PDA

View Full Version : சச்சின் - 30,000



அறிஞர்
20-11-2009, 03:28 PM
அகமதாபாத், நவ.20,2009 :

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்கள் கடந்து, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதிந்துகொண்டார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ்சில் சச்சின் டெண்டுல்கர் 35 ரன்கள் எடுத்தபோது, இப்புதிய சாதனையை நிகழ்த்தினார்.

தற்போது, சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என இரண்டிலும் சேர்த்து 30 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கிரிக்கெட் உலகில் எந்த ஒரு வீரரும் நெருங்க முடியாது என்பது கிரிக்கெட் நோக்கர்களின் கருத்து.

டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங். இவர், அண்மையில் தான் தனது 24 ஆயிரம் ரன்களைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகாலத்தைப் பூர்த்தி செய்துள்ள சச்சின் டெண்டுல்கர், இதுவரை ஒருநாள் போட்டிகளில் 17,178 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 12,812 ரன்களும், ஒரு சர்வதேச டிவென்டி 20 போட்டியில் 10 ரன்களும் எடுத்துள்ளார்.

இந்த மகத்தான சாதனையை சமகால கிரிக்கெட் வீரர்கள் நெருங்குவது என்பது மிகக் கடினமான ஒன்றாகும்.

மேலும், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையும் சச்சின் தான் தக்கவைத்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் தன்னிகரற்ற வீரராக திகழ்ந்து, இந்திய விளையாட்டுத் திறனின் அடையாளமாகத் திகழும் நம் சச்சினை...

வாழ்த்துவோம்... வாருங்கள்..!

நன்றி-விகடன்

ஆ.ஜெயஸ்ரீ
20-11-2009, 06:25 PM
கிரிக்கெட் என்பதே சச்சின் தான் என்னும் படியாக யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார் . அவர் ஒரு கலங்கரை விளக்கு . சச்சினால் நம் அனைவருக்கும் பெருமை .மனம் நிறைந்த வாழ்த்துகள்

அன்புரசிகன்
20-11-2009, 10:47 PM
பொதுவாக ஒரு கருத்து உண்டு. சச்சின் விளையாடினால் களத்தில் அவருக்கு எதிராக 13 பேர் இருப்பார்கள் என்று... (நடுவர்கள் உட்பட்டு) சிலவேளை 14ம் ஆகிவிடுகிறது. (சக ஆட்டக்காரர்களின் ஆட்டம்)

நேற்று அவரது ஆட்டத்தினை பார்க்கும் போது எம்நாட்டவர்களின் ஆட்டத்திலேயே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. சச்சினை 100 அடிக்கவிடாது அகலப்பந்துகளை வீசி ஓட்டங்களை ஏற்றினார்களே தவிர சச்சினை அடிக்கவிடவில்லை. 99 ஓட்டங்களுடன் சச்சின் நீண்டநேரம் போராடி பெற்றார்.

ஓட்ட எண்ணிக்கைகளில் சச்சினை வீழ்த்த ஒருவன் பிறக்கவேண்டும்...

வாழ்த்துக்கள் சச்சினுக்கு...

aren
21-11-2009, 03:11 AM
ரிக்கி பாண்டிங் ஒருவர்தான் சச்சின் சாதனையை முறியடிக்கமுடியும். ஆனால் அவர் ஆஸ்திரேலிய அணியின் தலைவராக இருப்பதால் இன்னும் ஒரு தொடரில் தோற்றால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம். அப்படி நடந்தால் சச்சின் அவர்களின் சாதனையை முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

டெஸ்ட் தொடரும் ஒரு நாள் போட்டித் தொடரும் நிறுத்தப்பட்டுவிடும் என்று பலர் பேசுவதால் சச்சின் அவர்களின் சாதனை அப்படியே வரலாற்று சிறப்பு மிக்கதாகிவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ரிக்கி பாண்டிங்க் ஆடிக்கொண்டிருக்கும்வரை சச்சின் டெண்டுல்கர் ஆடிக்கொண்டு இருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது. உடல்தான் கொஞ்சம் ஒத்துழைக்கவேண்டும்.

அவருக்கு என் பாராட்டுக்கள்.

கா.ரமேஷ்
21-11-2009, 03:36 AM
சச்சினின் இருபது வருட கால உழைப்பு என்பது சாதரன விசயம் அல்ல.. அவர் இந்தியாவிற்க்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று.இன்னும் பல சாதனைகள் படைக்கட்டும் வாழ்த்துக்கள் சச்சின்...

sssraj
21-11-2009, 10:25 AM
சச்சின் என்றலே கிரிக்கெட்டில் சாதனை என பொருள் கொள்ளும் அளவிற்கு, இமாலய சாதனைகள் பல படைத்துகொண்டிருப்பவர்..அவரின் சாதனைகளை வேறு எவரும் முறியடிக்கமுடியுமா? என்பது கேள்விகுறிதான்..
வாழ்த்துக்கள் பலபல..

மன்மதன்
21-11-2009, 06:03 PM
ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு பேர் சொல்லும் பிள்ளை இருப்பார்கள்.. கிரிக்கெட்டுக்கு சச்சின்...

பல சாதனை பட்டியலை வைத்திருக்கிறார். இதை முறியடிக்க யார் வருகிறார்கள் என்று பார்க்கலாம்..

Mathu
23-11-2009, 03:31 PM
ஒரு நிகரற்ற சாதனை, இதை முறியடிக்க இன்றைய நிலையில் ஜாரும் இல்லை
பாராட்டுகள் சச்சினுக்கு