PDA

View Full Version : நட்பை தெரிந்துகொள்..



இன்பக்கவி
23-11-2009, 07:49 AM
http://i27.tinypic.com/21nl7b9.jpg
உதட்டளவு நட்பு வேண்டாம்
உள்ளத்தில் நிற்கும் நட்பு போதும்
கண்ணே மணியே கொஞ்சல் வேண்டாம்
இதயத்தில் நிஜமான இடம் போதும்

அழது புலம்பும் நட்பு
நம்மை அழவைத்து பார்க்கும்
நட்புகளையும் நட்பாக கொள்ளும்
நட்பு வேண்டும்

பிரித்து பார்த்து பழக தெரியாது
பிரித்து பார்த்தல் பிரிந்து போ
கவலை இல்லை
இழந்தது நீயாக தான் இருக்கும்..
உண்மை நட்பை இழந்தது
நீயாகதான் இருக்கும்..

ஒன்று வந்தால் ஒன்றை மறக்கும்
பச்சோந்திகளாய் இருக்காதீர்கள்
துரோகிகளையும் மன்னியுங்கள்
உண்மையான நட்புகண்டால்..

வேண்டாம் இந்த நாடகம்..
ஒரு உறவு வந்ததும்
மற்ற உறவை மறக்கும் குணம்
கடைசிவரை
உனக்கு எதுவுமே நிலைக்காது...

உண்மையான நட்புகொள்
சோர்ந்து இருக்கும் நேரத்தில்
கைகொடுக்கும் உண்மையான
நட்பை தெரிந்துகொள்..:icon_b::icon_b:

கா.ரமேஷ்
23-11-2009, 09:35 AM
நட்பை நட்புடன் பாவியுங்கள்...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

நேசம்
23-11-2009, 10:20 AM
நட்பில் எல்லாமுண்டு.நட்பில் உண்மையாய் இருப்போம்.நட்பான கவிதை.வாழ்த்துகள் சகோதரி

குணமதி
23-11-2009, 10:20 AM
நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என்ற ஐந்து அதிகாரங்களில் ஐம்பது குறள்களில் நட்பு பற்றிய செய்திகளைக் கூறுகிறார் திருவள்ளுவர்.

உண்மையான நட்பை அறிந்து ஒழுகி போற்றிக் காக்கத் தெளிவு கட்டாயம் தேவை.

சரண்யா
23-11-2009, 10:51 AM
kavitha123 ரொம்ப அழகாய் இருக்கு உங்கள் கவிதை வாழ்த்துகள்...

இன்பக்கவி
05-12-2009, 11:44 AM
எலோருக்கும் நன்றிகள் :icon_b::icon_b:
:icon_b:

sv12345
11-12-2009, 11:25 AM
அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

muthuvel
30-12-2009, 04:49 AM
எலோருக்கும் நன்றிகள் :icon_b::icon_b:
:icon_b:

உங்க கவிதைக்கு நான் அடிமை சகோதரி