PDA

View Full Version : வறுமை



saroja20
21-11-2009, 11:15 AM
வறுமை
-----------

பூ விற்கும் விடலை பெண்ணின்
கூந்தல் ஏறாத
ஒரு முழம் பூ.

குணமதி
21-11-2009, 01:42 PM
வயிறு காயும்போது கூந்தலைப் பற்றி நினைப்பதேது?

இளசு
21-11-2009, 09:18 PM
இட்டிலிக்கடைக்காரி மகனுக்கு
காலை உணவு - பழைய(மு)து!

பாராட்டுகள் நண்பரே!

சரண்யா
22-11-2009, 02:34 AM
ஆம்...வறுமை...கொத்தனார் வீட்டு தரை பொத்தல்...கார்பன்டர் வீட்டி கதவு சரியில்லை...எல்லாம் வறுமை என்ற மூன்றேழுத்தின் அவலம்

அமரன்
27-11-2009, 09:33 PM
பூ
சூடாததால் தெருவிலா..
தெருவில் இருப்பதால்
பூச் சூடல் இல்லையா.

முரண்..

பூவின் காம்பு கூட
முள்ளாகக் குத்துகிறது.

பாராட்டுகள் சரோஜா.