PDA

View Full Version : தாக்கரேவின் தாக்கு



அறிஞர்
17-11-2009, 02:26 PM
மும்பை, நவ.16 (டிஎன்எஸ்)

"மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தம்" என்று கருத்து தெரிவித்த இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் பல்வேறு தனியார் தொலைகாட்சிகளுக்கு பேட்டியளித்தார்.

அப்படி வெளியான ஒரு பேட்டியில் சச்சின், தான் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதற்கு பெருமைப்படுவதாகவும், அதை விட தான் ஒரு இந்தியர் என்பதில் மிகவும் பெருமைப்படுவதாகவும், குறிப்பிட்டிருந்தார். மேலும் "மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தம்" என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக சிவசேனா தலைவர் பால் தாக்*கர*ே, சிவசேனா கட்சி பத்திரிகை சாம்னாவில் வெளியிட்டுள்ள செய்தியில், இது அவருக்கு தேவையில்லாத வேலை என்றும் டெண்டுல்கரின் இத்தகைய கருத்து மராட்டிய மக்களின் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், அதனால் சச்சின் அரசியலில் இருந்து விலகி இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பெரிய மனிதர். அவர் கிரிக்கெட்டில் மட்டும் நன்றாக கவனம் செலுத்தட்டும். இது போன்ற விமர்சனங்களை சொல்ல வேண்டாம். மராட்டியத்தில் முன்பு மராத்தி போராட்டம் நடந்து 105 பேர் தங்கள் உயிரை தியாகம் செய்து மும்பையை பெற்ற போது டெண்டுல்கர் பிறந்திருக்கவே மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

aren
17-11-2009, 11:16 PM
தாக்கரே எவ்வளவு குறைவான பார்வை உடையவர் என்பது இந்த விஷயத்திலிருந்து நன்றாகத் தெரிகிறது.

மகாராஷ்டிரா பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாக விளங்குவது அவர்களால் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களும் அவர்களுடைய பொருட்களை வரவேற்று வாங்கி உபயோகிப்பதால் இவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

இப்படி இவர் கத்திக்கொண்டேயிருந்தால் மற்ற மாநிலத்தவர்கள் இவர்கள் மாநிலத்தில் தயாரித்த பொருட்களை நிராகரித்துவிடுவார்கள். அப்படி செய்தால் இவர்கள் மாநிலம் பின்னோக்கிச் சென்று அது பல விளைவுகளைக் கொண்டுவரும் என்று தெரியாமல் பேசுகிறார் தாக்ரே.

சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பார்த்த பிறகும் அவர் இப்படி பேசினால் என்ன செய்வது.