PDA

View Full Version : கூகுளில் இந்திய வரைபட குளறுபடிகா.ரமேஷ்
20-11-2009, 06:30 AM
இன்டர்நெட்டில் தகவல் தேடுவோர் அதிக அளவில் பயன்படுத்தும் கூகுள் இணைய தளம் நாட்டுக்கு நாடு தன் நிறத்தை மாற்றிக்* கொள்வதை கீழ்வரும் செய்தி அம்பலப்படுத்தி உள்ளது.


அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் வேளையில், இந்தியர்களை கூகுள் நிறுவனமும் ஏமாளியாக்கி வருகிறது. கூகுள் வெளியிட்டுள்ள கூகுள் மேப் பகுதியை, இந்தியாவிலிருந்து http://maps.google.co.in வெப்சைட் வழியாக பார்ப்பவர்களுக்கு அருணாச்சலும், காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக காட்டப்படுகின்றன. இதர நாடுகளிலிருந்து http://maps.google.com வெப்சைட் வழியாக பார்ப்பவர்களுக்கு அருணாச்சலும், காஷ்மீரும்சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று காட்டப்படுகின்றன. அதே வேளையில், சீனாவிலிருந்து http://ditu.google.com பார்க்கப்படும் கூகுள் வெப்சைட்டில் அருணாச்சல் மற்றும் காஷ்மீரின் அக்சாய் சின் பகுதிகளை, குறைந்த பட்சம் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று கூட எழுதாமல், முழுமையாக சீனாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் மேப் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும். இந்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ள கூகுளின் இந்த செயலை மேப்களிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


இன்டர் நெட்டில் தகவல் தேடுவோர், கீதை, பைபிள், குரான் ஆகிய புனித நூல்களில் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இணையாக கூகுள் இணைய தளத்தை நம்பி அது தரும் தகவல்கள் உண்மையானதாக இருக்கும் என்று நம்பி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள மேப்களில் காஷ்மீரையும் அருணாசல பிரதேசத்தையும் சர்ச்சைக்குரிய பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவை அந்தந்த நாட்டோடு நின்று விடுகின்றன. மற்ற நாட்டினருக்கு இது தெரியாது. ஆனால் உலகம் முழுவதும் பலராலும் பார்க்கப்படும் கூகுள் இணைய தளம் இவ்வாறு மேப்களை வெளியிட்டு, நாட்டுக்கு நாடு தன் நிற*த்தை மாற்றிக் கொண்டிருப்பது கூகுளை நம்பி தகவல் தேடுவோரை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.


நமது தினமலர் வாசகர்கள் கூகுளின் இந்த செயல் குறித்த கருத்தையும் உணர்வுகளையும் கூகுள் இணைய தளத்திற்கு press@google.com என்ற ஈ-மெயில் முகவரியில் தெரிவிக்க வேண்டுகிறோம்.

நன்றி தினமலர்:
http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1583

கா.ரமேஷ்
20-11-2009, 06:34 AM
வியாபார நோக்கோடு செயல்படும் கூகுளின் இந்த செயல் குறித்த கருத்தையும் உணர்வுகளையும் கூகுள் இணைய தளத்திற்கு press@google.com என்ற ஈ-மெயில் முகவரியில் கூகுள் நிறுவனத்தை கண்டித்து நாமும் நம் உணர்வுகளை தெரிவிக்கலாமே....

நன்றி..

தாமரை
20-11-2009, 07:44 AM
கண்டிப்பாக தெரிவிக்கிறோம் ரமேஷ்

பா.ராஜேஷ்
20-11-2009, 01:21 PM
பணம் பத்தும் செய்கிறது... வேறென்ன சொல்வது...

ஆ.ஜெயஸ்ரீ
20-11-2009, 02:02 PM
நம் ஊர் அரசியல்வாதிகளையும் மிஞ்சி விட்டது கூகிள் தளம் . குட்ட குட்ட குனிவது மட்டுமே இந்தியர்களுக்கு தெரியும் என்று நினைத்து விட்டார்களோ ? அகிம்சையை உலகிற்கு தெரிவித்த நாம் அதனையே முதலில் செயல் படுத்துவோம் நாம் எதிர்ப்பை காட்ட.

நேசம்
20-11-2009, 05:56 PM
நம்முடைய எதிர்ப்பு கூகிள் தனது நிறத்தை மாற்றி கொள்ளும் நம்பிக்கையில் நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்போம்

அறிஞர்
20-11-2009, 07:40 PM
ஊருக்கேற்ப வேஷம்...

பொழப்பை நடத்த வியாபார யுக்திகள்.

press@google.comக்கு மடல் அனுப்பியாச்சு

aren
21-11-2009, 03:15 AM
நானும் இதை படித்தேன்.

இது வியாபாரத்திற்காக நடத்தப்படும் தளம். இதனால் இந்தியாவிற்கு ஒரு பாதிப்பும் வராது.

கா.ரமேஷ்
21-11-2009, 03:29 AM
நானும் இதை படித்தேன்.

இது வியாபாரத்திற்காக நடத்தப்படும் தளம். இதனால் இந்தியாவிற்கு ஒரு பாதிப்பும் வராது.

ஆனால் உலகெங்கும் பரவியிருக்கும் கூகுளின் நம்பிக்கையினால் அவர்கள் செய்யும் ஏமாளித்தனத்தை மக்கள் உண்மை என்று நம்பலாம் இல்லையா? அவர்களது சொந்த பகுதி என்ற நினைப்பினால் நமக்கெதிரான தீவிரவாத செயல்களில் இறங்கலாம் இல்லையா? அதனால்தான் குறைந்த பட்சம் சர்ச்சைக்குறிய பகுதி என குறிப்பிடலாம் ஆனால் இப்படி முழுமையாக ஏமாற்றுவது எதன் அடிப்படையில்...
இவை தனிப்பட்ட கூகுள் நிறுவனத்தை மட்டும் சார்ந்ததாக தெரியவில்லை அமெரிக்காவின் தந்திர வேலைப்பாடுகளாக கூட இருக்கலாம் என்பது எனது கருத்து...

குணமதி
21-11-2009, 02:13 PM
இந்திய அரசு இப்படிப்பட்டச் செயல்களைக் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.