PDA

View Full Version : யாருக்கு மிகுதி...?

குணமதி
22-11-2009, 03:34 PM
யாருக்கு மிகுதி...?

சக்கரை நோய்: அவரின் இருகால்களும் வெட்டப்பட்டன.

துன்பமும் தொல்லையும் மிகுதிதான் -

துணைவிக்கு.

ஜனகன்
22-11-2009, 03:52 PM
யாருக்கு மிகுதி, நல்லாய் இறக்கிறது வரிகள். வேறு வழியில்லை. காலம்பூரவும் அவளுக்குத்தான் பொறுப்பு .

குணமதி
22-11-2009, 04:01 PM
யாருக்கு மிகுதி, நல்லாய் இறக்கிறது வரிகள். வேறு வழியில்லை. காலம்பூரவும் அவளுக்குத்தான் பொறுப்பு .

நன்றி.

நன்றாயிருக்கிறது என்ற பொருளில்தானே சொல்லியிருக்கிறீர்கள்!

ஜனகன்
22-11-2009, 07:49 PM
உண்மையில் நல்லாய் இருக்கின்றது வரிகள்

குணமதி
23-11-2009, 11:26 AM
உண்மையில் நல்லாய் இருக்கின்றது வரிகள்

நன்றி.

'நல்லாய்' எனபதை நன்றாக அல்லது நல்லதாக என்று எழுதினீர்கள் என்றால் குழப்பம் இருக்காது.

மீண்டும் நன்றி.

கா.ரமேஷ்
23-11-2009, 11:50 AM
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...

குணமதி
23-11-2009, 02:39 PM
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...

நன்றி நண்பரே.

praveen
23-11-2009, 02:44 PM
எனது மாறுபட்ட விமர்சனம் - தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மனதுக்கு தோன்றியதை பதிந்திருக்கிறேன்.

இந்த விசயத்தில் லாபம் நஸ்டம் போல பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை, ஒரூவேளை துனைவியாருக்கு இப்படி நேர்ந்தால் கணவருக்கு துண்பமா?. சர்க்கரை வியாதியை விடுங்கள் வேறு விபத்தில் ஆனாலும் துண்பம் தான?.

இந்த மாதிரி விசயத்தில் கவிதை? புலனை காட்டுவது எனக்கு சரியாகப்படவில்லை. ஒருவர் அங்கஹீனத்தை வைத்து மற்றவர் கவலைப்படுவார் என்பது சரி இல்லையே.

குணமதி
23-11-2009, 03:13 PM

நீங்கள் பார்க்கும் கோணம் வேறு.

இயல்பாகவே, பெண் ஆணைவிட (ஒப்பீட்டில்) வாழ்வில் தொல்லை துன்பத்திற் காளாகிறாள். இந்நிலையில், கணவனுக்கு இரண்டு கால்களும் இல்லாத நிலையில், (ஒப்பீட்டில்) துணைவியின் துன்பம் மிகுதி என்பதையே குறிக்கிறது.

தமிழ்மன்றத்தில், நல்ல கருத்துக்களைப் பாராட்டி ஊக்குவதே நல்லது. மாறுபாடான பொருள்களைக் கற்பித்து மற்றவர்களைச் சிறுமை செய்ய வலிந்து முயலல் விரும்பத் தக்கதாகப் படவில்லை.

தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மனத்தில் தோன்றியதையே நானும் பதிந்திருக்கிறேன்.

praveen
24-11-2009, 04:11 AM
சகோதரி உங்கள் பாடல் என்னைக்கவர்ந்ததால் தான் நான் கருத்து பதிந்தேன். நான் எங்காவது சூப்பர் நன்றாக உள்ளது என்று ஒருவரி விமர்சனம் பதிக்க பார்த்திருக்கிறீர்களா?.

அவ்வையார் பாட்டிலே குற்றம் கானும் அளவிற்கு கருத்து வண்மை உள்ளவர்கள் நம் நண்பர்கள், உங்கள் பாட்டு அதனை விட உயர்ந்ததா சொல்லுங்கள்.

மன்றத்திலே அனைவரும் ஒரே மாதிரி அல்லது குறையை விடுத்து நிறை மட்டும் சொல்லி வந்தால் உண்மையிலே குறையை எங்கே திருத்தி கொள்வீர்கள். நம் மன்றத்தில் உள்ளவர்களின் கருத்துக்களை வைத்து விரோதி அல்லது நண்பர் என்று எடுத்துக்கொள்ளாமல், உண்மையான நண்பனே குறையை எடுத்துக்கூறுவான் என்ற பதத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்கு (பெண்ணே அதிகம் துன்பம் அடைகிறாள் என்பதற்கு) நேற்றைய செய்தி ஒன்றை தெரியப்படுத்த நினைக்கிறேன். செல்போன் வாங்கித்தராததால் ஒரு கூலித்தொழிலாளியின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் தூத்துக்குடியில். இதில் அந்த கனவன் செய்தது கொடுமையா அந்த பெண் செய்தது கொடுமையா?. அநேக இடத்தில் கணவரை துண்பப்படுத்தும் வகையிலே பெண்கள் இருக்கின்றனர். என் வீட்டில் பராவாயில்லை :), அதனால் தான் தைரியமாக இதனை எழுதுகிறேன்.

உங்கள் கவிதையை இப்படி எழுதலாமே.

கால்கள் இரண்டும் போனதே என்று கண் கலங்கினான் கணவன்
கண்ணீரை துடைத்து காயம்பட்ட இடத்தை வருடினாள் மனனவி

எனக்கு கவிதை எழுத வராது தான், ஆனால் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்.

