PDA

View Full Version : கவனச்சிதறல்



கீதம்
21-11-2009, 09:57 AM
அன்புமகனின்
பிறந்தநாள் கொண்டாட்டம்;
விமரிசையான விருந்தோம்பல்;
திணறடிக்கும் பரிசுக்குவியல்;
குழுமியிருக்கும் உறவுகளின்
குசல விசாரிப்புகள்;
நண்பர் குழாமின்
நகைச்சுவைப் பேச்சுகள்;
எதிலும் ஒன்ற இயலாமல்
சிறுவர்கள் உதைக்கும்
பந்தின் மேலேயே
சிதறாத கவனம் அவளுக்கு!

குணமதி
21-11-2009, 02:32 PM
ஏன், அவள் நெஞ்சை அழுத்தும் கவலைதான் என்ன?

அறிஞர்
21-11-2009, 03:13 PM
எத்தனை பரிசுகளும், உறவுகளும் இருந்தாலும்...
மகனின் மீது உள்ள கவனத்தை சிதைக்க யாரால் இயலும்..

இளசு
21-11-2009, 07:57 PM
பல படிமங்களில் யோசிக்க வைத்த கவிதை..


பந்தாடப்படும் தன்னிலை - பெண்ணிலை எண்ணியா?
பந்தால் காயப்படலாம் பிள்ளிகள் என்ற பதைப்பா?
பந்து சீண்டி விருந்தினர் சீறலாம் என்ற தவிப்பா?
பந்து பட்டு பொருட்கள் சிதறலாம் என்ற குறுகுறுப்பா?


கவிமனம் கண்ட மெய்ப்பொருள் யாது?

கீதம்
23-11-2009, 03:08 AM
ஏன், அவள் நெஞ்சை அழுத்தும் கவலைதான் என்ன?

இளசு அவர்களும் அறிஞர் அவர்களும் சொல்வதுபோல் மகனின் மீதான அக்கறையும், சிறுவர்களின் பந்து விளையாட்டு விருந்தின் ஆனந்தத்தைச் சிதைத்து சேதப்படுத்திவிடக்கூடாதே என்ற கவலையுமே அவள் கவனச் சிதறலுக்குக் காரணம். பின்னூட்டத்திற்கு நன்றி, குணமதி அவர்களே.

கீதம்
23-11-2009, 03:10 AM
எத்தனை பரிசுகளும், உறவுகளும் இருந்தாலும்...
மகனின் மீது உள்ள கவனத்தை சிதைக்க யாரால் இயலும்..

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. பிறந்தநாள் அதுவுமாய் மகன் காயம்பட்டுவிடக்கூடாதே என்ற கவலை அவளுக்கு. கண்டித்தாலும் கேட்கும் நிலையில் மகனும் இருப்பதில்லை. அது இன்னும் கூடுதல் கவலை. நன்றி, அறிஞர் அவர்களே.

கீதம்
23-11-2009, 03:13 AM
பல படிமங்களில் யோசிக்க வைத்த கவிதை..


பந்தாடப்படும் தன்னிலை - பெண்ணிலை எண்ணியா?
பந்தால் காயப்படலாம் பிள்ளிகள் என்ற பதைப்பா?
பந்து சீண்டி விருந்தினர் சீறலாம் என்ற தவிப்பா?
பந்து பட்டு பொருட்கள் சிதறலாம் என்ற குறுகுறுப்பா?


கவிமனம் கண்ட மெய்ப்பொருள் யாது?

ஆழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி இளசு அவர்களே. நான் யோசிக்காத ஒரு நிலை தங்கள் முதல் வரியில் தெரிகிறது. உண்மையில் மற்ற மூன்று காரணங்களை எண்ணியே எழுதினேன். நன்றி.