PDA

View Full Version : மாவீரர்களின் ஆத்மாக்கள் சிரிக்கிறது...Ravee
26-11-2009, 11:25 PM
மாவீரர்களின் ஆத்மாக்கள் சிரிக்கிறதுமாவீரர்களின் ஆத்மாக்கள் சிரிக்கிறது

எதிரிகளின் தலைமையை பார்த்து

எம்மை அடக்குவாதாக எண்ணி

மாற்றான் முன் மண்டி இட்டிரே மூடரே

மடியில் இருந்து அள்ளிக்கொடுக்க

அவர்கள் மடையர்கள் இல்லை

ஒப்புக்கு அரசு உங்கள் கையில்

உண்மையில் நடக்கப்போவது வேறு

புலிகளுக்குப்பயந்து சிங்கங்கள்

செந்நாய் கூட்டத்திடம் சீரழியப்போகிறது

அடமானம் வைத்த உன் தேசத்தை

எப்படித்தருவாய் உன் பிள்ளைகளுக்கு

ம்ம் அப்பன் செய்யும் தப்பு

பிள்ளைகள் தலையில் விடியும்

விதை நெல்லை பொங்கி தின்றவன்

கதிதான் உங்களுக்கும்.

aren
27-11-2009, 01:43 AM
உங்கள் கவிதை எனக்கு சரியாக புரியவில்லை. கொஞ்சம் விளக்க முடியுமா?

குணமதி
27-11-2009, 02:27 AM
நண்பரே,

யாரை நோக்கிக் கூறப்பட்டது? ஏன்?

புரியுமாறு விளக்கம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என்னவன் விஜய்
27-11-2009, 11:42 AM
கவிதை எனக்கு நன்றாக விளங்கியது. :)

//விதை நெல்லை பொங்கி தின்றவன், கதிதான் உங்களுக்கும்//

இந்த கடைசி வரியில் வைத்த வசனம் அருமை, அதிபருக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் காலம் பதில் சொல்லும்.

praveen
27-11-2009, 12:04 PM
உங்கள் கவிதை எனக்கு சரியாக புரியவில்லை. கொஞ்சம் விளக்க முடியுமா?

இந்தக்கவிதை முழுக்க முழுக்க சிங்கள ஜனாதிபதியை குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

தேசத்தை சீனாவிடமும் இந்தியாவிடமும் அடகு வைத்தாய் என்று சொல்லியிருக்கிறார்.

நாளைய சிங்கள சமுதாயத்தை பிள்ளைகள் என்று சொல்லியிருக்கிறார்.

//// /// /// ///

ஆனால் இரு சிங்களர்கள் ரெம்ப விவரமானவர்கள், ஒருத்தன் சுடு என்றான் அடுத்தவர் சுட்டான். இப்போ இரண்டு பேரும் முன்னரே கூடிப்பேசியபடி எதிரெதிர் அணியில் நின்று தமிழ்மக்களை மூன்றாவது ஒருத்தருக்கு வாக்களிக்க செய்ய முடியாதபடி செய்யப்பார்க்கிறார்கள்.

பொன்சேகா இருப்பதிலே மோசமானவன் என்பதை (ஒருவேளை) ஜனாதியானதும் தான் ரனில் உணரக்கூடும். அதற்கு முன் எத்தனை ஒப்பந்தம் போட்டாலும் கையெழுத்து தான். நிறைவேற்றுவதாக நினைத்தால் தானே படித்து பார்க்கனும். ஜனாதிபதி முறைக்கு மாற்று முறையை ஜனாதிபதியாக தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்ட ஆள் செய்வானாம். என்ன காமடி அய்யா இது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்த கதை தான்.

விரைவில் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கப்போகிறது. மீதி அப்பாவி சிங்களனும் தொலைந்தான்.

Ravee
27-11-2009, 12:15 PM
இன்னும் மொழிப்போர் புரிந்ததே சொல்லி அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் நடுவே தங்கள் உரிமைக்காக உயிர் துறந்த என் மாவீரர்களைப்பற்றிய கவிதை இது.

சிங்களர்கள் இங்கே சகோதரர்களாக வாழ்ந்தவர்களுடன் பறிமாறி கொள்ளாத சுதந்திரத்தை சீனர்களை உதவிக்கழைத்து பிரச்சனையை தலையில் ஏற்றிக்கொண்டு உள்ளார்கள். சீனர்கள் நுழைந்த எந்த பொருளாதார சந்தையும் இதுவரை உருப்பட்டது இல்லை. கம்யுனிசம் பேசி முதலாளித்துவ பாதையில் தொழிலாளர்களை நசுக்கும் சீனர்களை உதவிக்கு அழைத்து இந்தியாவின் கைகளைக்கொண்டே தமிழர்களை குத்திய ராஜதந்திரம் அவர்களின் மக்களுக்கே நாளை பிரச்சனைகளை உருவாக்கித்தரும் . சிங்களர்கள் என்றாலும் அவர்களுக்கும் சுதந்திரம் என்பது தேசிய உணர்வுதானே.
என்றும் போரும் வாதங்களும் அமைதியை தராது. எத்தனையோ ஆக்கசக்க்தி கொண்ட இளைய சமுதாயம் மண்ணுக்கடியில். இதனால் இழப்பு இலங்கைக்குத்தான்.சகோதரத்துவம் ஆரம்பத்தில் இருந்தே பாராட்டி இருந்தால் இன்று இலங்கையும் ஒரு பெரிய வர்த்தக நாடாக உருவாகி இருந்திருக்கும். என்ன செய்வது எல்லா நாட்டிலும் லீ கியான் யு போன்ற பரந்த சிந்தனை உள்ள அரசியல் தலைவர்கள் கிடைப்பதில்லை.