துணைவி என்ற சொல்லிற்கு பொருளே அனைத்திலும் துணை நிற்பவள் என்றே அர்த்தம். அந்த கால்கள் நன்றாக இருக்கையில் இவள் மகிழ எத்தனை வேலைகளை நடந்து சென்று செய்து கொடுத்திருப்பான் அந்த கணவன். அதற்கு நன்றிக்கடன் செய்ய வேண்டாமா பெண் இவள்.

குணமதி
24-11-2009, 12:23 PM

உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி.

ஒரு விளக்கம் : நான் ஆண்தான்.

குறையைச் சுட்டிக் காட்டுவதை வரவேற்கிறேன். அதனால் குறையைத் திருத்திக்கொண்டு வளர வாய்ப்பு ஏற்படுகிறது என்பதை முழுமையாக நம்புகிறேன்.

நாட்டில் நிலவும் பெரும்பான்மை உண்மைகளைக் கூறும்போது, எங்கோ நடக்கும் ஓரிரண்டு அல்லது சில நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு குறைகூற வேண்டாமே!

உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி கூறுகிறேன்.

சொ.ஞானசம்பந்தன்
02-12-2009, 11:07 PM
துணைவியின் நிலையை மனத்தில் இருத்தி இயற்றிய கவிதை. துணைவர் பற்றி இங்குப் பேச்சில்லை
ஞானசம்பந்தன்

குணமதி
03-12-2009, 02:42 AM
துணைவியின் நிலையை மனத்தில் இருத்தி இயற்றிய கவிதை. துணைவர் பற்றி இங்குப் பேச்சில்லை
ஞானசம்பந்தன்

நன்றி அறிவுத்தொடர்பரே!

இன்பக்கவி
07-12-2009, 05:31 PM
யாருக்கு மிகுதி...?

சக்கரை நோய்: அவரின் இருகால்களும் வெட்டப்பட்டன.

துன்பமும் தொல்லையும் மிகுதிதான் -

துணைவிக்கு.
இருவருக்குமே கஷ்டம் தான்...
துணைவி ...துணையாய் கடைசிவரை இருக்கதானே வேண்டும்...

இளசு
07-12-2009, 07:05 PM
சமூக விதிகளில்
பெண்ணுக்கு மட்டும்
எங்கும் எப்போழுதும்
இரட்டை விலங்குகள்..

இதைப் பிரதிபலிக்கும் கவிதை
இரத்தினச் சுருக்கமாய்..

பாராட்டுகள் குணமதி..

----------------------------------

மாறுபட்ட கருத்து சொல்ல விமர்சகனுக்கு முழு உரிமை உண்டு.
தான் சொல்ல வந்ததைச் சொல்லும் முழு உரிமை படைப்பாளிக்கு இருப்பதைப்போல..

குணமதி

என் கவிதைக்கு இப்படி ஒரு பின்னூட்டம் வந்தால் மகிழ்வேன். வரவேற்பேன்.

கருத்தடி விழும் படைப்பு தந்ததற்கு பெருமை கொள்வேன்.

கண்டுகொள்ள ஆளில்லாமல் போனால்தான் வருத்தம் கொள்வேன்.

மன்றத்தில் '' வெட்கம் கெட்ட தாய்'' என்ற கவிஞர் நண்பன் எழுதிய கவிதை இருக்கிறது. சுட்டி கிட்டியவர்கள் தாருங்கள் இங்கே..

உதாசீனப்படுத்தப்படுவதே படைப்பின் உச்சக்கட்ட சிறுமை..

விமர்சனம் எத்தகையானதும் - அங்கீகாரம், உயிர்நீர் வார்ப்பு..

அங்கீகார நீர் வார்க்கும் அன்புக்கரங்களுக்கு நன்றி முத்தம் மட்டுமே ஈடாய்த் தர இயலும்..

சரிதானே நண்பர்களே!!

குணமதி
08-12-2009, 04:36 AM
இருவருக்குமே கஷ்டம் தான்...
துணைவி ...துணையாய் கடைசிவரை இருக்கதானே வேண்டும்...

நன்றி.

குணமதி
08-12-2009, 04:38 AM
சமூக விதிகளில்
பெண்ணுக்கு மட்டும்
எங்கும் எப்போழுதும்
இரட்டை விலங்குகள்..

இதைப் பிரதிபலிக்கும் கவிதை
இரத்தினச் சுருக்கமாய்..

பாராட்டுகள் குணமதி..

----------------------------------

மாறுபட்ட கருத்து சொல்ல விமர்சகனுக்கு முழு உரிமை உண்டு.
தான் சொல்ல வந்ததைச் சொல்லும் முழு உரிமை படைப்பாளிக்கு இருப்பதைப்போல..

குணமதி

என் கவிதைக்கு இப்படி ஒரு பின்னூட்டம் வந்தால் மகிழ்வேன். வரவேற்பேன்.

கருத்தடி விழும் படைப்பு தந்ததற்கு பெருமை கொள்வேன்.

கண்டுகொள்ள ஆளில்லாமல் போனால்தான் வருத்தம் கொள்வேன்.

மன்றத்தில் '' வெட்கம் கெட்ட தாய்'' என்ற கவிஞர் நண்பன் எழுதிய கவிதை இருக்கிறது. சுட்டி கிட்டியவர்கள் தாருங்கள் இங்கே..

உதாசீனப்படுத்தப்படுவதே படைப்பின் உச்சக்கட்ட சிறுமை..

விமர்சனம் எத்தகையானதும் - அங்கீகாரம், உயிர்நீர் வார்ப்பு..

அங்கீகார நீர் வார்க்கும் அன்புக்கரங்களுக்கு நன்றி முத்தம் மட்டுமே ஈடாய்த் தர இயலும்..

சரிதானே நண்பர்களே!!

உங்கள் கருத்து சரியே!

நன்றி.