PDA

View Full Version : நம் இறை தேடல்

ஆதி
26-11-2009, 07:52 AM
உண்டு என்பதிலும் உள்ளான்
இல்லை என்பதிலும் உள்ளான்
இறைவன்..

உண்டு என்பதற்கு உடன்பட்டுத்தான்
இல்லை என்கிறோம்
இல்லை என்பதற்கு உடன்பட்டுத்தான்
உண்டு என்கிறோம்..
உண்டும் இல்லையும் ஒன்று
இரண்டிலும் இறைவன் உண்டு..

பிறக்கும் முன் நாமில்லை
இறந்தப் பின் நாமில்லை
எனினும் இன்று நாமிருப்பது உண்மை..
இவ்வாறே இறைமையும்..

எங்கும் இருப்பவனை
இங்கிரு என கோவில் அடைப்போம்
வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு
வேண்டுதலாய் பொன் பொருள் படைப்போம்
பேரண்டம் ஆக்கியவனை
ஊரண்ட விடோம்
இருவினைக் கடந்தவனை
இருக்கும் பேதங்களால் பிரிப்போம்..
உயிர் கொடுத்தவனுக்கு
உயிர் பலிக் கொடுப்போம்..

ஒரு நாள் இறைவனையும் எரிப்போம்
தேவதூஷனம் என்போம்..
பிறகொரு இறைவனை தேடி திரிவோம்..

ஜனகன்
26-11-2009, 10:35 AM
வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான உண்மைகளை எடுத்து கூறியிருக்கின்கின்றீர்கள் . ஆனால் இறைவனின் பங்கு எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது. இருந்தாலும் நல்ல வரிகள். வாழ்த்துக்கள்,ஆதன்

இளசு
26-11-2009, 06:42 PM
பல ஞானியர் நெஞ்சங்களைச் சிவக்க வைத்த கருப்பொருள்.

கனமானதைக் கொஞ்சம் இலகுவாகக் கொடுக்க முடிந்ததே
வலுவாக உன் மனம் இப்பொருளை அசைபோட்டு அரைத்ததால்தான்..

மிகக் கடினமான சங்கீத சங்கதிகளை மேதைகள்
அநாயசமாய் நமக்கு மேடையில் பரிமாறுவதைப் போல...

பாராட்டுகள் ஆதன்..

-------------------------

இல்லை இல்லை என்பவனும்
எதனை இல்லை என்றான்?

இல்லை ஒரு சக்தி என்று
சொல்லவில்லை என்றான்..

இறைவனுக்கும் பெயரை வைத்தான்
ஒரு மனிதன் இங்கே!

-- சொன்னவன் நம் குரு கண்ணதாசன்..
அவன் நினைவாடலில் என் மனம் நெகிழ்வாடலில்!!!

ஆதி
27-11-2009, 11:31 AM
வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான உண்மைகளை எடுத்து கூறியிருக்கின்கின்றீர்கள் . ஆனால் இறைவனின் பங்கு எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது. இருந்தாலும் நல்ல வரிகள். வாழ்த்துக்கள்,ஆதன்

ஜனகன், இறைவனை பற்றிய நோக்குகளில் நான் எப்பொழுதும் மாறு படுபவன்..

இறைவன் நமக்காக என்ன செய்தான் ? என்ன செய்வான் ? என்று கேட்டால்..

அவன் என்ன செய்யனும் ? ஏன் செய்யனும் ? என்றே கேட்பேன்..

என்னுடைய கவலை எல்லாம் இறைவனை பற்றியது அல்ல.. இறைவன் பெய்ரால் சகமனிதனுக்கு நாம் செய்யும் கொடுமைகளை பற்றியே..

அதனால் தான் பெயார் கடவுளே இல்லை என்றார்.. பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ஜனகன்..

ஆதி
27-11-2009, 12:05 PM
பல ஞானியர் நெஞ்சங்களைச் சிவக்க வைத்த கருப்பொருள்.

கனமானதைக் கொஞ்சம் இலகுவாகக் கொடுக்க முடிந்ததே
வலுவாக உன் மனம் இப்பொருளை அசைபோட்டு அரைத்ததால்தான்..

மிகக் கடினமான சங்கீத சங்கதிகளை மேதைகள்
அநாயசமாய் நமக்கு மேடையில் பரிமாறுவதைப் போல...

பாராட்டுகள் ஆதன்..

-------------------------

இல்லை இல்லை என்பவனும்
எதனை இல்லை என்றான்?

இல்லை ஒரு சக்தி என்று
சொல்லவில்லை என்றான்..

இறைவனுக்கும் பெயரை வைத்தான்
ஒரு மனிதன் இங்கே!

-- சொன்னவன் நம் குரு கண்ணதாசன்..
அவன் நினைவாடலில் என் மனம் நெகிழ்வாடலில்!!!

கண்ணதாசனின் வரிகள், என் கவிதைக்கு பின்னூட்டமாய் உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன் அண்ணா..

//கனமானதைக் கொஞ்சம் இலகுவாகக் கொடுக்க முடிந்ததே
வலுவாக உன் மனம் இப்பொருளை அசைபோட்டு அரைத்ததால்தான்..

மிகக் கடினமான சங்கீத சங்கதிகளை மேதைகள்
அநாயசமாய் நமக்கு மேடையில் பரிமாறுவதைப் போல...//

இந்த வரி கிடைக்க கவிதை தன் பிறவி பயனை அடைந்துவிட்டது அண்ணா..

பின்னூட்டத்தும் பாராட்டுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள் அண்ணா..