PDA

View Full Version : சென்னை சங்கமம்



இன்பக்கவி
23-11-2009, 08:21 AM
http://www.hinduonnet.com/2008/01/18/images/2008011858170201.jpg
http://photogallery.indiatimes.com/events/chennai/chennai-sangamam-fest/Chennai-Sangamam-fest/photo/3971706/Chennai-Sangamam-fest.jpg
http://www.thehindu.com/mp/2009/01/05/images/2009010550860101.jpg
உடலினை அசைத்து
உணர்ச்சிகளை இணைத்து
இனிய பாடல்களை இனிதே சேர்த்து
கண்ணனுக்கு குளிர்ச்சியாய்
ஆடும் ஒரு அழகிய ஆட்டம்
தமிழருக்கே உரித்தான
நாட்டுப்புற கலைகள்...

மாறி போன உலகில்
மறைந்து போயிற்று
தமிழனின் அடையாளங்கள்....

பெண்கள் பலர் கூடி
கை தட்டி தாளம் இட்டு
ஆடியது கும்மி யாட்டம்....
இன்றோ பெண்கள் ஒன்று
கூடி அடுத்த வீட்டு கதையும்
ஊர் நியாயம் பேசி
நேரத்தை போக்கும் நிலை...

கோலாட்டம், மானாட்டம்,
மயிலாட்டம், ஒயிலாட்டம்
கரகாட்டம்..
தமிழர்க்கு பெருமை சேர்க்கும் கலைகள்
காணாமல் போனதே!!!

சமூகத்தில் மாற்றம்
இரவு விடுதிகளில் அரை இருட்டில்
ஆட்டம் போடும் இளைஞர்கள்...
மேற்கத்திய கலாச்சாரத்தை
கூடி பாரட்டும் யுவதிகள்...
அரை குறை ஆடையும்..
அசிங்கமான அசைவுகளும்
தான் நடனமோ???

நகரத்து வாழ்க்கையில்
நசுங்கி போனது
எம் தமிழர் பண்பாடு..

பொங்கல் விழா..
சென்னை மக்களுக்கு
ஒரு வர பிரசாதம்
"சென்னை சங்கமம்"
அரசியல் ஆதயத்துக்கோ
அறியவில்லை நாங்கள்...
மூன்று நாள் திருவிழா
எங்கள் நகரத்தில்...

தவறாமல் சென்று விடுவோம்..
குழந்தைகள் குதுகலிக்கும்
நாட்கள்..
ஒரு கிராமமே எங்கள் நகரத்து
விதிகளில் வாசம் செய்யும் நாட்கள்...
தப்பாட்டம் பார்த்து ஆடாத
எவரும் உண்டோ....

படிக்காத பாமரர் வளர்த்த கலையை
படித்த நாம் அழித்து வருகிறோம்
அவமானம்...:mad::mad:

கா.ரமேஷ்
23-11-2009, 10:19 AM
///படிக்காத பாமரர் வளர்த்த கலையை
படித்த நாம் அழித்து வருகிறோம்
அவமானம்...////

நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...

குணமதி
23-11-2009, 10:27 AM
சென்னையில் மட்டடுமன்றி ஒவ்வொரு ஊரிலும் நாட்டுப்புறக் கலைகளைப் போற்றி வளர்க்கும் விழாக்கள் கட்டாயம் தேவை.

அரசை எதிர்பார்க்காமல் ஊர்ப்பெரியவர்கள் இதற்கென முயற்சி எடுத்தல்
வரவேற்புக்குரியதாக இருக்கும்.

நேசம்
23-11-2009, 10:49 AM
கிராமிய கலைஞர்களை பொருளாதார ரீதியாகவும் ஊக்கப்படுத்த வேண்டும்.இன்னும் அவர்களது வாழ்க்கை வறுமையில் இருப்பதால் வேறு வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.

இன்பக்கவி
05-12-2009, 11:34 AM
///படிக்காத பாமரர் வளர்த்த கலையை
படித்த நாம் அழித்து வருகிறோம்
அவமானம்...////

நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...

நன்றிகள் ராஜேஷ்
அது தானே நிஜம்

இன்பக்கவி
05-12-2009, 11:36 AM
சென்னையில் மட்டடுமன்றி ஒவ்வொரு ஊரிலும் நாட்டுப்புறக் கலைகளைப் போற்றி வளர்க்கும் விழாக்கள் கட்டாயம் தேவை.

அரசை எதிர்பார்க்காமல் ஊர்ப்பெரியவர்கள் இதற்கென முயற்சி எடுத்தல்
வரவேற்புக்குரியதாக இருக்கும்.

இந்த வருடம் மேலும் சில ஊர்களில் நாடாகும் என்று சொல்றங்கள் பார்போம்

இன்பக்கவி
05-12-2009, 11:42 AM
கிராமிய கலைஞர்களை பொருளாதார ரீதியாகவும் ஊக்கப்படுத்த வேண்டும்.இன்னும் அவர்களது வாழ்க்கை வறுமையில் இருப்பதால் வேறு வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.

உண்மை தான் ஒரு கலை அழிந்த பின் அழிந்து போய்விட்டது என்று பேசியே பழகி விட்டோம்...
இவர்களை எல்லாம் அரசு கண்டு கொள்வதாக தெரிவது இல்லை

சிவா.ஜி
05-12-2009, 02:56 PM
உண்மைதான் கவிதா. சென்னை சங்கமத்தில் கிராமத்தைப் பற்றி அறிந்திராத கான்வெண்ட் பிள்ளைகளும், அவற்றின் பெருமையை அறிந்துகொள்ள முடிகிறது.

மிகவும் திறமையுள்ள அந்தக் கலைஞர்களுக்காக உதித்த உங்கள் கவிதை மிக அருமை.

பெயர்தான் தப்பாட்டம் ஆனால் சரியான அந்த ஆட்டத்தைப் பார்ப்பவர்களின் கால்கள் தானாக நடனமாடும். அவ்வளவு அழகாக இருக்கும்.

வாழ்த்துகள் கவிதா.

Ravee
07-12-2009, 05:34 PM
கவி கலகத்தந்தையை மன்னிக்கணும் கழகத்தந்தையை எங்கள் மண்ணின் மைந்தர்களை நல்லா பார்த்துக்க சொல்லுமா.....:lachen001: :aetsch013: :lachen001: