PDA

View Full Version : அல்சர் பற்றி ஓர் அலசல்...சரண்யா
18-11-2009, 08:34 AM
மன்ற அன்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்...

அலசர் வரபோகுது சாப்பிடலணா...என்று பலமுறை சொல்லுவது உண்டு...
நாம் தூங்கும் போது பல மணிநேரமானலும் நாம் சாப்பிடாமல் இருக்க இயலுகிறது...பசி என்பது இல்லையென்றாலும் மருந்து உண்டு...

உண்மையில் அல்சர் என்பது எப்படிங்க வருது...
பகிர்ந்து கொள்ளுங்கள்...

சரண்யா
19-11-2009, 02:46 AM
யாருமே சொல்லயே....

hariharans
19-11-2009, 04:57 AM
யாராவது சொல்லுவாங்களா என்று எதிர்பார்க்கிறேன்.

samuthraselvam
19-11-2009, 05:43 AM
நல்ல கேள்வி தான்... இளசு அண்ணா கண்களில் இந்தத் திரி படவில்லையோ...? பதில் சொன்னால் நானும் ஆவலா தெரிந்துகொள்வேன்.....

samuthraselvam
19-11-2009, 06:12 AM
http://attur.in/health/ulser.html

இந்தச் சுட்டியில் போய் பாருங்கள் உதவும்...

praveen
19-11-2009, 06:23 AM
முன்னரே வந்த தலைப்பில் திரி எழுப்புவதற்கு முன், அந்தப்பகுதியில் அது வந்திருக்கிறதா என்று பார்க்கலாமே.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10102

உங்கள் நோக்கம் நேர்மையாக இருந்தால், மேலே உள்ள திரி சென்றால் உங்கள் கேள்விக்கு உடனே விடை கிடைத்திருக்கும்.

சரண்யா
19-11-2009, 12:24 PM
அட அடா...தேடணும் தோணவில்லை...பார்த்தேன் ஒரு சிறு பக்கங்களை...இல்லாததால் இந்த திரியை தொடங்கினேன்....
2007- 2009 எங்கே...ஏன் இப்படி?

கணினி கேள்வி தேடணும் சொன்னீங்க....மருத்துவத்திலுமா...
எனினும் நன்றிகள் இந்த சுட்டியை தந்தமைக்கு...
நன்றிகள் samuthraselvam அவர்களே...

சரண்யா
19-11-2009, 12:43 PM
முக்கால்வாசிக்கும் மேல் அல்சரை உருவாக்குவது....
ஹெலிகோபெக்டர் பைலோரி ( Helicobacter Pylori) என்ற
பாக்டீரியா வகை நுண்ணுயிரிதான்.

இது எப்படி புண் உருவாகிறது....

சரண்யா
19-11-2009, 12:44 PM
மாத்திரை என்பது எப்படி இதில் காரணமாகின்றது...மேலும் அது சூடு என்பது சொல்லுவது உண்மையா?

praveen
19-11-2009, 01:41 PM
அட அடா...தேடணும் தோணவில்லை...பார்த்தேன் ஒரு சிறு பக்கங்களை...இல்லாததால் இந்த திரியை தொடங்கினேன்....
2007- 2009 எங்கே...ஏன் இப்படி?

கணினி கேள்வி தேடணும் சொன்னீங்க....மருத்துவத்திலுமா...
எனினும் நன்றிகள் இந்த சுட்டியை தந்தமைக்கு...
நன்றிகள் samuthraselvam அவர்களே...


2007-2009 என்றாலும் அல்சர் என்றால் அது வயிற்றில் தானே வருகிறது :).

சகோதரி என் முந்தைய பதிவை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. உங்களுக்கு ஒரு கேள்வி கேட்டு உடனடி பதில் தேவை என்றால், அது முன்னரே இங்கே கேட்கப்பட்டு பலர் பதில் பதிந்திருந்தால் அப்படியே லட்டு மாதிரி எடுத்துக்கொள்ளலாமே அன்றி ஒரு கேள்வியை பதிந்து, பின்னர் யாரும் பதில் தரவில்லை என்று வருத்தப்பட்டு இன்னொரு பதிவு வேண்டாமே.

கணினி கேள்வியாகட்டும் மருத்துவம் ஆகட்டும் ஆன்மீகம் ஆகட்டும், நமக்கு இது தேவை என்று கையில் வைத்துக்கொண்டே கேட்டால் பதில் எப்படி வரும். நீங்கள் சரியாக அந்த திரியை தேடிப்பார்த்து (நானெல்லாம் எப்படி தேடி சுட்டி பதிக்கிறேன் என்று நினைக்கிறீர்கள், பொறுமையாக தான் தேட வேண்டும், நமக்கு தேவை என்றால் நாம் தான் மெனக்கெடனும்) அதில் உள்ளதை படித்து தேவைப்பட்டால் இன்னொரு கேள்வி கேட்டால், அந்த திரியில் பதில் பதிந்தவர் எல்லாம் உடனே பதில் தர முற்படுவர்.

எனக்கும் மன்றத்தில் நிறைய திரி துவங்க ஆசை தான். ஆனால் முழுதும் படிக்கதாதால் தாமதிக்கிறேன்.

சரண்யா
20-11-2009, 09:18 AM
நன்றிகள் praveen அவர்களே...உங்கள் பொறுமையை புரிய வைத்தமைக்கு...

சரண்யா
23-12-2009, 03:17 AM
http://www.nlm.nih.gov/medlineplus/ency/images/ency/fullsize/19243.jpg
அல்சர் என்றால் என்ன?

