PDA

View Full Version : மணப்பெண்



saroja20
24-11-2009, 03:26 AM
மணப்பெண்
------------
நிலவாகிய பெண் மறைகிறாள்,
மேகத்தினுள்,
வெட்கத்தால் ....

அமரன்
24-11-2009, 05:30 AM
காற்றுத் தழுவவர
முகிலாடை இழுத்து போர்த்திக்கொண்டாள்
நிலாப்பெண்ணாள்.

புணரும் சொல்லும், பயன்படுத்தப்படும் இடமும் கருத்தாளுகை மாற்றும்.
தமிழில் இது அதிகம் கிடைக்கும் சுகமான மயக்கம்.


நெருங்கி வரும் மாப்பிள்ளை
வெட்கத்தினுள்
மறைந்து போகும் மணப்பெண்.

-----

கட்சிகள் மாறும்..:lachen001:

பாராட்டுகள் சரோஜா.

குணமதி
24-11-2009, 11:46 AM
எடுப்பான நிலையில் எளிய கற்பனை.

குணமதி
24-11-2009, 11:48 AM
காற்றுத் தழுவவர
முகிலாடை இழுத்து போர்த்திக்கொண்டாள்
நிலாப்பெண்ணாள்.

புணரும் சொல்லும், பயன்படுத்தப்படும் இடமும் கருத்தாளுகை மாற்றும்.
தமிழில் இது அதிகம் கிடைக்கும் சுகமான மயக்கம்.


நெருங்கி வரும் மாப்பிள்ளை
வெட்கத்தினுள்
மறைந்து போகும் மணப்பெண்.

-----

கட்சிகள் மாறும்..:lachen001:

பாராட்டுகள் சரோஜா.

அருமையான விளக்கம்.

கீழே காண்பது-
கட்சிகளா? காட்சிகளா?

கட்சிகள் என்றால் கொஞ்சம் விளக்கிக் கூறுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அமரன்
27-11-2009, 09:24 PM
அது காட்சிகள்தான் குணமதி.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

காட்சி கட்சியாகி என் பிழைக்குச் சாட்சியானதால் மாற்றாமல் விடுகிறேன்.

குணமதி
08-12-2009, 03:19 AM
அது காட்சிகள்தான் குணமதி.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

காட்சி கட்சியாகி என் பிழைக்குச் சாட்சியானதால் மாற்றாமல் விடுகிறேன்.

நன்றி அமரன்.