PDA

View Full Version : ஏன் சிக்னல் காட்டவில்லை.........



Nanban
11-10-2003, 06:46 AM
ஒருமுறை வீர்சிங் நெடுஞ்சாலை ஒன்றில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். நன்றாக இருட்டி விட்டது. காரின் ஹெட்லைட்டை ஆன் செய்தார் - எரியவில்லை. என்ன செய்வதென்றுப் புரியவில்லை. அருகே உள்ள நகரத்திற்குப் போய் சரி செய்யலாம் என்றால் கூட இரண்டு மணி நேரப் பயணம் செய்ய வேண்டும். அப்பொழுது தொலைவில் இருந்து, ஒரு வாகனம் வருவதைப் பார்த்தார். அதைப் பார்த்ததும், அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. அந்த வாகனத்தின் டெய்ல் லைட்டைப் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டுப் போய் விடலாம். மேடு பள்ளங்கள், வளைவுகள் அனைத்தையும் தாண்டிக் கொண்டு அந்த வண்டிப் போகும் பாதையில் போய் பக்கத்தில் உள்ள நகரத்தை அடைந்து விடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டு, வீர்சிங் அந்த வண்டியை சற்று இடைவெளியை விட்டு பின் தொடர்ந்தார். சீராகப் போய்க் கொண்டிருத்த அந்த வாகனம், திடீரென்று நின்று போனது - எந்த முன்னறிவிப்பும் இல்லாமல். தடுமாறிப் போன வீர்சிங், அந்த வண்டியின் பின்னால் இடித்து விட்டார்.

முன்னால் சென்ற வண்டிக்காரன் வந்து, சிங்கைத் திட்ட ஆரம்பித்து விட்டான். வீர்சிங்கி�ற்கும் கோபம் வந்து விட்டது. "முன்னால் செல்லும் நீ திடீரென்று எந்த சிக்னலும் காட்டாமல் ஏன் நிறுத்தினாய்" என்று கத்தத் தொடங்கி விட்டார்.

அசந்து போன முன்னால் சென்ற வண்டிக்காரன் சொன்னான், "முட்டாளே, என் வீட்டுப் போர்ட்டிகோவில் நான் வண்டியை நிறுத்த எதுக்கடா சிக்னல் காட்ட வேண்டும்?"

(ஒரு பட்டி மன்றத்தில் கேட்டது......)

madhuraikumaran
11-10-2003, 08:49 AM
:-) :-)

இது பரவாயில்லை... நம்ம சென்னை ஆட்டோகாரங்க... லெப்ட்ல இண்டிகெடர் போட்டு, ரைட்டுல கை காட்டிட்டு, நேராப் போய்க்கிட்டே இருப்பாங்க.. அவங்கள பாலோ பண்ணா என்ன ஆகிறது ?...

(உபயம் : விவேக்)

Nanban
11-10-2003, 09:06 AM
அதோ கதி தான்........

இளசு
11-10-2003, 02:41 PM
நண்பன், மதுரைக்குமரன்...
ரெண்டுபேரும் கொடுத்த சிக்னல் சிரிப்பு - வெகுசிறப்பு.

தாசன்
12-10-2003, 07:31 AM
அய்யா
நமக்கு
தமிழகத்தில்
காடி (கார்)
ஓட்டுவதென்றாலே
பயம்
பயம்
பயமே....

gankrish
14-10-2003, 06:59 AM
அருமையான ஜோக் நண்பரே..

இளந்தமிழ்ச்செல்வன்
14-10-2003, 08:10 AM
நன்பர்கள் நண்பன் மற்றும் மதுரைக்குமரன அவர்களின்சிரிப்பு மிகவும் சிறப்பு