PDA

View Full Version : கைம்பெண்



saroja20
21-11-2009, 11:27 AM
கைம்பெண்ணை காணுதல்
அமங்கலம் என்பர்
தன் தாய்
மங்களமாக இருக்கும் வரை.

குணமதி
21-11-2009, 01:37 PM
உலகியல் உண்மை!

இளசு
21-11-2009, 09:15 PM
தலைவலியும் காய்ச்சலும்
தனக்கு வந்தால்தான் ...

அருமையாய்ச் சொன்னீர்கள்..

பாராட்டுகள் நண்பரே!

நேசம்
22-11-2009, 10:05 AM
தன் உணரும் போது அதன் வலி எத்தகையது என்பது தெரியும் என்பதை அழகாக உணர்த்தும் கவிதை.பாரட்டுகள் சகோதரி

Mano.G.
22-11-2009, 11:19 PM
கைம்பெண்ணை காணுதல்
அமங்கலம் என்பர்
தன் தாய்
மங்களமாக இருக்கும் வரை.

இது பெண்களே பெண்களுக்கு
சூட்டிகொள்ளும் ஒரு தகுதி,
எப்போது மாறும்????

அமரன்
27-11-2009, 09:28 PM
சரிதான்..

சரியான அடிதான்..

தாய் என்றாலே மங்கலம் தான்.

இதை தாய்களே மறந்ததும் உண்டு.

எத்தனையோ நல்ல காரியங்களில் பிள்ளையின் வாழ்க்கையைக் காரணம் காட்டித் தள்ளி நின்ற தாய்களை கண்டிருக்கிறேன்.

யார் குற்றம்?

என் தளைகளை அறுக்க முதலில் நான் முனைய வேண்டும்.

பாராட்டுகள் சரோஜா.

தொடர்ந்து எழுதுங்கள்

saroja20
03-12-2009, 06:00 PM
thank you for your comments.

கா.ரமேஷ்
04-12-2009, 03:40 AM
அருமை ... தனக்கென்று வந்தால்தான் வலியின் அருமை தெரியும் போலும்...