PDA

View Full Version : இடம் பொருத்து...!

குணமதி
25-11-2009, 04:08 AM
இடம் பொருத்து ஏச்சு!

நடந்து செல்கையில், 'பெரியவண்டி ஓட்டினால் கண்மண் தெரியாதா ?'

பேருந்தில் செல்கையில், 'ஒதுங்கினால் என்ன? ஆடுமாடே தாழ்வில்லை !'

இடம் பொருத்து ஏச்சு.

ஜனகன்
25-11-2009, 10:18 AM
இருக்கும் இடத்தை பொறுத்து அப்பப்போ கதை களை மாற்றுவார்கள். இது தான் இப்போதைய உலகம். நல்ல வசனம், நன்றி

சுகந்தப்ரீதன்
25-11-2009, 11:00 AM
இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சௌக்யமே.. குணமதி..!!

ஹி...ஹி.. இதை குறுங்கவிதை பகுதியில் பதிக்கலாமே..?!

ஓவியன்
25-11-2009, 11:05 AM
எல்லோரும் தாம் சார்ந்திருக்கும் சட்டத்தில் நின்று மாத்திரம் யோசிப்பதனால் வந்த விளைவிது,
எல்லோருக்கும் பொதுவான ஏற்புடைய ஒரு சட்டம் கிடைக்காத வரை பல இடங்களில் இவை
வெவ்வேறு பரிமாணங்களில் அரங்கேறிக் கொண்டே இருக்கும்.

வாழ்த்துகள் குணமதி, சுபி கூறியது போலவே குறுங்கவிதைகள் பகுதிக்கு நகர்த்த பொறுப்பாளர்களை நாடலாமே...

குணமதி
25-11-2009, 03:26 PM
இருக்கும் இடத்தை பொறுத்து அப்பப்போ கதை களை மாற்றுவார்கள். இது தான் இப்போதைய உலகம். நல்ல வசனம், நன்றி

நன்றி.

குணமதி
25-11-2009, 03:29 PM
இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சௌக்யமே.. குணமதி..!!

ஹி...ஹி.. இதை குறுங்கவிதை பகுதியில் பதிக்கலாமே..?!

நன்றி.

இனி, மூன்றடியிலுள்ளவற்றைக் குறும்பாப் பகுதியிலேயே பதிகிறேன்.

குணமதி
25-11-2009, 03:30 PM
எல்லோரும் தாம் சார்ந்திருக்கும் சட்டத்தில் நின்று மாத்திரம் யோசிப்பதனால் வந்த விளைவிது,
எல்லோருக்கும் பொதுவான ஏற்புடைய ஒரு சட்டம் கிடைக்காத வரை பல இடங்களில் இவை
வெவ்வேறு பரிமாணங்களில் அரங்கேறிக் கொண்டே இருக்கும்.

வாழ்த்துகள் குணமதி, சுபி கூறியது போலவே குறுங்கவிதைகள் பகுதிக்கு நகர்த்த பொறுப்பாளர்களை நாடலாமே...

நன்றி.

உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

செல்வா
27-11-2009, 04:10 PM
பொருத்து ??

பொறுத்து - என நினைக்கிறேன்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள் நிறைய வாசியுங்கள்... எழுதுங்கள் ...

குணமதி
27-11-2009, 04:28 PM
பொருத்து ??

பொறுத்து - என நினைக்கிறேன்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள் நிறைய வாசியுங்கள்... எழுதுங்கள் ...

பொருத்தம், பொருத்து என்றுதானே வரவேண்டும்.

பொறுத்து என்றால் பொறுமையாக இருந்து என்றல்லவா பொருளாகும்.

என் கருத்து தவறா சரியா என்ற உறுதி எனக்கு இல்லை.
தெரிந்திருந்தால், விளக்கமாகக் கூறுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஜனகன்
27-11-2009, 09:28 PM
பொறுத்து =பொறுமை காத்தல் அல்லது பொறுமையாக இருத்தல்.
பொருத்து =இரண்டு பொருளை சேர்த்தல் அல்லது இணைத்தல்.
இது இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை நீங்கள் எழுதிய கவிதை தலைப்பு பொருத்து.இடம் பொறுத்து என்றுதான் பேச்சு வழக்கில் சொல்லுவாகள்.என்று நான் நினைக்கின்றேன்.

அமரன்
28-11-2009, 06:28 PM
இடம்பொருத்துப் பேச்சு அல்ல இது ..
தத்தமது வசதிக்கேற்ப நாவளைப்பு.

அடுத்தவனில் மாலை முடிக்கும்
மாந்தனின் மனநிலையும்
இதுக்கான ஒரு காரணம்.

பாராட்டுகள் குணமதி!

குணமதி
29-11-2009, 02:17 AM
இடம்பொருத்துப் பேச்சு அல்ல இது ..
தத்தமது வசதிக்கேற்ப நாவளைப்பு.

அடுத்தவனில் மாலை முடிக்கும்
மாந்தனின் மனநிலையும்
இதுக்கான ஒரு காரணம்.

பாராட்டுகள் குணமதி!

நன்றி அமரன்.

இளசு
03-12-2009, 07:22 PM
அடிக்கடி எனக்கும் தோன்றும் இப்படி..

எல்லா பார்வைகளும் அவரவர் விழி வழியே!

அழகாய்ச் சொன்னீர்கள். பாராட்டுகள்!

குணமதி
04-12-2009, 01:22 PM
அடிக்கடி எனக்கும் தோன்றும் இப்படி..

எல்லா பார்வைகளும் அவரவர் விழி வழியே!

அழகாய்ச் சொன்னீர்கள். பாராட்டுகள்!

நன்றி.

கலையரசி
04-12-2009, 01:39 PM
பொருத்தம், பொருத்து என்றுதானே வரவேண்டும்.

பொறுத்து என்றால் பொறுமையாக இருந்து என்றல்லவா பொருளாகும்.

என் கருத்து தவறா சரியா என்ற உறுதி எனக்கு இல்லை.
தெரிந்திருந்தால், விளக்கமாகக் கூறுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

பொறுத்து என்பதே சரி.

பொருத்து - இணைத்தல் (joint)

பொறுத்து - (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்த; அடிப்படையாகக் கொண்ட (depending upon, based on)
(ஆதாரம்:- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி)

குணமதி
04-12-2009, 01:51 PM
பொறுத்து என்பதே சரி.

பொருத்து - இணைத்தல் (joint)

பொறுத்து - (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்த; அடிப்படையாகக் கொண்ட (depending upon, based on)
(ஆதாரம்:- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி)

இடத்திற்குப் பொருத்தமாக ஏச்சு - என்றபொருளில் 'பொருத்து' என்று எழுதுவது தவறா?