அல்சர் என்பது செரிமான உறுப்பு/குழலின் உட்சுவர்களில் ஏற்படும் புண்கள்/ரணம் ஆகும். அல்சர் பெரும்பாலும் பொதுவாக டியோடினத்தில் (அதாவது சிறுகுடலின் முதல் பகுதியில்) ஏற்படும்.

அல்சர் ஏற்படுத்துபவைகள் யாவை?

* ஹெலிகோபாக்டென் பைலோரை எனப்படும் ஒரு வகை பாக்டீரியா பலவகை அல்சர்களை ஏற்படுத்துகிறது.
* வயிற்றில் சுரக்கும் அமிலம் மற்றும் திரவச்சாறு செரிமான மண்டலத்தின் உட்சுவரினை எரித்து, அரிப்பதும் அல்சர் ஏற்படுவதில் பங்கு வகிக்கிறது. இது உடலில் மிக அதிகமான அமிலம் உற்பத்தியாவதினாலோ அல்லது செரிமான மண்டலத்தின் உட்சுவரானது பிறவழிகளில் சிதைவுறுவதினாலோ ஏற்படுகிறது.
* உடல் ரீதியான மற்றும் உளரீதியான அழுத்தமும், ஒரு நபரில் ஏற்கனவே அல்சர் இருப்பின், அதனை அதிகரிக்கிறது.
* சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினாலும் அல்சர் ஏற்படுகிறது.

அல்சரில் ஏற்படக்கூடிய அடையாளங்கள்

* சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும் போது நன்றாய் இருக்கும், ஆனால் 1 அல்லது 2 மணி நேரம் கழித்து, நிலமை மோசமாகும் (டியோடினல் அல்சர்).
* சாப்பிடும்போது மற்றும் குடிக்கும் போது நிலைமை மோசமாதல் (காஸ்டிரிக் அல்சர்).
* இரவு தூக்கத்தை பாதிக்கும் அளவுக்கு வயிற்று வலி ஏற்படுதல்.
* வயிறு கனத்தல் போன்ற உணர்வு, வயிறு உப்புதல், வயிறு எரிச்சல், அல்லது மந்தமான நிலையில் வயிற்றில் வலி.
* வாந்தி
* எதிர் பாராத உடல் எடை இழப்பு.

கடைப்பிடிக்க எளிய ஆலோசனைகள்

* புகைபிடிக்கக் கூடாது
* மருத்துவர் பரிந்துரைக்காத பட்சத்தில் அழற்சியை தடைசெய்கிற மருந்துகளைத் தவிர்க்கவும்.
* காஃபீன் மற்றும் மதுவகைகளைத் தவிர்க்கவும்
* நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.

அல்சர் மோசமடைதலின் எச்சரிக்கையான அடையாளங்கள்

* இரத்த வாந்தி ஏற்படுதல்.
* சில மணி நேரங்களுக்கு முன் அல்லது நாளுக்கு முன் உட்கொண்ட உணவினை வாந்தி பண்ணுதல்.
* வழக்கத்திற்கு மாறான பலவீனம் அல்லது தலைசுற்றல்.
* மலத்தில் இரத்தம் வருதல் (மலத்தில் இரத்தம் வருவதால் மலத்தின் நிறம் கருப்பு அல்லது தார் போன்று மாறுதல்)
* தொடர்ந்து கொமட்டல் அல்லது திரும்பத்திரும்ப வாந்தி
* திடீரென மோசமான வலி
* தொடர்ந்து எடை குறைவு
* மருந்து உட்கொண்டாலும், வலி நீங்காமலிருத்தல்
* வலி உடலின் பின்பக்கம் வரை சென்றடைதல்.
அல்சருக்கான மூலிகை சிகிச்சை

மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை வைத்தே அல்சரை எளிதில் குணப்படுத்தலாம். ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது.

அல்சரை குணப்படுத்த வேப்பிலை, குப்பை மேனி, வெந்தியம், அருகம்புல், கடுக்காய், அத்தியிலை, நெல்லி, கற்றாழை, கோஸ், மிளகு, சுக்கு, புதினா, கொத்தமல்லி, நன்னாரி மற்றும் மணத்தக்காளி, சுண்டைக்காய், பெருங்காயம், மஞ்சள், வசம்பு, சீரகம், வாழைத் தண்டு, மாதுளை, அகத்திக்கீரை முதலியவைகள் பயன்படுகின்றன.

இவைகளை சேகரித்து கேப்சூலாகவோ, பவுடராகவோ தயாரித்து சாப்பிடலாம். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன் அளவு இந்த பவுடரை எடுத்து தண்ணீரில் கலந்து இரண்டு முறை சாப்பிட்டாலே போதும். எவ்வளவு நாள்பட்ட குடல் புண்ணாக இருந்தாலும் 4 மாதங்களில் பறந்து விடும்.
நன்றிகள்:hi2world
http://www.mayoclinic.com/images/image_popup/r7_ulcers.jpg

குணமதி
23-12-2009, 04:04 AM
உதவும் செய்தி.
நன்றி.

ஜனகன்
03-01-2010, 10:24 AM
நல்ல பயனுள்ள தகவல் சரண்யா. படத்துடன் விளக்கம் கொடுத்தமை அருமை.நன்றி.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சரண்யா
03-01-2010, 01:45 PM
நன்றிகள் குணமதி மற்றும் ஜனகன் அவர்களே...