PDA

View Full Version : !!!எங்கே என் இதயம்!!!



இன்பக்கவி
18-11-2009, 07:53 AM
நிலவோடு ஒப்பிட்டேன்
மறைந்து விடுவேன் என்றாய்
தென்றலோடு ஒப்பிட்டேன்
சூறாவளி என் குணம்
இல்லை என்றாய்

கடலோடு ஒப்பிட்டேன்
சீறி பொங்கி எழ தெரியாது என்றாய்
தீயோடு ஒப்பிடவா என்றேன்
அணைந்து போவேன் என்றாய்
மலரோடு ஒப்பிட்டேன்
வாடி போவேனோ என்றாய்

எதனோடு ஒப்பிடுவது உன்னை என்றேன்
ஒப்பிட்டு பார்க்காதே பிடிக்காது என்றாய்
மாற்றி கொண்டேன் என்னை
என் இதயமே நீதான் என்றேன்
அதுதான் வேண்டும் என்றாய்

தந்துவிட்டேன் என்றேன்
பத்திரமாய் உன் இதயத்தோடு
வைப்பேன் என்றாய்...
நம்பிக்கையாய் உன் முகம் பார்த்தேன்
நாணத்தால் முகம் மறைத்தாய்..
போதுமடி உன் நாணம்
உன் நாணத்தால்
நான் நிலைக் குலைந்து போனேன்..

காலங்கள் மாறியது
என் கோலமும் மாறியது
இன்று உன் முகம் பாத்தேன்
அவமானத்தால் தலை குனிகிறாய்..

எங்கே என் இதயம் என்றேன்..
வெறும் மௌனத்தை மட்டும்
எனக்கு தந்து விட்டு
மறைந்து சென்றாய்
கணவரோடு...

உன்னை நிலவோடு
ஒப்பிட்டது சரிதான்
என் மனதுக்குள்
சொல்லிக் கொண்டேன்:icon_ush:

சரண்யா
18-11-2009, 08:10 AM
என்ன கவிதா அவர்களே..ஆணாக யோசித்து எழுதியுள்ளீர் போல.....அநத ஷ் நல்லா இருக்கிறது...

இன்பக்கவி
18-11-2009, 08:22 AM
சும்மா ஒரு மாற்றத்திற்கு தான்:lachen001:
ஆண்களும் பாவம் தானே இப்படி தானே பெண்களை திட்டுவார்கள்:traurig001:
(ஐயோ எத்தனை பேரு திட்ட போறாங்களோ):fragend005::icon_rollout::rolleyes::eek:

சரண்யா
18-11-2009, 08:26 AM
ஆனாலும் நிறைய support இருக்கும் என்றே நினைக்கிறேன்....