PDA

View Full Version : குடும்பம் என்பது ........



Ravee
18-11-2009, 01:18 AM
குடும்பம் என்பது .......


http://static.flickr.com/3441/3789370019_89035951a8.jpg



குடும்பம் என்பது

ஒன்று சேர்ந்து வாழ்வது

ஒருவர் கீழ் ஒருவராய் அல்ல

ஒரு குடும்பத்துக்கு

அடங்கி போகும் பெண்ணும் சரி இல்லை

அடக்கி ஆளும் பெண்ணும் சரி இல்லை

அனுசரித்து போகும் பெண்ணே சரி

பெண்ணிடம் தீர்மானம் கேட்டால்

குழப்பம் என்றீர்

குழப்பம் இல்லா குடும்பம் இல்லை

விட்டு கொடுக்கும் மனம் இருந்தால்

சில இன்று தீரும், சில நாளை

மற்றவை மீதம் ஒரு நாள்

பத்து வயது ஆனா பின்னே

பிள்ளைகள் என்றாலும்

பிரச்சனைகளை பேசி முடிவு எடுங்கள்

பொறுப்புக்களை பகிர்ந்தளியுங்கள்

வேர்களை ஒரே இடத்தில்

பரப்பும் புளிய மரத்தை விட

ஆலமரமே உறுதி

சரண்யா
18-11-2009, 01:30 AM
பொறுப்புக்களை பகிர்ந்தளியுங்கள்
நல்லா சந்தோஷமாக இருப்போமே....எதற்கு...பொறுப்பு கண்டிப்பா நம்மை தேடி வரத்தான் போகிறதே...
எனினும் இந்த வரிகள் அருமை
விட்டு கொடுக்கும் மனம் இருந்தால்

சில இன்று தீரும், சில நாளை

மற்றவை மீதம் ஒரு நாள்
நன்றிகள்..

குணமதி
18-11-2009, 02:31 AM
விட்டுக்கொடுக்கும் மனம் இருந்தால் சிக்கலே இல்லை.

"தான்மை" - எழும்போதே எல்லாச் சிக்கலும் எழுகின்றன.

ஜனகன்
18-11-2009, 04:29 PM
குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்.குடும்பம் ஒரு கோயிலே.

அமரன்
18-11-2009, 06:56 PM
அழகிய குடும்பத்துக்கு அச்சாரம்
எழுதுகோல் வரைந்த ஓவியம்..

துணை என்றால்
ஒருபடி கீழே என்ற உணர்வு...
இணை என்றால்
சரிசமானம் என்ற உணர்வு..

எது எப்படியோ..
குடும்பத்தில் அதி முக்கியமானது
புரிந்துணர்வு..


பிள்ளைகளுடன் கலந்தாலோசிப்பது, பொறுப்புக் கொடுப்பது போன்றன என்னைத் தொட்டது.

பெரியவர்களிடம் கேட்டு விட்டு சின்னவர்களிடம் கருத்துக் கேட்கும் போது அவர்களிடத்தில் தயக்கம் மேலிட்டு அமைதி காக்கலாம். இதுவே மறுதலையாக, சின்னவர்களிடத்தில் கேட்டு விட்டு அதனை விட முற்றிலும் வேறுபட்ட முடிவை பெரியவர்கள் எடுக்கும் போதும் சின்னவர்களுக்கு ஒருவித தாழ்வு/தோல்வி மனப்பான்மை தோன்றலாம். இறுதி முடிவு சின்னவர்கள் கருத்திலிருந்து தீட்டப்பட்ட தோரணையைக் கொடுக்கும் விதத்தில் உள்ளது முழு வெற்றியின் சூட்சுமம்.

பாராட்டுகள் ரவீ.

Ravee
18-11-2009, 08:59 PM
ஆஹா என் கவிதையை நண்பர்கள் பிரித்து அலசும் போது மனம் சந்தோசப்படுகிறது. என் தகப்பனார் என்ன கற்றுத்தந்தரோ அதையே நானும் கடை பிடிக்கிறேன்

அறிஞர்
18-11-2009, 10:32 PM
குடும்பம்
விட்டுக்கொடுத்தல்
மற்றவருக்கு மதிப்பளித்தல்...
தெரியாதவற்றை சொல்லிக் கொடுத்தல்...
பொறுப்புக்களை சரியாக செய்தல்....
என பல பல...

குணமதி
21-11-2009, 02:44 PM
பெண்ணுக்கு உரைத்தவை ஆணுக்கும் பொருந்தும்!

இருவரும் உணர்ந்தால் இல்லறம் இனிமை!

Ravee
22-11-2009, 07:11 AM
ஆமாம் நான் சொல்லத்தவறிய வரிகள் நீங்கள் எடுத்துக்கொடுத்ததிர்க்கு நன்றி குணமதி அவர்களே

நேசம்
22-11-2009, 08:18 AM
இவையாவும் இரு பாலருக்கும் பொருந்தும்.உனர்வுகளை மதித்தல்,விட்டுகொடுத்தல்,இருக்கும் பட்சத்தில் இல்லறம் இனிதாக அமையும்.