ஜனகன்
27-11-2009, 01:53 PM
ரொன்ப ரொன்ப நல்லாய் இருக்கு உங்கள் வரிகள். அர்த்தமுள்ள அனைத்து வார்த்தைகளும். இனி காலம்தான் பதில் சொல்லும்.

வியாசன்
27-11-2009, 03:05 PM
அருமையான கவிதை ரவி பாராட்டுக்கள்

விதை நெல்லை பொங்கி தின்றவன்

கதிதான் உங்களுக்கும்.

இந்தவரிகளுக்கு பாராட்டுக்கள்

வியாசன்
27-11-2009, 03:11 PM
இந்தக்கவிதை முழுக்க முழுக்க சிங்கள ஜனாதிபதியை குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

தேசத்தை சீனாவிடமும் இந்தியாவிடமும் அடகு வைத்தாய் என்று சொல்லியிருக்கிறார்.

நாளைய சிங்கள சமுதாயத்தை பிள்ளைகள் என்று சொல்லியிருக்கிறார்.

//// /// /// ///

ஆனால் இரு சிங்களர்கள் ரெம்ப விவரமானவர்கள், ஒருத்தன் சுடு என்றான் அடுத்தவர் சுட்டான். இப்போ இரண்டு பேரும் முன்னரே கூடிப்பேசியபடி எதிரெதிர் அணியில் நின்று தமிழ்மக்களை மூன்றாவது ஒருத்தருக்கு வாக்களிக்க செய்ய முடியாதபடி செய்யப்பார்க்கிறார்கள்.

பொன்சேகா இருப்பதிலே மோசமானவன் என்பதை (ஒருவேளை) ஜனாதியானதும் தான் ரனில் உணரக்கூடும். அதற்கு முன் எத்தனை ஒப்பந்தம் போட்டாலும் கையெழுத்து தான். நிறைவேற்றுவதாக நினைத்தால் தானே படித்து பார்க்கனும். ஜனாதிபதி முறைக்கு மாற்று முறையை ஜனாதிபதியாக தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்ட ஆள் செய்வானாம். என்ன காமடி அய்யா இது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்த கதை தான்.

விரைவில் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கப்போகிறது. மீதி அப்பாவி சிங்களனும் தொலைந்தான்.

பிரவீன் இருவருமே கெட்டவர்கள்தான் அதில் எள்ளவும் சந்தேகமில்லை.

சட்டம் கொலைசெய்தவனைவிட தூண்டியவனுக்குதான் அதிகபட்ச தண்டனையை கொடுக்கின்றது. இதில் சரத்பொன்சேகா இல்லாமல் வேறு ஒரு தளபதி இருந்திருந்தாலும் இந்த கொலைகள் நடந்திருக்கும். ஆனால் ராஜபக்ச ஜனாதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் இந்த படுகொலைகள் கேள்விக்குரியதே.

தூண்டியதற்கான தண்டனை பெறவேண்டியவர்கள் ராஜபக்ச சகோதரர்களும் இன்னொருவரும்............... அதை சொன்னால் நீங்கள் கோபம் கொள்வீர்கள். உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகின்றேன்

அமரன்
27-11-2009, 10:01 PM
செந்நாய்க் கூட்டம்..
அருவருக்க வைத்தாலும் விரும்ப வைக்குது..

உங்களையும்..

கடைசி வரிகள் என்னையும்..

காலடி அரசியல் உள்ள வரை
எதுவும் உறுதி இல்லை.

குணமதி
28-11-2009, 01:28 AM
இந்தக்கவிதை முழுக்க முழுக்க சிங்கள ஜனாதிபதியை குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

தேசத்தை சீனாவிடமும் இந்தியாவிடமும் அடகு வைத்தாய் என்று சொல்லியிருக்கிறார்.

நாளைய சிங்கள சமுதாயத்தை பிள்ளைகள் என்று சொல்லியிருக்கிறார்.

//// /// /// ///

ஆனால் இரு சிங்களர்கள் ரெம்ப விவரமானவர்கள், ஒருத்தன் சுடு என்றான் அடுத்தவர் சுட்டான். இப்போ இரண்டு பேரும் முன்னரே கூடிப்பேசியபடி எதிரெதிர் அணியில் நின்று தமிழ்மக்களை மூன்றாவது ஒருத்தருக்கு வாக்களிக்க செய்ய முடியாதபடி செய்யப்பார்க்கிறார்கள்.

பொன்சேகா இருப்பதிலே மோசமானவன் என்பதை (ஒருவேளை) ஜனாதியானதும் தான் ரனில் உணரக்கூடும். அதற்கு முன் எத்தனை ஒப்பந்தம் போட்டாலும் கையெழுத்து தான். நிறைவேற்றுவதாக நினைத்தால் தானே படித்து பார்க்கனும். ஜனாதிபதி முறைக்கு மாற்று முறையை ஜனாதிபதியாக தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்ட ஆள் செய்வானாம். என்ன காமடி அய்யா இது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்த கதை தான்.

விரைவில் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கப்போகிறது. மீதி அப்பாவி சிங்களனும் தொலைந்தான்.

நன்றி.

இன்பக்கவி
07-12-2009, 05:50 PM
அண்ணா
ஆயிரம் கவிதைகள் படித்தாலும். படைத்தாலும் இவர்களின் செயல்களுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை...
விதை நெல்லை பொங்கி தின்றவன்
கதிதான் உங்களுக்கும்.
இந்த வரிகள் ரொம்ப அருமை அண்ணா