PDA

View Full Version : தண்டனை!



குணமதி
26-11-2009, 03:29 PM
தண்டனை!


உற்றவருக்கும் உதவுகிறவருக்கும்...

ஒரே நேரத்தில் தண்டனை -

நோயாளி மருத்துவ மனையில்.

குணமதி
27-11-2009, 02:57 AM
யாராவது கருத்தை எழுதுங்கள்; இந்தக் 'குறுங் கவிதை'ப் பக்கம் கவனம் செலுத்துவது மிகமிகக் குறைவாக உள்ளதே!

ஓவியன்
27-11-2009, 03:34 AM
உதவுகிறவருக்கு அது தண்டனை தானா..???

உற்றவருக்கு நோய் உற்றதால் தானே
உதவ வந்தார்,
உற்றவருக்கு உதவுவதில் கிடைக்கும்
மன நிம்மதியே தனி தானே.....

நான் கூறிய உற்றவர், உறவினர், வேண்டியவர்...

சிந்திக்க வைத்த கவித்துளிகளுக்கு நன்றி குணமதி..!!

குணமதி
27-11-2009, 07:38 AM
பின்னூடத்திற்கு முதலில் நன்றி.

உற்றவர் - நோயுற்றவர்.

உதவுகிறவருக்கு மனநிறைவு என்பது உண்மை.
உலகில் மற்றவர்கள் பார்வையில், உலகியலில் - பொதுவாக, அவர் தொல்லைப் படுவதாகத் தோன்றுவதை வைத்தே, தண்டனை என்றேன்.

உண்மையில், நோயுற்றோருக்கு உதவுவது ஒப்பற்ற தொண்டு என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

கருத்துரைகளுக்கு, மீண்டும் நன்றி.

அமரன்
27-11-2009, 09:18 PM
கணத்தில் தடுமாற வைத்த கவிதை.

உபத்திரவம் என்பதை பிச்சுப் பார்த்தால் திரவம் இருக்கு.

உலகப் பார்வையுடன் கவிதை பொருந்திப் போகிறது.

பாராட்டுகள்.

குணமதி
28-11-2009, 01:38 AM
கணத்தில் தடுமாற வைத்த கவிதை.

உபத்திரவம் என்பதை பிச்சுப் பார்த்தால் திரவம் இருக்கு.

உலகப் பார்வையுடன் கவிதை பொருந்திப் போகிறது.

பாராட்டுகள்.

நன்றி.