PDA

View Full Version : உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ்



sanjee05
24-11-2009, 12:12 PM
தொல்காப்பியம் கற்பிக்கும் ஆசிரியர் சொன்னார் தமிழ் மொழியில் இருந்து தான் ஏனைய மொழிகள் தோன்றின என்று... அதற்கு பல ஆதாரங்கள் உண்டு என்றும் சொன்னார். உங்கள் கருத்து?

praveen
24-11-2009, 12:59 PM
சமஸ்கிரிதம் கற்பிக்கும் ஆசிரியரை கேட்டால் அவர் ஒரு மாதிரி சொல்வார் :).

அவரவர்க்கு அவரவர் மொழி உயர்ந்தது, உலகின் முதலில் மனிதம் ஆப்பிரிக்கா கண்டத்தில் தான் தோன்றினான் என்பார்கள். அங்கிருந்து தான் உலகின் அனைத்து பாகங்களுக்கும் மனிதன் + மொழி + அறிவு சென்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அறிஞர்
24-11-2009, 01:54 PM
எல்லாருக்கும் தன் தாய்... மொழி.... இனம் தான் உயர்ந்தது....

இதில் தேவையற்ற வாதமே மிஞ்சும்...

தமிழுக்கு தனி அழகு இருக்கிறது.. அதை ரசிப்போம்...

ஆதி
24-11-2009, 05:52 PM
சமஸ்க்ருத ஆசிரியவர் ஒருவர் சொல்லக் கேடட்டது..

தமிழ் மூத்ததா ? சமஸ்க்ருதம் மூத்ததா ? என்றால் செவிவழி செய்திகள்படி தமிழே மூத்தது..

ஆனால் சமஸ்க்ருதத்திடம் இருக்கும் இலக்கியங்கள் போல் மூத்த இலக்கியங்கள் தமிழிடம் இல்லை.. அவை கடற்கோளால் அழிந்துவிட்டது என்று சொல்கிறார்கள், அதனாலேயே சமஸ்க்ருதம் மூத்தது என்ற வாதம் வலுப்படுகிறது, என்றார்..

richard
25-11-2009, 02:06 PM
எல்லாருக்கும் தன் தாய்... மொழி.... இனம் தான் உயர்ந்தது....

இதில் தேவையற்ற வாதமே மிஞ்சும்...

தமிழுக்கு தனி அழகு இருக்கிறது.. அதை ரசிப்போம்...

மிக மிக சரியே

சொ.ஞானசம்பந்தன்
27-11-2009, 03:28 AM
உலகமொழிகள் யாவும் ஒரு மூல மொழியிலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற எண்ணம் முதன்முதலில் 1786 இல் ஏற்பட்டது. ஆனால் அதற்கான உறுதியான ஆதாரத்தை மொழி நூலாரால் கண்டுபிடிக்க இயலவில்லை.

19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொண்டு தற்கால முக்கிய மொழிகளை ஆழமாய் ஆராய்ந்தார்கள். ஒரேயொரு மூல ஊற்றை அறிவிக்கக்கூடிய பொது அம்சங்களைக் கண்டுபிடிப்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கமாயிருந்தது. எங்கெங்கோ ஒதுக்கமாக வாழும் பூர்வகுடிகளின் மொழிகளையும் துருவினார்கள். ஆனால் பயனில்லை.
ஆதாரம் - "உலகமொழிகள்". பதிப்பு 1977. பக். IX

(The Languages of the world by Kenneth Katzner)

இதிலிருந்து முக்கிய வாசகம் ஆங்கிலத்தில்:
If at one time man spoke a single language from which all others subsequently descended, linguistic science is unlikely to uncover any firm evidence of such a fact.

இனி, "உலக வரலாறு" என்னும் நூலிலிருந்து. பதிப்பு 2008.
World History by Timothy C.Hall , M.A. பக். 4, 12.

நைல் ஆற்றின் கரையில் எகிப்திய நாகரிகம் கி.மு.5000 ஆண்டளவில் தோன்றியது. எகிப்தியர் ஹைரக்ளிப் என்னுஞ் சித்திர எழுத்துகளைப் பயன்படுத்தினர். எழுத்துக் கண்டுபிடிப்புக்கு முன்பு மொழியானது பேச்சுவழக்கில் இருந்திருக்கும். ஆகையால் முதன்முதலில் வரலாற்றுக்குத் தெரிகிற மொழி எகிப்திய மொழியே.

கிழக்கு ஆப்பிரிக்காவில் 1.5 லட்சம் ஆண்டுக்கு முன்பு தோன்றி வாழ்ந்த ஹொமோ இரெக்டஸ் (நிமிர்நிலை மனிதன்) காலத்தில் பேச்சு பிறந்தது. ஆதலால் நிமிர்நிலை மனிதர்கள் பேசிய மொழிதான் உலகின் முதல் மொழி. அதன் பெயர் யாருக்கும் தெரியாது.

lolluvathiyar
02-12-2009, 03:11 PM
பேபேபே
மெமெமெமெ
உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஈஈஈஈஈஈஈஈஈஈ
ஊஊஊஊஊஊஊஊ
மாஆஆஆஆஆஆஆஆ

என்று கத்தி கத்தி செய்தி பரப்பியது தான் உலகில் முதல் மொழி என்று ஒரு விஞ்ஞானி கண்டு பிடித்து விட்டார். அ ந்த விஞ்ஞானி யார் என்று நீங்களுக்கு அறிய வேண்டுமா?
அவர் பெயர்
லொள்ளுவாத்தியாராம்
கிபி 2009 இல் இன்னுமும் வாழ்ந்து கொன்டு இருக்கிறாராம்
(ஜூட்)