வின் சாதனைகளை
பல சாதிக்க இயலுமோ

பாலகன்
23-05-2010, 02:24 PM
அடேய்ங்கப்பா அருமையாக நாலு வரிகளில் அழகிய வரிகள்.
நீங்க சொல்லுறது உண்மை தான் சரண்யா
இன்னும் சாதிக்கவேன்டும் என்பதே இந்த காலத்தவரின் தாரக மந்திரமாக இருக்கிறது

அருமையான கவிதைகள்
பாராட்டுகள்