PDA

View Full Version : சதமற்று



ஆதி
23-11-2009, 12:38 PM
சதமற்ற பிறப்புகொண்டு சதமற்ற வாழ்கைவாழ்ந்து
சதமற்ற போனபின்பு சதமற்ற சதம்நானே!
சதமற்ற சதம்நானே சதமற்ற விதத்திலெல்லாம்
சதத்தத்தை தேடிதேடி சதமானேன் சதமற்றே!

மதமறியாது மையலாசை மயக்கறியாது பால்களெனும்
விதமறியாது சிதமறியாது வினையறியாது வேசமெனும்
பதமறியாது கதமறியாது பழக்கங்கள் அறியாது
இதமறியாது பிறந்தேனே இவ்வுலகே ஏதுமறியாது..

சதமற்ற - நிலையற்ற

குணமதி
23-11-2009, 02:41 PM
இது துறவியின் குரலாகத் தெரிகிறதே!

கா.ரமேஷ்
24-11-2009, 03:44 AM
பெயர் மாற்றத்தோடு ... ஆள் மாற்றமும் ஆகி விட்டீரா தோழரே...

ஆதி
24-11-2009, 06:12 AM
இது துறவியின் குரலாகத் தெரிகிறதே!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மெய்மையின் குரல் குணமதி அவர்களே..

பின்னூட்டத்திற்கு நன்றி..

ஆதி
24-11-2009, 06:18 AM
பெயர் மாற்றத்தோடு ... ஆள் மாற்றமும் ஆகி விட்டீரா தோழரே...

ஏதும் நிரந்தரமில்லை.. பெயரும்தான் :)

இது என் நிலையாமை பற்றிய முதல் கவிதையல்ல.. நிறைய இது போலெழுதிருக்கேன் மன்றத்தில் தேடிப்பாருங்கள் கிடைக்கும்..

பின்னூட்டத்திற்கு நன்றி..

அமரன்
28-11-2009, 06:39 PM
நிலையற்ற வாழ்க்கையில்
நிலையான வாழ்க்கைத் தேடுவதில்தானே
வாழ்க்கை வாழ்கிறது.

தமிழாடும் அகத்தனல்.

பாராட்டுகள் ஆதன்.

இளசு
01-12-2009, 04:57 PM
ஞானம் தேடிய சித்தர்களின் குரல்வெம்மை..
இங்கும் என்னைச் சுட்டது ஆதன்..

சதமற்ற நிலை சொல்ல எடுத்த முயற்சியில்
சதமடித்து வெற்றி பெற்றாய்... வாழ்த்துகிறேன்!--


( சிதம், கதம் சொற்களுக்குப் பொருள் அறியத் தர வேண்டுகிறேன் ஆதனை..)