View Full Version : நிர்வாக குழு மாற்றங்கள்
அறிஞர்
20-11-2009, 09:43 PM
அன்பு உறவுகளே,
நிர்வாக குழுவில் சில மாற்றங்கள் கொண்டு வரலாம் என எண்ணுகிறேன். மேலும் நானும் சற்று ஓய்வெடுக்கலாம் என எண்ணுகிறேன்.
புதியவர் தலைமையில் புது குழு உருவாக, தற்பொழுது பொறுப்பாளர்களாக பணியாற்றிய அமரன், ஓவியன், அக்னி, மதி, ஆதி, விராடன்.. பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் பணிக்கு மிக்க நன்றி..
இளசு அவர்களின் வழிநடத்தலில் அமரன், பென்ஸ், அன்புரசிகன் புதிய பொறுப்பாளர்களாக செயல்படுவர்.
அன்புடன்,
அறிஞர்
samuthraselvam
21-11-2009, 05:13 AM
பொறுப்பாளர்களாக பணியாற்றி மன்றத்தை வழிநடத்திய அமரன், ஓவியன், அக்னி, மதி, ஆதி, விராடன் ஆகியோர்களுக்கு நன்றி... அறிஞர் அவர்களுக்கும் நன்றி...
புதிய பொறுப்பாளர் பதிவிக்கு வரும் இனியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....
வியாசன்
21-11-2009, 06:26 AM
அன்பு உறவுகளே,
நிர்வாக குழுவில் சில மாற்றங்கள் கொண்டு வரலாம் என எண்ணுகிறேன். மேலும் நானும் சற்று ஓய்வெடுக்கலாம் என எண்ணுகிறேன்.
புதியவர் தலைமையில் புது குழு உருவாக, தற்பொழுது பொறுப்பாளர்களாக பணியாற்றிய அமரன், ஓவியன், அக்னி, மதி, ஆதி, விராடன்.. பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் பணிக்கு மிக்க நன்றி..
புதிய குழு, இன்னும் சில நாட்களில் அமைக்கப்படும்.
அன்புடன்,
அறிஞர்
இது தவறான முடிவு இவர்கள் பணியிலிருந்து விலக்கப்படாமல் வேண்டுமானால் நிர்வாகத்தேவைகளுக்காக இன்னமும் சில புதியவர்களை நியமிக்கலாம். இவர்களின் செயற்பாடு நன்றாக இருக்கின்றது. அதனால் இந்த குழுவுடன் சிலரை இணைத்துக்கொள்ளுங்கள்
அமரன்
21-11-2009, 08:25 AM
குறித்த காலத்துக்கு ஒருதடவை நிர்வாக்குழுவைக் கலைத்து, புதியவர்களை இணைப்பதும், பழையவர்களை நீட்டிப்பதும் நடைமுறை.
sssraj
21-11-2009, 10:43 AM
புதிய நிர்வாக குழுவை நியமித்தாலும், பழைய நிர்வாக உறுப்பினர்களையும் இணைத்து, அவர்களின் வழிகாட்டுதலில் செல்லலாமே!!
குணமதி
21-11-2009, 02:56 PM
சிறந்த பணி செய்த பொறுப்பாளர்களுக்கு நன்றி.
பால்ராஜ்
21-11-2009, 03:01 PM
புதிய குழு திறம்பட செயல்பட வாழ்த்துக்கள்..
கூடிய விரைவில் நியமனங்கள் நடக்கட்டும்.
அன்பு அறிஞருக்கும் அனைத்து நிர்வாகக்குழுவினர்க்கும்
அவ்வப்போது குழுவை மாற்றியமைப்பது நம் மன்ற வழக்கமே..
ஆயினும் தொடர்ந்து அறிஞரே தலைமைப்பொறுப்பில் நீடித்து
அவர் அமைக்கும் புதிய குழுவோடு நம்மை வழிநடத்த வேண்டும் என்பதே
என் கருத்து, விருப்பம்.
விகடன்
22-11-2009, 05:16 AM
எங்களுடன் ஒத்துழைத்து மன்றத்தின் வளர்ச்சிக்காக உழைத்த அனைவரிற்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜனகன்
22-11-2009, 02:43 PM
தமிழை வளர்க்க வெப் சைட்டுகள் பல இருப்பினும் இது போன்ற ஒரு பக்கமும், ஊக்குவிப்பும் எனக்கு தெரிந்து இல்லை என்றே கருதுகின்றேன். இதில் பங்கு பற்றிய நிர்வாக குழு அனைவருக்கும் பாராட்டை தெருவித்தே ஆகவேண்டும். நான் மன்றத்தின் உள் சென்று பார்வையிட்டேன். சும்மா பார்த்தோம், படித்தோம் என்றில்லாமல் சீனியேர்ஸின் ஊக்கமும், பங்களிப்பும் தான் மன்றம் இவ்வளவு வளர்வதற்கும்,நகைச்சுவையுடனும்,மணமாகவும் இருப்பதற்கு காரணம் என்று நினைக்கின்றேன். எனவே புது அங்கத்தவர் வந்தாலும் நீங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.
பா.ராஜேஷ்
23-11-2009, 10:24 AM
பழைய குழுவினரின் பங்களிப்பு மிக செம்மையாய் இருந்தது... இவர்களை நீக்காமல் இவர்களுடன் புதியவர்களை இணைய வைப்பது நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்..
