PDA

View Full Version : சக்தி இல்லாத சிவம் சவம் தானே....



Ravee
18-11-2009, 01:09 AM
சக்தி இல்லாத சிவம் சவம் தானே

http://www.pshrc.net/html/cartoon/images/equal_rights_for_all.jpg


ஒருவர் சொன்னார் கதை ஒன்று

கடவுள் போட்ட வித்து இரண்டு

அதில் ஒன்று ஆண்

அடுத்தது அவன் முதுகெலும்பில்

கண்ட பெண் என்று

இது குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட கதை

பொருள் புரிந்து கொள்வீர்

ஆணின் முதுகேலும்பே பெண் என்று

இயக்கம் இல்லாத இயந்திரம் எவ்வளவு

பெரிதாய் இருந்தால் என்ன பயன்

அதை எடைக்கு போடுவதை

தவிர வேறு பயன் இல்லை

சக்தி இல்லாத சிவம் சவம் தானே.

குணமதி
18-11-2009, 02:44 AM
உடலில் இருவரும் சரிபாதி என்று சரியாகவே கூறியிருக்கிறார்கள்!

படமும் அருமை.

நீங்களே வரைந்ததா?

Ravee
18-11-2009, 09:01 PM
இல்லை குணவதி அவர்களே மறுமுறை நானே வரைந்து கண்டிப்பாக வெளி இடுகிறேன் .

samuthraselvam
19-11-2009, 04:39 AM
நல்ல கருத்து.... ரவிக்கு வாழ்த்துக்கள்.... சிவன்கலேல்லாம் உணர்ந்தால் நலமே..!!

praveen
19-11-2009, 05:35 AM
புள்ளி இல்லாத சக்தி சகதி

(புள்ளி என்பதை பொட்டு என்றும், திருமணத்திற்கு பின் வைக்கப்படும் பொட்டு கணவனை குறிக்க என்றும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்).

aren
19-11-2009, 06:36 AM
ஒருவர் இன்றி அடுத்தவர் இல்லை. ஆகையால் அனைவரும் இதை கவனத்தில்கொண்டு வாழ்ந்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும்.

சிறுபிள்ளை
19-11-2009, 07:32 AM
தாங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் ரவி அவர்களே? சிவத்தை அப்படி சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வருகிறது. கடவுள் என்று சொன்னீர்களே அவர் யார்? மனிதனையும் கடவுளையும் ஏன் ஒன்று சேர்க்கிறீர்கள்? கதை என்று சொல்லி கடைசியில் சக்தி இல்லாத சிவன் சவம் என்ற வரியை சேர்த்ததன் காரணம் என்ன? கடவுள் போட்ட வித்து எனும்போது மீண்டும் கடவுளை(சிவனை) தாழ்த்துவது ஏனோ?

Ravee
22-11-2009, 07:06 AM
சிறுபிள்ளை அவர்களே
மற்றவரிடமும் , நமக்குள் இருக்கும் கடவுளை காணமல் தானே இவ்வளவு பிரச்சனைகளும்

பொதுவாக எதுவுமே செயல் பட இரண்டு சக்தி தேவை என்பது இந்துமதத்தின் கோட்பாடு. சக்தி இல்லாத சிவம் சவம் என்பது எனக்கு முன்னாலேயே நிறைய பெரியவர்கள் சொன்னது.