PDA

View Full Version : எங்கிருந்து வரும் சீரழிவு



Ravee
18-11-2009, 12:55 AM
எங்கிருந்து வரும் சீரழிவு



http://static.flickr.com/33/101086030_1434edf27e.jpg




ஒரு நண்பர் சொன்னார்

புதுமை பெண்கள்

இந்த சமுதாயத்தின்

சீரழிவு என்று

இருக்கும் ஆண்கள்

யோக்கியமாய் இருந்தால்

எங்கிருந்து வரும் சீரழிவு

அடிமை பட்டு இருந்தவருக்கு

அண்மையில் கிடைத்த சுதந்திரம்

ஆழம் புரியாமல் சிலர் ஆடினால்

அறிவுறுத்துவோம் விளைவுகளை

உலகம் மாறட்டும்

என்று சொல்ல வேண்டாம்

மாற்றத்துக்கு முதல்அடியை

நீங்கள் எடுத்து வையுங்கள்.


http://newsimg.bbc.co.uk/media/images/40585000/jpg/_40585667_bang.jpg

சுகந்தப்ரீதன்
18-11-2009, 09:14 AM
சும்மா திட்டாதீங்கன்னு கண்மணி அக்கா அடிக்கடி சொல்லுற மாதிரி ஆக்கபூர்வமான ஒரு வேண்டுகோளை உங்கள் கவிதைமூலம் வைத்திருக்கிறீர்கள்..!!

நன்றி ரவி..!!

Ravee
18-11-2009, 09:02 PM
நன்றி சுகந்த பிரீதன் அவர்களே

அறிஞர்
18-11-2009, 10:29 PM
புதுமை என்ற பெயரால்...
சிலருக்கு விடுதலை...
சிலருக்கு கொண்டாட்டம்...
சிலருக்கு கவன சிதறல்.... சீரழிவு....

மாற்றங்கள் தேவை..
சரியான வழியில்...

குணமதி
21-11-2009, 02:49 PM
"குடும்பத்தில்" கண்டவாறு, இருவரும் சம உரிமையர் என்று உணர்ந்து நடந்து கொண்டால் இல்லறம் இனிமையாகும்.

ஜனகன்
21-11-2009, 05:53 PM
கொஞ்சம் புரிந்துணர்வு,
கொஞ்சம் விட்டுக்கொடுப்பு,
கொஞ்சம் பொறுமை இருந்தால் சிறக்குமே குடும்பம் இனிமையாக,சிறப்பாக.:icon_b: நல்ல கவிதை ரவி.:)

Ravee
22-11-2009, 07:09 AM
ஜனகன் அவர்களே நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை .

நேசம்
22-11-2009, 08:13 AM
புதுமை எந்த அளவுக்கு மேம்படுத்துகிறது என்பதை பொறுத்து தான் இருக்கிறது.அறிஞர் அண்ணா சொல்வது மாற்றம் தேவை சரியான வழியில்