அறிஞர்
23-11-2009, 07:24 PM
இளசு அவர்களின் வழிநடத்தலில் அமரன், பென்ஸ், அன்புரசிகன் புதிய பொறுப்பாளர்களாக செயல்படுவர்.
விகடன்
23-11-2009, 08:19 PM
புதிய நிர்வாகக் குழுவின் அங்கமாக இருக்கும் இளசு அண்ணா, அமரன், பென்ஸ், மற்றும் அன்புரசிகன் ஆகியோரிற்கு எனது வாழ்த்துக்கள்.
ஜனகன்
23-11-2009, 10:15 PM
புதிய அங்கத்தவராக திகழப்போகும் இளசு, அமரன், பென்ஸ், அன்புரசிகன் ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள்.
கீதம்
24-11-2009, 02:01 AM
இதுவரை பொறுப்பில் இருந்து திறம்பட நிர்வகித்த பொறுப்பாளர்களுக்கு நன்றிகளும், புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளும் கூறிக்கொள்கிறேன். அன்புடன் கீதம்.
குணமதி
24-11-2009, 02:04 AM
இளசு அவர்களின் வழிநடத்தலில் அமரன், பென்ஸ், அன்புரசிகன் புதிய பொறுப்பாளர்களாக செயல்படுவர்.
புதிய பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துக்கள்!
புதிய நிர்வாகக்குழுவில் இணையும் இளசு அண்ணா, அமரன், பென்ஸ், மற்றும் அன்புரசிகன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்..!
அக்னி
24-11-2009, 06:58 AM
பொறுப்பாளர் நிலையிலிருந்தபோது,
ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்...
புதிய நிர்வாகக் குழுவுக்கு வாழ்த்துகள்...
புதிய நிர்வாக குழுவுக்கு வாழ்த்துக்கள்.. என்றும் போலெம் ஒத்துழைப்பு தங்களுக்கு உண்டு..
இளசு, அமரன், பென்ஸ் மற்றும் அன்புரசிகன் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.
சரியான ஆட்களிடமே பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பல புதுமைகளை கொண்டுவந்து மன்றத்தை மேலும் சிறப்பாக்குவார்கள் என்றே நம்புகிறேன். அதற்கு என் வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
ஓவியன்
24-11-2009, 10:36 AM
பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் நியதிதானே, அந்த நியதிக்கு நாமும் கட்டுப் பட்டவர்களே....
புதிதாய் மன்றப் பணிகளை நிறைவேற்ற நியமனம் பெற்ற உறவுகளுக்கு என் மனதார்ந்த வாழ்த்துகள், உங்கள் பணி சிறக்க நானும் என்னாலியன்ற ஒத்துழைப்பை நல்கத் தயார் நிலையிலேயே என்றென்றும் இருப்பேன்.
வியாசன்
25-11-2009, 02:04 PM
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. சிறப்பான செயற்பாட்டை தருவீர்கள் என்று நம்புகின்றேன்
அறிஞருக்கும் அனைத்து மன்ற உறவுகளுக்கும்
பட்டறிவைக் கொண்டு மன்ற வழிநடத்தலுக்கு என்னாலான உதவிகள் செய்ய என்றும் நான் உண்டு.
அதற்கு பதவி தேவையில்லை.
முன்னரே நான் இனி பதவி ஏற்பதில்லை எனச் சொல்லியதில் மாற்றமில்லை.
அறிஞரின் தலைமையில் அமரன் ,அன்பு, பென்ஸ் சிறப்பாய் நம்மை வழிநடத்துவார்கள்.
ஒரு சில ஆண்டுகளில் அடுத்த தலைமைக்கு நிறைய வாரிசுகள் நம் மன்றத்தில் தயாராய் இருப்பார்கள்.
நல்ல ஆளுமை உள்ள சமூகம், நிறுவனத்துக்கு நம் மன்றம் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கும்.
அனைவரின் அன்புக்கும் என் நன்றி..
செல்வா
27-11-2009, 04:03 PM
திறம்படச் செயலாற்றி ஓய்வு பெற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு எனது நன்றிகள். புதிய குழுவிற்கு இனிய வாழ்த்துக்கள்....!
கலைவேந்தன்
06-12-2009, 06:18 AM
புதுக்குழுவுக்கு எனது நல்வாழ்த்துகள்...!
மஞ்சுபாஷிணி
09-12-2009, 09:10 AM
பொறுப்பாளர்களாக பணியாற்றி மன்றத்தை வழிநடத்திய அமரன், ஓவியன், அக்னி, மதி, ஆதி, விராடன் ஆகியோர்களுக்கு நன்றி... அறிஞர் அவர்களுக்கும் நன்றி...
புதிய நிர்வாகக்குழுவில் பங்காற்ற வந்திருக்கும் அமரன், இளசு, பென்ஸ், அன்பு ரசிகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....
பா.சங்கீதா
07-05-2010, 07:21 AM
இளசு, அமரன், பென்ஸ், அன்புரசிகன் ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள்.
இதுவரை பொறுப்பில் இருந்து திறம்பட நிர்வகித்த பொறுப்பாளர்களுக்கு நன்றிகள்....
அச்சலா
27-09-2010, 09:49 PM
பலர் பல பொறுப்புகள்..
தங்கள் பொறுப்புக்கள் என்னை மகிழ்விக்கிறது..
vBulletin® v3.8.5, Copyright ©2000-2012, Jelsoft Enterprises Ltd.