PDA

View Full Version : **யார் அந்த மந்திரவாதி**



இன்பக்கவி
16-11-2009, 11:26 AM
மனிதனை மனிதன்
பயமுறுத்தும்
சித்துவேலை
பில்லி, சூனியம், செய்வினை
பல பெயர்கள்...

ஏமாற்றும் மந்திரவாதிகள்
அவர்கள் பின்னால்
அலைந்து பணத்தை துலைக்கும்
முட்டாள் கூட்டம்
மூடர்கள்..

படித்தவர்கள், பாமரர்கள்
வேறுபாடு இல்லை
அரசியல்வாதிகளும்
நடிகைகளும் விதி விலக்கா??

இரவு பூஜையில்
நிலை மறந்து
நிஜத்தை இருட்டுக்குள்
துலைத்து
வெட்டவெளியில்
பத்திரிகைகளில் படத்தோடு
அவமானப்பட்டு
வாழ்கையை துலைத்து
கதறுபவர்கள்
நிலை பரிதாபம்...

மனிதனை மந்திரத்தால்
மனிதனால் அழிக்கமுடியுமா??
சொல்லுங்கள்
யார் அந்த மந்திரவாதி
எனக்கும் வேண்டும்
முகவரி???

நாங்களும் செய்ய வேண்டும்
சில சூனிய, செய்வினைகளை..
எங்கள் ஊர்
அரசியல்வாதிகளுக்கு...
அது பலித்தால்
அடுத்து மகிந்தாவுக்கு...:fragend005:

அழிக்கும் சக்தி
நாம் அறிந்தால்
அழித்து விடுவோம்
எதிரிகளை...

தெய்வங்களை நம்பும்
மனிதர்களே
உங்களுக்கு
ஏன் இந்த குறுக்கு புத்தி??? :rolleyes::rolleyes:

அறிஞர்
16-11-2009, 02:50 PM
தெய்வ சக்தி.... அழிக்கும் சக்தி என இரு சக்திகளுக்கு யுத்தம்...

தெய்வ சக்தி வலிமையாக ஒருவனிடம் இருந்தால் அழிக்கும் சக்தி அவனை நெருங்காது....

வலிமையற்றவர்களை தாக்கும் அழிவு சக்திகள்... பல வெற்றி பெற்று.. மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது....

அழிக்கும் சக்திகள் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை..

நல்லதை நினைத்து..
நல்லதை செய்வோம்...

இளசு
16-11-2009, 08:31 PM
இங்கிலாந்து, பிரான்சு என கடல்கடந்தும் இந்த ஏமாற்று வியாபாரிகளின் வலை..

எச்சரிக்கை மணிக்கு நன்றி கவிதா123!

சுகந்தப்ரீதன்
17-11-2009, 08:45 AM
உங்களின் ஒவ்வொரு கவிதையிலும் சமூகத்தையும் சக மனிதனையும் நேசிக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனின் கோபமும் அக்கறையும் மிக தெளிவாக தெரிகிறது...!!

மானமார்ந்த வாழ்த்துக்கள் கவிதா123.... அப்படியே சற்று எழுத்துபிழைகளையும் கவனத்தில் கொண்டு தொடருங்கள்..!!

இன்பக்கவி
18-11-2009, 06:32 AM
நன்றிகள் அறிஞர் ஐயாவுக்கும்,
இளசு அவர்களுக்கும்
சுகந்த ப்ரீதன் நன்றிகள் இனி எழுத்து பிழை வராமல் பார்த்து கொள்கிறேன் நன்றிகள்:icon_b:

குணமதி
18-11-2009, 02:21 PM
சொல்ல வேண்டிய நல்ல கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.

ஜனகன்
18-11-2009, 03:37 PM
தெய்வங்களை நம்பும்
மனிதர்களே
உங்களுக்கு
ஏன் இந்த குறுக்கு புத்தி???

மகிந்தாமேல் ஏன் இந்த கொலை வெறி. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்றுகொல்லும் என்று நம்புவோம்.

அமரன்
18-11-2009, 07:19 PM
மந்திரவாதி - மந்தி இரவு ஆதி - பரிணாம வளர்ச்சியின் பின்னோக்கி. (அப்ப இந்த நம்பிக்கை இருந்துச்சோ தெரியல)

மாந்தன் எங்கேயோ போய்விட்டான்
இந்த மாதிரி விசயங்களை மூட்டை முடிச்சாக்கியபடி...
இந்த மூட்டைகள் தொலையும் வரை
இந்த ரக எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டே இருக்கும்..

பாராட்டுகள் கவிதா123.

இன்பக்கவி
07-12-2009, 05:56 PM
நன்றிகள் அமரன்..
ஜனகன்...
இன்னும் இதை நம்பாமல் யாரும் இல்லை